உ.பியிலுள்ள ஃபரித்பூர் காஜி என்னும் ஊரைச் சேர்ந்த 7 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ள விபரம்: கடந்த மே 8 ஆம் தேதி கிட்டத்தட்ட நோன்பு திறக்கும் இஃப்தார் சமயத்தில் வந்த காவல்துறையினர் அவர்களை வசை பாடியதோடு, அவர்களது வீட்டுகளையும் தாக்கினார்கள். குறிப்பாக சமையல் பொருட்களை சேதப்படுத்தி, பாத்திரங்களை உடைத்து, மீதமிருந்த உணவுப் பொருட்களை சிதறடித்தனர். மேலும் அங்கிருந்த ஆண்களைத் தாக்கியதோடு, 3 பேர்களை கைது செய்து சில கி.மீ தூரத்திலுள்ள பிஜ்னோர் நகரிலுள்ள கோட்வாலி காவல் […]
இந்திய அரசை இஸ்லாமிய வெறுப்பை உமிழும் அரசாக அறிவிக்க, அமெரிக்காவிலுள்ள செயிண்ட் பால் நகரக் கவுன்சில் முடிவு!
“இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டி, இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் கொள்கை”யை இந்தியா பின்பற்றுவதைக் கண்டிக்கும் தீர்மானத்தை இரு வார கால தாமதத்திற்குப் பிறகு செயிண்ட் பால் நகர நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்ஸிலின் மின்ன சோட்டா மாகாணப் பிரிவு, மிட்செல் ஹேம்லின் சட்டப் பள்ளியின் ‘ இன அழிப்பில்லா உலகம்’ மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற இந்நடவடிக்கையை இந்து அமெரிக்க நிறுவனம், மின்னசோட்டாவின் இந்திய சங்கம், உலகளாவிய ஒடுக்கப்பட்டோருக்கான கூட்டணி ஆகியவை எதிர்த்தன. […]
‘முஸ்லிம் என நினைத்து கொடூரமாக தாக்கிவிட்டோம்’ – வழக்கறிஞரிடம் போலீசார் மன்னிப்புக் கேட்ட லட்சணம்!
” முஸ்லிம் என நினைத்து அடி வெளுத்து விட்டோம்”, இந்து வழக்கறிஞரிடம் மத்தியப் பிரதேச போலீஸ் மன்னிப்புக் கேட்ட லட்சணம்.. “இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறையின் கடும் போக்கு” ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது பாசிச பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்திலுள்ள பெத்தூல் எனும் நகரில் நடந்த சம்பவம். சுமார் 10 ஆண்டுகளாக முன்னணி தினசரிகளில் பத்திரிக்கையாளராக போபாலில் பணியாற்றிய தீபக் பந்த்லே என்பவர் 2017-ல் தான் பெத்தூலில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். இச்சம்பவத்தில் […]
மருத்துவர் கைகளைக் கட்டி, ரோட்டில் இழுத்துச் சென்ற விசாகபட்டிணம் போலீஸ்!
விசாகபட்டிணம்: இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மயக்கவியல் துறை மருத்துவர் சுதாகரை சங்கிலியால் கட்டி, முரட்டுத்தனமாக ரோட்டில் இழுத்துச் சென்றனர் விசாகபட்டிணம் போலீஸார். “மருத்துவர்களுக்கு ‘N95 முகக்கவசங்கள்: போதுமான அளவு வழங்கப்படவில்லை; ஒரு முகக்கவசத்தை 15 நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது”, என கடந்த மார்ச் மாதம் பகிரங்கப்படுத்தியதற்காகவே அம்மருத்துவர் இவ்வாறு பழிவாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், “சிறிது காலமாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுதாகர் நெடுஞ்சாலையில் நின்று பிரச்சினை செய்ததோடு, தடுக்கச் சென்ற காவலர்களிடம் […]
தெலுங்கானா: பழங்குடியின கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க காடுகளின் வழியே 70 கி.மீ பயணித்த மருத்துவர் முஹம்மது முக்ரம் !
