நேற்று காஷ்மீரை சேர்ந்த 25 வயதான மிர் ஃபைஸ் என்ற இளைஞரை ராஜஸ்தான் மாநில அல்வார் பகுதியில் கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இவர் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்
சம்பவம் அறிந்து அவரது சகோதரர் ஃபைசல் தில்லியில் இருந்து ராஜஸ்தான் விரைந்தார். அங்கு சென்ற போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் அறிந்து அதிர்ந்து போனார்.
சம்பவம் நடைபெற்ற அந்த நாளில் மிர் ஃபைஸ் மார்க்கெட்டுக்கு சென்று சில பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது வழிமறித்த மூன்று குண்டர்கள் மிர் ஃபைஸை பைக்கில் பலவந்தமாக ஏற்றிச்சென்று ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து அவரை கட்டாயப்படுத்தி பெண்கள் அணியும் ஆடையை அணிவிக்க செய்துள்ளனர். அந்த ஆடை அணிந்த நிலையில் மார்க்கெட் வீதிகளில் நடந்து வருமாறு மிரட்டியுள்ளனர்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகிலிருந்த ஏடிஎமில் நுழைந்து உடையை மாற்ற முயற்சித்துள்ளார் .. ஆனால் பயந்து திடுக்குற்று வெளியேறினர். அப்போது அங்கு கூடியிருந்த கூட்டம் தனது சகோதரரை பிடித்து கம்பத்தில் வைத்து கட்டி சரமாரியாக தாக்குதல் நடத்தி முகத்திலும் தொடர்ந்து பலமுறை அறைந்துள்ளனர் என்று மிர் ஃபைஸின் சகோதரர் பைசல் தெரிவித்தார்.மேலும் இதே விவரத்தை குறிப்பிட்டு தாக்குதலுக்கு உள்ளான மிர் ஃபைசும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த்துள்ளார்.
மேலும் பைசல் கூறுகையில் காவல்துறையிடம் புகார் அளித்தது நாங்களாக இருந்தாலும் காவல்துறையினர் எங்களை தான் குற்றவாளிகளாக நடத்துகின்றனர். எனது சகோதரரை நேற்று இரவு முழுவதும் காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்துள்ளனர். எனது சகோதரரை சந்தித்த பொழுது அவர் தனக்கு இடது காது முற்றிலுமாக கேட்கவில்லை என்று கூறினர். இது மிகவும் வருத்தமளிக்கிறது அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை கடத்துபவர் என்ற நினைத்து இவரை கட்டி அடித்து இருக்கலாம் . இவர் ஏன் பெண்கள் உடை அணிந்து சென்றார் என்பன போன்ற விஷயங்களை நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான எனது சகோதரராக இருந்தவரின் அவர் வீட்டிற்கே மூன்று முறை சென்று அங்கு சோதனை நடத்தியுள்ளனர் போலீசார். எனது சகோதரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுமோ என்று அச்சமாக உள்ளது என்று பைசல் மேலும் தெரிவித்தார்.
Source: TheQuint