Amit Shah BJP

நேபால், இலங்கையிலும் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டம் – திரிபுரா முதல்வர் அறிவிப்பு !

ஈஸ்ட் மோஜோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜக அரசாங்கங்களை அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் வென்ற பிறகு பாஜக கட்சியை அண்டை நாடுகளிலும் நிறுவி அங்கும் அரசாங்கங்களை அமைக்க பாஜக விரும்புகிறது என கடந்த சனிக்கிழமையன்று அமித் ஷா திரிபுராவுக்கு சென்று இருந்த போது, ரவீந்திர சதாபர்ஷிகி பவனில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தில் அமித் ஷா கூறியதாக டெப் கூறினார்.

நாங்கள் மாநில விருந்தினர் மாளிகையில் கூடியிருந்த போது இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக தனது அரசாங்கத்தை அமைத்துள்ளதாக அஜய் ஜம்வால் (பாஜகவின் வடகிழக்கு மண்டல செயலாளர்) கூறினார், அதற்கு பதிலளித்த ஷா, ” இன்னும் இலங்கையும் நேபாளமும் எஞ்சியுள்ளதாக கூறினார். இலங்கையில், நேபாளத்தில் கட்சியை விரிவுபடுத்தி, அரசாங்கத்தை அமைப்பதற்காக அங்கும் வெற்றிபெற வேண்டும், ” என்று அமித் ஷா கூறியதாக கிழக்கு மோஜோ டெப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சிபிஐ (எம்) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்து முதலமைச்சருக்கு எந்த புரிதலும் இல்லை. அமித் ஷாவின் பேச்சு, டெப் கூறியது போல இருப்பின்,வெளிநாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக அது அமைந்து விடும் என்று கூறினார்.