இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி இருக்கும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி சார்புநிலையை குறைப்பதில் முந்தைய அரசாங்கங்கள் கவனம் செலுத்தியிருந்தால் இன்று நடுத்தர மக்கள் சிரம படும் நிலை உண்டாகி இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியா தனது எண்ணெய் தேவைக்காக 85%, எரிவாயு தேவைக்காக 53% க்கும் அதிகமாக இறக்குமதி செய்தது என மோடி குறிப்பிட்டார். தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக எரிபொருள் விகிதங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து, […]
உ.பி : கை, கால் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகளின் உடல்கள் சடலமாக மீட்பு..
தலைமை பூசாரி ஆளும் மாநிலமான உபி யில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் உபி உன்னாவோவில் புதன்கிழமையன்று வயலில் இறந்த நிலையில் இரு தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், உ.பி. காவல்துறை இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாபுரா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. […]
மே. வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை காக்க சிறப்பு படை குழுவை அமைப்போம் – அமித் ஷா ..
மேற்கு வங்கத்தில் டி.எம்.சி அரசாங்கம் “ஊழல் மற்றும் சிண்டிகேட் கலாச்சாரத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார், பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆம்பான் நிவாரண நிதி ஊழல் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்போம் என கூறினார். பாஜகவின் ‘பரிவர்த்தன் யாத்திரை’ முதலமைச்சர், எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் என எவரையும் மாற்றுவதற்காக அல்ல, மாறாக பிற நாட்டவர் சட்டவிரோதமாக நம் நாட்டினுள் ஊடுருவுவதை முடிவுக்குக் கொண்டு வந்து மேற்கு வங்கத்தை […]
திஷா ரவி கிறிஸ்தவர் என பரப்பும் வலது சாரிகள்; யார் இந்த திஷா ?
பெங்களூரைச் சேர்ந்த 21 வயது மாணவி திஷா ரவி பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சார ஆவணத்தினை பிப்ரவரி 4-ம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த ஆவணத்தினை தயாரித்ததில் திஷா ரவி-க்கு பங்கு இருப்பதாக குறிப்பிட்டு அவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. சுவீடனில் திஷா: 2018-ம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்காக […]
நேபால், இலங்கையிலும் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டம் – திரிபுரா முதல்வர் அறிவிப்பு !
ஈஸ்ட் மோஜோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜக அரசாங்கங்களை அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் வென்ற பிறகு பாஜக கட்சியை அண்டை நாடுகளிலும் நிறுவி அங்கும் அரசாங்கங்களை அமைக்க பாஜக விரும்புகிறது என கடந்த சனிக்கிழமையன்று அமித் ஷா திரிபுராவுக்கு சென்று இருந்த போது, ரவீந்திர சதாபர்ஷிகி பவனில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தில் அமித் ஷா கூறியதாக டெப் கூறினார். நாங்கள் […]
பிரதமர் மோடி புகைப்படம், பகவத் கீதையுடன் கூடிய செயற்கைக்கோள் விரைவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ..
பகவத் கீதையின் நகல், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உட்பட 25,000 நபர்களின் பெயர்கள் சதீஷ் தவான் செயற்கைக்கோள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி (முனைய துணைக்கோள் ஏவுகலம்) மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். தி இந்துஸ்தான் டைம்ஸ் கருத்துப்படி, மாணவர்களிடையே விண்வெளி அறிவியலை ஊக்குவிப்பதற்காக உள்ள “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற அமைப்பு இந்த நானோ சாட்லைட்டை தனிப்பட்ட முறையில் உருவாக்கியுள்ளது. மூன்று முக்கிய காரணங்களுக்காக இது விண்ணில் […]
‘தேசத்துரோக வழக்கில் மோடி விசாரிக்கப்பட வேண்டும்!’- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் கருத்து …
பாசிச சித்தாந்தந்தை எதிர்கொள்ளும் விதமாக திரு,கண்ணன் கோபிநாத் அவர்கள் தனது ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்தார். ராஜினாமா செய்தது முதல் பாசிச சித்தாந்தங்களுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் துணிச்சலான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “பிரதமர் மோடி அவர்களே, இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்ததற்காக, பிறகு இது குறித்து நாட்டு மக்களை ஏமாற்றியதற்காகவும் தேசத் துரோக வழக்கில் நீங்கள் விசாரிக்கப்பட வேண்டும், விசாரிக்கப்படுவீர்கள்.” அறிந்து கொள்ளுங்கள். […]
கோ பேக் மோடி ட்வீட் எதிரொலி-நடிகை ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் புகார்!
மோடி தமிழகம் வருகையின் போது , பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஓவியாவும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்வீட் செய்தார். இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் என்பவர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்துள்ளார். “பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மையை காப்பதில் முக்கியமான பங்கு உடையவர். பிரதமர் தமிழகம் வரும்போது சமூக வலைதளத்தில் ‘கோ பேக் மோடி’ என கருத்தை பதவிட்டு பொது […]
ஊடகவியலாளர் சித்திக் கப்பனுக்கு ஐந்து நாள் பெயில் வழங்கியது உச்சநீதிமன்றம் ..
