EVM Raj Thackeray

“இ.வி.எம்மிற்கு ஒரு முடிவு கட்டினால்,பாஜகவும் முடிவிற்கு வந்துவிடும்”- ராஜ் தாக்ரேவின் துணிச்சல் பேட்டி!

பாஜகவின் தொடர் தேர்தல் வெற்றிக்கான காரணம் இவிஎம்களில் நடந்த முறைகேடு தான் என்ற குற்றச்சாட்டு மிகவும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. வாக்கு இயந்திர முறையிலான தேர்தலை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் இவிஎம்கள் மூலமாக தேர்தல் நடத்தப்படுவதை ஆதரிப்பது இல்லை .ஆனால் திடீர், திடீர் என இதற்க்கு எதிராக குரல் கொடுத்துவிட்டு பின் உடனே அதைக் குறித்து வாயே திறக்காமல் இருப்பது எதிர்க்கட்சிககளின் வாடிக்கையாக உள்ளது.ஆனால் சிறிய கட்சியாக இருந்தாலும் , சமீபத்திய தேர்தலில் போட்டி இடாமல் இருந்தாலும் இவிஎம்களுக்கு எதிராக கடுமையாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர் மகாராஷ்டிர நவநிர்மான் சேன தலைவர் ராஜ் தாக்கரே ஆவார்.இவர் ஆரம்பத்தில் பாஜக வின் தீவிர ஆதரவாளர்.

இவர் கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து இவிஎம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட  மும்பையில்தான் நடத்தவிருக்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு மமதா பானர்ஜி ஆதரவு வழங்கி உள்ளார். சோனியா காந்தி போன்ற பிற அரசியல் தலைவர்களும் இவிஎம் களுக்கு எதிரான தனது கருத்தை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரபல மும்பை மிரர் என்ற பத்திரிக்கைக்கு ராஜ் தாக்கரே பேட்டி அளித்திருந்தார். அதை கீழே வழங்குகிறோம்.

தற்போது திடீரென ஈவியம் களுக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கிறீர்கள் ?2014 ஆம் ஆண்டின் தேர்தலில் தோல்வி அடைந்தாலும்- பாஜகவை எதிர்த்து நீங்கள் நடத்திய மாநாடு, பொது கூட்டங்களினால் எந்த பயனும் ஏற்படவில்லல என்பதாலா ?

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 250 இடங்களை கைப்பற்றும் என்று கூறியது.. பிறகு 300 என்று கூறினார்கள்.. அவர்கள் சொல்வது போலவே ஜெயிக்கிறார்கள் இவ்வாறு சொல்வது எப்படி சாத்தியமாகும்? இந்த எண்ணிக்கை இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? தற்போது நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் 100 இடங்களை கைப்பற்ற போவதாகக் கூறுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜெயித்தவர்களுக்கும் தோற்றவர்களுகும் இதே நிலையில் தான் உள்ளார்கள்.

பாஜக வினருக்கு கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருந்தால் வாக்குச் சீட்டின் மூலமாக தேர்தலை எதிர் கொள்வதை ஏன் மறுக்கிறது?

நீங்கள் இவிஎம்  முறைகேடு காரணத்தால் தான் பாஜக வெற்றி பெறுவதாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றீர்கள். அப்படியானால் நடந்து முடிந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வென்றுள்ளதே.? அதிலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் அதிக இடங்கள் வென்றுள்ளதே ?

பாஜகவை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தான் மிகவும் குறியாக இருந்தார்கள். ஏனெனில் மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டால் மாநிலங்களில் பின்னாட்களில் நினைத்தவாறு ஆட்சியைப் பிடித்துவிட முடியும். உதாரணமாக கோவா கர்நாடகா போன்ற மாநிலங்களில் என்னவாயிற்று ?.எனவே ஒரு சில மாநிலங்களில் தோற்பதை போன்று ஒரு மாயையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் இவிஎம்  மீது எந்தவிதமான சந்தேகமும் எழாதவாரு காயை நகர்த்தி உள்ளார்கள்.

சமீபத்தில் கர்நாடகாவில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்தது. அதில் எதிர்க்கட்சியினர் பாஜகவை முற்றிலுமாக தோற்கடித்தார்கள். இது எப்படி சாத்தியம்? என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? இனி இங்கு ஜனநாயகம் இல்லை. அமலாக்கத்துறையைக் கொண்டு தாங்கள் நினைக்கும் நபர்களை துன்புறுத்துகிறார்கள். சமீபத்தில் கஃபே காஃபி டே வின் நிறுவினர் விஜி சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசு தரப்பின் தொடர் துன்புறுத்தல்கள்  தான் காரணம். அவர் ஆகுமான ஒரு தொழிலை தானே செய்துவந்தார் ? இந்த அரசு நம் நாட்டிற்கு நல்லதல்ல.


