NPR

ஏப்ரல் மாதம் NPR கணக்கெடுப்பு என அறிவிப்பு; தீர்வென்ன? – அறிவுபூர்வமாக விளக்குகிறார் ஜைனுலாபிதீன்.

தமிழக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ள ஒருவர் பிஜெ எனும் பி.ஜைனுலாபிதீன். இவர் சமீபத்தில் NPR குறித்து பேசிய உரை ஒன்று பெரும் அளவில் கவனத்தை பெற்றுள்ளது. உரையின் முக்கிய பகுதியை எழுத்து வடிவில் தருகிறோம்.

NRC CAA க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்களும் பேரணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரங்கள் வரை இந்த போராட்டங்கள் வீரியம் அடைந்து இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் இதற்காக போராடுகிறார்கள் என்று தெரிந்தும் மத்திய அரசோ மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நம்முடைய போராட்டத்தை அவர்கள் துளிஅளவும் பெரிதுபடுத்தவில்லை. இப்படியே சென்றால் நம்முடைய போராட்டம் வீரியம் குறைந்து போகிவிடும்.

போராட்ட பாணியை மாற்ற வேண்டும்:

நாம் இந்த போராட்ட ஸ்டைலை மாற்ற வேண்டும், இப்படியே நாம் போராடிகொண்டு இருப்பதால் எந்த பலனும் அரசிடத்தில் இருந்து பெறமுடியாது. இப்போ இருக்கிற போராட்ட ஸ்டைலை மாற்றி அமைத்தால் தான் NRC CAAக்கு தீர்வு காணமுடியும். காந்தி வெள்ளையர்களை விரட்டுவதற்காக உப்பு சத்தியாகிரகம் நடுத்தினார். அந்த வழியை நாமும் செய்ய வேண்டும் அதுவும் ஜனநாயக அடிப்படை தான்.

Image result for gandhi satyagraha
Champaran Satyagraha. Source: PIB

நாம் வன்முறை செய்யபோவதில்லை அரசுக்கு நெருக்கடி தரபோகிறோம். அரசுடைய பொருளாதார நெருக்கடி தந்தால் மட்டும் தான் தமிழகத்தில் இந்த எடப்பாடி அரசு ஏப்ரல் மாத நடத்துகிற இந்த NPRயிலிருந்து பின்வாங்குவார்கள்.

அதற்கு செய்யவேண்டியது என்னவென்றால் அரசு அலுவலகங்களை முற்றுகையிடவேண்டும். ஒவ்வொரு அரசு அதிகாரிகளையும் பணிக்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இதை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு அரசு அதிகாரிகளை வேளையில் அமர்த்தாமல் தடுத்தால் மாநிலமே கொந்தளித்து போகும். அடுத்தது நம்மை தடி அடி நடுத்துவார்கள் கைது செய்வார்கள். இது மாதிரி தொடர்ச்சியாக நாம் செய்து கொண்டே வரவேண்டும்.

ஒரு நாளைக்கு 200 நபர்கள் என்றால் மறுநாள் 200 நபர்கள் இப்படியே செய்து வந்தால் அரசு ஊழியர்களின் வேளையும் பாதிப்படையும் நம்மை அடைத்து வைக்க இடமும் இருக்காது. நமக்கு சாப்பாடு போடும் செலவுகளும் அதிகாரிக்கும் இதுனால் மாநிலத்தில் பொருளாதார சரிவு ஏற்படும். இதை அப்படியே உலகநாடுகளின் கவணத்திற்கு இலகுவாக சென்றடையும். அமைதியாக போராடிய மக்களை அரசே இப்படி வன்முறை செய்கிறது என்று இதிலிருந்து அப்போது தான் பின்வாங்குவார்கள். இதை செய்வதற்கு எல்லா மக்களாலும் முடியாது. காவல்துறை, தடியடி சிறைவாழ்க்கை இதற்கு சத்திபெற்றவர்கள் ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் முன்வரவேண்டும்.

Image result for resist raise

இந்த தியாகத்தை செய்வதற்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பொருளாதார வசதிபடைத்தவர்களும் சிறை செல்லும் குடும்பத்தார்களின் செலவிற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நம்ம செய்யவேண்டியது ஒவ்வொரு இயக்கத்திலும் இதை அறிவிக்கவேண்டும் இன்னும் நாட்கள் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் மாதம் என்றால் அதற்கான வேளைகளை இப்போதே தொடங்கி விடுவார்கள். அதற்குள்ளே நாம் இதை நடைமுறை படுத்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.

நம்முடைய போராட்டத்தை அரசு பெரிதுபடுத்தவில்லை போராட்ட ஸ்டைலை மாற்றினால் தான் தீர்வு. அதற்கு அரசு பொருளாதார நெருக்கடி தரவேண்டும் தருவதற்கு இதுவும் ஒரு வழி. இதுபோல பல வழிகள் இருக்கிறது முதல்கட்டமாக இதை நடைமுறை படுத்த அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் முன்வரவேண்டும் இதை குறித்து இடதுசாரி கட்சிகளே என்னிடத்தில் பேசியுள்ளார்கள்.

Image result for gandhi protest

இது தான் சரியான தீர்வு என்று செல்லி இருக்கிறார்கள் உங்களோடு நாங்களும் இதை செயல்படுத்துவோம் என்றும் சொன்னார்கள் இதை இந்தியா முழுவதும் செய்தால் பின்வாங்குவதை தவிர அரசுக்கு வேற வழியில்லை வெள்ளையர்களே இதை பார்த்து தான் பயந்து ஓடினார்கள் நாமும் இதை நடைமுறைபடுத்துவோம்.

அவர் சொல்லகூடிய சாராம்சம் இதுதான்:

உன்மையில் நம்முடைய போராட்டத்தை அரசு துளிஅளவும் கண்டுகொள்ளவில்லை இதை அசாதுதீன் உவைசியும் சொல்கிறார், கடுகளவும் நம்முடைய போராட்டத்தை அரசு பெரிதுபடுத்தவில்லை என்று. போராட்டம் செய்தும் உபியில் காவல்துறையின் வன்முறை பார்க்கிறோம் அதனால் நம்முடைய போராட்டங்கள் அரசுக்கு பொருளாதார நெருக்கடி தரவேண்டும் என்றால் நாம் போராட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டாவது சுதந்திர போராட்டங்களுக்கு தியாகம் செய்ய நினைக்கும் மக்கள் முன்வாருங்கள். நம்மோடு நம் தொப்புள்கொடி உறவுகளும் இருக்கிறான் நம்முடைய போராட்டங்களை மாற்றி அமைப்போம் அரசு அப்போது கேட்டுதான் ஆகவேண்டும் வேற வழியில்லை…

உரை: பிஜே ; தமிழில் தட்டச்சு: பாசில் கிளியனூர், Article Cover image courtesy : Newsclick