பிப்ரவரி 15, திங்கட்கிழமை: பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு கேரளாவில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க உச்சநீதிமன்றம் ஐந்து நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், அவர் தனது தாயுடன் வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் தனது சொந்த ஊரான கேரளாவின் மலப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மயக்கமடைந்ததால் அவருடன் பேச முடியாமல் போனது. தலைமை பூசாரி ஆளும் உபி மாநிலத்தில் ஹத்ராஸ் […]
வேளாண் சட்டங்கள் குறித்து விளக்க 8 கோடி ரூபாயை செலவழித்த மோடி அரசு!
மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சாப், உபி மற்றும் ஹரியானா மாநில விஷசாயிகள் கோடி கணக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்துள்ளனர். விவசாயிகள் அனைவரும் ஒருமித்த குரலாக புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மோடி அரசு செவிசாய்த்தபாடில்லை. எனினும் மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் நல்ல […]
சிரியாவிற்கு 2000டன் அரிசியை வழங்கும் இந்திய அரசு..
சிரியா நாட்டில் உள்நாட்டு போர் , வன்முறைகள், உள்நாட்டு குழப்பம் என தொடர்வதால், அந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கடும் ஏழ்மையில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா சிரியாவிற்கு 2,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்க முன்வந்துள்ளது. சிரியா நாடு, இந்திய அரசிடம், அவசரகால மனிதாபிமான உதவி கோரியதன் அடிப்படையில் இந்த அரிசி வழங்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1000 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது: சிரியாவின் உள்ளூர் நிர்வாக […]
‘நீதிமன்றத்திற்கு சென்றால் தீர்ப்பு கிடைப்பதில்லை; நீதித்துறை மோசமான நிலையில் உள்ளது’- ரஞ்சன் கோகோய் !
மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், ரஞ்சன் கோகோய் இந்திய நீதித்துறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். “ஒருவர் இந்திய நீதிமன்றங்களுக்குச் சென்றால் அவர் தீர்ப்புக்காக காலவரையறை இல்லாமல் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். “ஒருவர் நீதிமன்றத்தை அணுகுவதால், அவரின் தனிப்பட்ட விவகாரங்களை பொது தளத்தில் அம்பலப்படுத்தி கொள்வதை விட வேறு ஒன்றும் நடப்பதில்லை, தீர்ப்பு கிடைப்பதில்லை. . இந்தியாவில் நீதித்துறை “மோசமான” நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். “5 டிரில்லியன் டாலர் பொருளாதாரேம்ரம் […]
கூகுல் சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த உபி காவல்துறை !
பிரதமர் நரேந்திர மோடியை குறித்து வீடியோ ஒன்றில் அவதூறு உள்ளதாக கூறி, உத்தரபிரதேச வாரணாசியில் உள்ள காவல்துறையினர் கடந்த வாரம் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் மற்றும் 17 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர், பிறகு இது குறித்த செய்தி வெளியானதும் மேற்குறிப்பிட்டோரின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் இருந்து காவல்துறை அதிகாரிகள் நீக்கினர். இந்த வழக்கில் “சம்பந்தப்படவில்லை” என்று கண்டறியப்பட்ட பின்னர் சுந்தர் பிச்சை மற்றும் மூன்று கூகிள் உயர் அதிகாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன, […]
ராமர் கோவில் கட்டுமான நிதிக்கு வரிவிலக்கு ஆனால் பாபர் மசூதிக்கு வரிவிலக்கு இல்லை, ஏன்? – ரவிக்குமார் எம்பி கேள்வி!
‘பாபர் மசூதி கட்டும் அமைப்புக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன்? ‘ என நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். “ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு நிதி செலுத்துவோருக்கு வருமானவரி சட்டம் 80G இன் கீழ் ஏற்கனவே வரி விலக்கு அளித்துள்ள மத்திய பாஜக அரசு அதே அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள‘இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷனுக்கு ‘ இன்னும் வரிவிலக்கு அளிக்கவில்லை. “இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்களைக் கூறுங்கள்” […]
நீதிபதிக்கே மறுக்கப்படும் நீதி – அகில் குரேஷி என்பதாலா ?!
நீதிபதி அகில் அப்துல் ஹமீது குரேஷி அவர்கள் தற்போது திரிபுரா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டிய இவரை திட்டமிட்டு பழிவாங்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது என்பது விமர்சனம். பின்னணிக் காரணம் ?: அகில் அப்துல் ஹமீது குரேஷி குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியாகப் பதவி வகித்த போது, 2010-ல் நாடறிந்த “சொராப்தீன் போலி என்கவுண்டர்” வழக்கில் அமீத்ஷாக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால், அமீத்ஷாவை “போலீஸ் கஸ்டடி”க்கு அனுப்பினார். […]