தேர்தல் ஆணையம் , உச்சநீதிமன்றம் என அனைத்து நிறுவனங்களும் பாஜகவின் கடும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளன.

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்தலில் தோற்றவர்கள் அதுகுறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். மக்களுடன் தங்கள் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.பாஜக அமைச்சர் ஆஷிஷ் செலார்  தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் எல்லாம் இவியம் குறித்து பேசக்கூடாது என்று கூறியுள்ளாரே ? (ராஜ் தாக்கரேவின் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) 

இவிஎம்  வைத்து வெற்றிப் பெற்றவர்கள் எல்லாம் மக்களுடன் தொடர்பு அதிகப்படுத்துவதை குறித்தும் வெற்றி தோல்வியை குறித்தும் கருத்து தெரிவிக்கக் கூடாது. அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். வாக்குச் சீட்டின் மூலமாகச் தேர்தல் நடத்தினால், அப்போது தெரியும் பாஜகதான் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று.

இவிஎம்களுக்கு மாற்று என்ன.?

வாக்குச்சீட்டு முறையை தான் . இத்தனை வருடங்களாக வாக்குச்சீட்டு முறையில் தானே தேர்தலை  நாம் நடத்தி வந்தோம்? மக்கள் யாருக்கு ஓட்டு செலுத்துகிகிறோம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள வேண்டும். இது விஷயத்தில் முழுமையான தெளிவு இருக்கவேண்டும். 

வாக்குச்சீட்டு முறை க்கு செல்வது பிற்போக்கு தனம் இல்லையா ? ஆனால் இவிஎம் கள் நவீனமானவை.

எப்படிப்பட்ட நவீனத்தை நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ?  அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நம்மை விட மிகவும் வளர்ந்த நாடுகளில் இன்னும் வாக்குச்சீட்டு முறையை தான் பின்பற்றுகிறார்கள். இவிஎம் மூலமாக தேர்தல் நடத்துவது சிறந்ததாகவும், ஹேக் செய்ய முடியாது என்றும் இருந்தால் ஏன் இந்த நாடுகள்  இதுவரை இவிஎம்களை பயன்படுத்த வில்லை?

தேர்தலை வாக்கு இயந்திரங்கள் மூலமாக நடத்துவதா? அல்லது வாக்குச் சீட்டின் மூலமாக நடத்துவதா ?என்பதை முடிவு செய்வது தேர்தல் ஆணையம் தானே தவிர பாஜக இல்லை.? 

அந்தத் தேர்தல் ஆணையத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அதன் நியமனங்களை யார் செய்கிறார்கள்?அரசாங்கம் தான். எனவே தேர்தல் ஆணையம்  மற்ற எவர் பேச்சையும் கேட்கபோவதில்லை.தேர்தல் ஆணையம் பாஜகவின் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளது. இது மிகவும் தெளிவாக தெரிகிறது.

இப்படிப்பட்ட தேர்தல்களை தான் நடத்துவீர்கள் என்றால், தேர்தலையே நடத்த வேண்டாம்.தற்போது நடப்பது தேர்தல்கள் அல்ல. கணிதம் தான்.

ஏடிஎம்கள் மூலம் ஹேக் செய்ய முடியும் என்று ஏதேனும் ஆதாரம் உள்ளதா? நீங்கள் வெறுமனே குற்றச்சாட்டுகள் மட்டுமே முன் வைக்கிறீர்கள்?

இங்கு கேள்வி ஆதாரம் பற்றியது அல்ல என்பதை உணருங்கள். இவிஎம்களை ஹேக் செய்ய முடியுமா ? இல்லையா? என்பது விவாதப் பொருளாக உள்ளது. ஆனால் வாக்கு சீட்டு முறையில் அவ்வாறு எந்த விவாதமோ, சந்தேகமோ இல்லை. பிறகு ஏன் சந்தேகம் உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.? நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டின் தேர்தலில் மொத்தம் 381 இடங்களில் இவிஎம்கள் பழுதாகின.இதனால் பல்வேறு பிரச்னைகள்.
மேலும் 54 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகின. இந்த வாக்குகள் எல்லாம் எங்கிருந்து வந்தன ? இதைக் குறித்தெல்லாம் யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களை அரசு பின் தொடர்கிறது.

தேர்தல் ஆணையம் உங்களுக்கு என்ன கூறுகிறது ? ஏன் அவர்கள் வாக்கு சீட்டு முறைக்கு  திரும்புவதில்லை?