தெலுங்கானாவில் பிரசவ வலியில் துடித்த பழங்குடியின கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக காடுகளின் வழியே 70 கி.மீ காரில் கொண்டு சென்ற மருத்துவர். முஹம்மது முக்ரம் ஒரு மனிதநேயமிக்க மருத்துவர். இவர் பிரசவ நேரத்தை நெருங்கிய ஒரு பழங்குடியின கர்ப்பிணியை , ஒரு ஆஷா(ASHA) பணியாளரின் உதவியோடு தனது காரில் ஏற்றி காடுகளின் வழியாக கொண்டு சென்று உரிய மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் நடக்க தக்க தருணத்தில் உதவியுள்ளார். அதிகப்படியான கொரோனா தொற்று நோயாளிகளைக் கையாளுவதில் பெரும் சிரமத்தை […]
வக்ஃபு வாரியம் சார்பாக 51 கோடி கொரோனா நிதி உதவி; குருவாயூர் தேவஸ்தானம் 5 கோடி நிதி உதவி – சங்கிகள்* எதிர்ப்பு !
இந்தியா முழுக்க உள்ள வஃபு போர்டுகள் சார்பாக PM Cares கொரோனா நிவாரண உதவிக்கு ரூபாய் 51 கோடிகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அலிகார் பல்கலை சார்பாக சுமார் 1.5 கோடியும், அலிகார் பல்கலை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 100 கொரோனா படுக்கைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் தர்கா நன்கொடை: அஜ்மீர் தர்கா சார்பாகவும் உபி மற்றும் டெல்லியின் சுற்றுப்புறத்தில் இருக்கும் தர்காக்களின் சார்பாகவும் (தர்கா கமிட்டி — காதீம்ஸ் மற்றும் ஷஜ்ஜதா நஸூன்) கணிசமான (1.4 கோடி) தொகை […]
பாப்ரி பள்ளி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளிப்போருக்கு வருமான வரி விலக்கு; மோடி அரசு அறிவிப்பு !
பொதுவாக வருமான வரிச்சட்டம் பிரிவு 80G-ல் இருந்து அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொண்டு நிறுவனமோ அல்லது மத சம்பந்தமான அறக்கட்டளையோ வருமான வரிச்சட்டம் பிரிவு 11 மற்றும் 12-ன் கீழ் விண்ணப்பித்தால் மட்டுமே அவற்றின் நன்கொடையாளர்களுக்கு 80G பிரிவின் கீழ் வருமானவரிச் சலுகை அளிக்கப்படும். எனினும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அமைக்கப்பட்ட “ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா” என்ற அறக்கட்டளைக்கு கொடையளிக்கும் நன்கொடையாளர்களுக்கு 2020-21ஆம் நிதியாண்டிலிருந்து வருமானவரிவிலக்கு அளிக்கப்படும் என […]
காட்டுப்பகுதியில் சாலையோரமாக தொழுது கொண்டிருந்த ஊமை மனிதரை கற்களாலும், கோடாரியாலும் தாக்கிய பாசிஸ்டுகள்!
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம், சக்ரேபைலு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வாய் பேச முடியாத முஸ்லிம் வயோதிகர் ஒருவர், தொழுகை நேரம் வந்ததும், ரோட்டோரமாக ஒதுங்கி எவருக்கும் இடையூறின்றி தொழுகையில் ஈடுபட்டுள்ளார், அப்போது அப்பக்கமாக வந்த 5 பாசிச பயங்கரவாதிகள் அந்த வயோதிகர் தொழுது கொண்டிருக்கையில் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். கற்களாலும் தாக்கியுள்ளனர். அவரது தொப்பியை கழற்றி எரிந்து அவரது மேலாடையையும் கிழித்து எறிந்துள்ளனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு […]
அர்னாப் கோஸ்வாமியை விசாரித்த போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி; கவலையில் வலதுசாரிகள் ..
முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பவராகவும், மோடியின் பக்தராகவும் விமர்சிக்கப்படும் அர்னாப் கோஸ்வாமி, ரிபப்லிக் தொலைக்காட்சி நிறுவனர் ஆவார். இந்த சேனலின் மூலம் விவாதம் நடத்துகிறேன் என்ற பேரில் அனுதினமும் கலவரத்துக்கு இணையான சூழலை ஸ்டுடியோவுக்கு உள்ளேயே உருவாக்கும் திறன் படைத்தவர் அர்னாப், சங்கிகளின் ஹீரோவாக அறியப்படுபவர். சமீபத்தில் மஹாராஷ்டிரா பால்கர் கும்பல் கொலை வழக்கில் அர்னாப் கூறிய விஷ கருத்துக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த அவரது மிகவும் மட்டமான கருத்துக்களுக்காக கோஸ்வாமியை ஏப்ரல் […]
10 ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்ற கொடூரம் ..
