Delhi Pogrom Hindus Pakistan

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !

கராச்சி: கடந்த மாதம் இந்திய தலைநகரில் பாசிஸ்டுகளின் வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்துச் சென்றனர். மேலும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை (இன்று) ஆரவாரமின்றி மிகவும் அமைதியான முறையில் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிறுபான்மையினர்:

210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் 2 சதவிகிதம் இந்துக்கள் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் தெற்கு சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆண்டு தோறும் ஹோலி பண்டிகையின் போது பாகிஸ்தானில் வாழும் இந்து சமூகத்தினர் வெகுவிமர்சையாகவும் வண்ணமயத்துடனும் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஹோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த ஆண்டு இந்தியாவின் தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக பாசிச பயங்கரவாதிகள் நடத்திய இனப்படுகொலையில் பல அப்பாவி முஸ்லிம்களும், ஒரு சிறிய அளவில் இந்துக்களும் கொல்லப்பட்டனர். இதனை முன்னிட்டு பாகிஸ்தானில் வாழும் இந்து சமூகம் இந்த ஆண்டின் கொண்டாட்டங்களை குறைத்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்:

எங்கள் முஸ்லீம் சகோதரர்கள் ஒடுக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். டெல்லியில் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது, இதனை முன்னிட்டு தான் நாங்கள் இன்று பேரணியை நடத்துகிறோம்.” என்று அணிவகுப்பின் அமைப்பாளர்களில் ஒருவரான பண்டிட் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஹோலி திருவிழாவின் போது நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இம்முறை ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் இந்து சமூக மக்கள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/rupagulab/status/1236835575505620994

“மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தல், வண்ணங்களை வீசி மகிழ்தல் மற்றும் இசை வாசித்தல் போன்ற எங்கள் முக்கிய நிகழ்வுகளை நாங்கள் ரத்து செய்துள்ளோம்”என்கிறார் பாகிஸ்தானில் வாழும் குமார்.

Also Read: பாகிஸ்தான்: இந்துக்கள் மனம் புண்படும்படி பேனர் வைத்தவர், வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பின்பும் பதவியில் இருந்து அதிரடி நீக்கம் !

மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்:

“இந்தியாவில் வாழும் மத சிறுபான்மையினரை மோடியும் அவரது அரசாங்கமும் மோசமாக நடத்திவருவதை தடுக்க ஐ.நா மற்றும் உலக சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க இந்தியாவில் உள்ள எங்கள் இந்து சகோதரர்கள் துணைநிற்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

எங்கள் முஸ்லீம் சகோதரர்கள் எங்கள் பண்டிகைகளுக்கு ஒருபோதும் தடையாக இருப்பதில்லை, மாறாக அவர்கள் தான் எப்போதும் எங்களை பாதுகாத்து வருகின்றனர்,சொல்லப்போனால் எங்களுடன் இணைந்து அவர்களும் கொண்டாடுகின்றனர்” என்கிறார் குமார்.

மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் “இந்தியாவின் முஸ்லிம்கள் மோசமான சட்டத்திற்கு எதிராகவே போராடி வருகின்றனர்” என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உள்ளூர் தலைவர் டாக்டர் ராகேஷ் மோட்டியானி கூறினார்.

“மோடி அரசு, மோசமான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் அவர்களின் போராட்டத்தை தடுக்க முயன்றது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று கராச்சி பிரஸ் கிளப்பில் மோட்டியானி கூறினார்.

பாகிஸ்தானின் சாமானிய இந்து மக்களின் குரல்:

இந்திய முஸ்லிம்களை தங்கள் நாட்டின் சம குடிமக்களாக கருத வேண்டும் என பேரணியில் பங்கு கொண்ட சாந்தி தேவி (60 வயது) கூறினார்.

“இந்தியாவில் முஸ்லிம்கள் சித்திரவதை செய்யப்படுவது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அனைவருமே மனிதர்களாக கருதப்பட வேண்டும், அப்போதுதான் அமைதி நிலவும், சமூகம் செழிக்கும். நாம் அனைவருமே மனிதர்கள், தத்தம் நாடுகளில் நிம்மதியாக வாழ உரிமை உண்டு” என்று அவர் மேலும் கூறினார்.