அது எப்படி அவர்கள் திரும்புவார்கள்? ஆளும் மத்திய அரசாங்கம் இவிஎம் மூலமாகத்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று  தேர்தல் ஆணையம் மீது அழுத்தம் கொடுக்கிறார்கள்.உதாரணமாக ராஜூ ஷெட்டியின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.மக்களே ஒன்றிணைந்து அவரை தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்தார்கள். ஆனால் நான்கு,ஐந்து வாக்குச்சாவடிகளில் அவர் பூஜிய வாக்குகளை பெற்றார். இது எப்படி சாத்தியமாகும்? மக்களே உங்களை அழைத்து வந்து தேர்தலில் போட்டியிட செய்வார்கள். அதற்கான பணமும் செலவு செய்வார்கள்.ஆனால் உங்களுக்கு வாக்களிக்க மட்டும் மாட்டார்களா?

ஆனால் எம்என்.எஸ் இவிஎம்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலில் பங்கு கொண்டதே.? அதில் பல இடங்களில் வெற்றியும் கொண்டதே?

எங்களுக்கு முன்பிலிருந்தே சந்தேகம் இருந்தது. 2009 ஆம் ஆண்டின் தேர்தலில் எங்களுக்கு 13 எம்எல்ஏக்கள் கிடைத்தார்கள். ஆனால் எங்கள் தரவுகளின்படி நாங்கள் 40 இடங்களில் வென்றிருக்க  வேண்டும். தற்போது  பிரச்சனை புறக்கணிக்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.கடந்த 2014 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலிலும், 2014 ஆம் ஆண்டு பிஎம்சி தேர்தலிலும் மிகவும் மோசமான  தேர்தல் முடிவுகளை நாங்கள் சந்திக்க நேர்ந்தது.இது நம்புவதற்கு கடினமான ஒரு விஷயம்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் வெளியேறுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படையாக அரசாங்கத்தின் அழுத்தம் இருப்பதாக கூறுகிறார்கள். நாம் சரியான திசையை நோக்கிப் பயணிக்கவில்லை.

இவிஎம் களில் ஹேக்கிங் செய்ய முடியும் என்று “டெமோ” செய்யப் போகிறீர்களா?

எதற்கு இந்த டெமோ? ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்ள சட்டமன்றத்திற்குள் டெமோ கொடுத்தார்கள். ஆனால் அதனால் என்ன நிகழ்ந்துவிட்டது.? அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுகுறித்து நெறிமுறை ஹாக்கிங்(ethical hacking) போட்டிகளை நடத்துகிறார்கள். இது போன்ற ஒன்றை தேர்தல் ஆணையம் இந்தியாவிலும் அறிவித்து ஏன் இவிஎம்ககள் மீது வெளிப்படைத்தன்மையை உண்டாக்க கூடாது?வாக்குச்சீட்டு முறை தான் மிகவும் வெளிப்படையானது. செலவிலும் குறைந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் எதற்கு உங்களுக்கு ?  20 லட்சம் வாக்கு இயந்திரங்கள் காணாமல் போய் விட்டதாக செய்தி வெளியானதே. அவை எங்கு சென்று விட்டன?

இவிஎம் களில் விவிபேட் மூலம் சரி பார்க்கும் வசதி உள்ளதே ?

இல்லை நமக்கு இந்த இவிஎம்ககளே தேவையில்லை. மக்கள் பொத்தானை அலுத்துகிறார்கள். ஆனால் அதற்கான காகித அச்சு பொறி வெளிவருவதில்லை.இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகின்றன.ஆனால் வாக்குச்சீட்டு முறை உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. காகிதத்தை எடுத்து அதில் முத்திரையிட்டு, பெட்டியில் போட்ட பிறகு மக்கள் முன்னிலையில் பெட்டியைத் திறந்து வாக்குகளை எண்ணுவது என்ற இந்த முறைதான் சிறந்தது.

நீங்கள் இதுகுறித்து பாஜகவை அணுகினீர்களா?

 இல்லை. நான் அணுகவில்லை. ஆனால் அவர்கள் தான்  இதற்கு முன்வர வேண்டும். இது ஏதோ அரசியல் கட்சிகள் சம்பந்தமான ஒரு விஷயமல்ல. இது நாட்டின் ஜனநாயகம் தொடர்பானது. ஒருவேளை பாஜக வாக்குச்சீட்டு முறையின் மூலமாக வெற்றி பெற்றால் நானே தனிப்பட்ட முறையில் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பேன்.

குறிப்பு:
மேற்குறிப்பிட்ட பேட்டி வெளியானது தான் தாமதம்.. தற்போது ராஜ் தாக்ரேவிற்கு பழைய வழக்கு ஒன்றில் அமலாக்கதுறை வியாழக்கிழமை (22-8-19) விசாரணைக்கு ஆஜராகமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.