விழுப்புரம் சிறு மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அதே கிராமத்தில் அதிமுக கிளை கழக செயலாளர் கலியபெருமாள் முன்னாள் கவுன்சிலர் முருகன் இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறார்கள். 95 சதவிகித தீக்காயத்துடன் போராடிய சிறுமி ஜெயஸ்ரீ இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்க செய்யும். கோவை வேளாண் கல்லூரி மாணவியர் மூவரை தர்மபுரி கொன்றவர்கள் அதிமுகவினர் சிலர், அதற்கடுத்த கொடிய சம்பவம் இது. சிறுமியை […]
முதல்வர் உதவி கேட்க, ஏய்ம்ஸ் தலைவரையே குஜராத்துக்கு அனுப்பி வைத்த அமித்ஷா; பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு?
கொரோனாவில் குரோதத்தை காட்டுகிறதா மத்திய அரசாங்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஹமதாபாத்: பெருகி வரும் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பெரும் அளவு பொருளாத ரீதியாகவும் , உடல் நல ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இந்நிலையில் ஏய்ம்ஸ் தலைவரை குஜராத்துக்கு அனுப்ப ஆர்டர் போட்டுள்ளார் அமித்ஷா. நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து குஜராத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. குஜராத்தில் இதுவரை 8,194 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் […]
புர்காவுடன் டெல்லி கோவில், பள்ளி, குருத்வாராக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பெண்; அர்ச்சகர்கள் பாராட்டு!
கடந்த மூன்று மாதங்கள் வரையிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த நிலையில் மதக்கலவரங்களுக்கும் குறைவில்லாமல் பதற்றமாக போய்க்கொண்டிருந்த வடக்கு டெல்லியின் சூழல் இப்போது சற்றே தணிந்து வருகிறது. 34 வயதான இப்ரானா சைஃபி என்கிற பெண், தன்னோடு மேலும் 3 புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களை வைத்துக்கொண்டு, வடக்கு டெல்லியின் அனைத்து கோவில்கள், மஸ்ஜிதுகள், குருத்வாராக்கள் மற்றும் சர்ச்சுகளில் நுழைந்து கொரோனா பரவாமல் தடுக்கும் கிருமிநாசனி தெளித்து வருகிறார். கொரனா வாரியர்ஸ் என தனது குழுவிற்கு பெயர் […]
தன் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர் ஜாஹித் !
டெல்லி AIIMS மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஜாஹித் என்ற மருத்துவர் ஒரு கொரோனா நோயாளியைக் காக்கும் போராட்டத்தில் தனது அசாதாரணமான தீரத்தையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கொரோனா நோயாளியை தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றி அனுமதிக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தபோது அவரால் நோன்பைத் திறக்க கூட நேரம் ஒதுக்கமுடியவில்லை. அந்நோயாளிக்கு ஏற்கனவே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மருத்துவர் ஜாஹித் அந்நோயாளியைக் காண ஆம்புலன்ஸிற்குச் சென்ற போது தற்செயலாக அந்நோயாளிக்கு சொருகப்பட்டிருந்த செயற்கைச் சுவாசக் குழல் […]
டெல்லி: ஈவு இரக்கமின்றி இம்ரானை தாக்கிய டெல்லி போலீஸ்; பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்து தாக்கிய கொடூரம் !
டெல்லி சாகர்பூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் இம்ரான், ஏசி பழுதுபார்ப்பவர். இவரை கடந்த புதன்கிழமையன்று பாசிச வெறி பிடித்தவர்களும் டெல்லி போலீஸ் ஒருவரும் இணைந்து ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கும் காணொளி வைரல் ஆகியுள்ளது. இவர் டெல்லியில் உள்ள ஒரு பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியே நடப்பதை பார்த்து தான் தன்னை நோக்கி மிரட்டும் தொனியில் முன்னேறுகிறார் காவலர் என பயந்து ஓடி உள்ளார் இம்ரான். இம்ரானை […]
உபி: காசி விஸ்வநாத் கோவில் அர்ச்சகர்கள் நடுரோட்டில் கூட்டமாக ஒன்றுகூடி பூஜை; வழக்கு பதியப்படுமா?
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோரக்பூர் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் உபி மாநிலத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாத கோவில் அர்ச்சகர்கள் நடுரோட்டில் கூட்டமாக பூஜை செய்தனர். கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. மத்திய அரசு மத ரீதியான எந்த ஒரு ஒன்று கூடலுக்கும் தடை விதித்துள்ள நிலையில் இவ்வாறு சட்ட விரோதமாக பல […]