CAA Crimes against Children Crimes Against Women Modi Shaheen Bagh

“பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி?” – பிரதமர் மோடிக்கு பெண்கள் அமைப்பினர் கடிதம் !

டில்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்களை பேசிவருவதும் ” பிரச்சாரங்களில் பாலியல் பலாத்காரத்தை கொண்டு மிரட்டல் விடுப்பதும் “அச்சம்” அளிக்கும் விதத்தில் உள்ளது என 170 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் திங்களன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

பாஜக தலைவர்கள் வன்முறையான சூழலை உருவாக்கி விட்டனர்:

அந்தக் கடிதத்தில், குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் செய்யும் பெண்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுமாறு பாஜக தலைவர்கள் தங்கள் தொடர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருவது “ஒரு வன்முறையான சூழ்நிலையை” உருவாக்கியுள்ளது

CAA-NRC-NPR க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் அமைதியான பெண்கள் மீது வன்முறையைத் தூண்டுவது, அப்பெண்கள் இடையே கற்பழிப்பு பயத்தை ஏற்படுத்துவது, தொடர் வெறுப்பு பேச்சுக்களை பேசுவது என பாஜகவின் தேர்தல் பிரச்சாரகர்கள் உள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது..

பெண்களை மிரட்டுவதா?

அரசாங்கத்தை தலைமை தாங்கும் இடத்தில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட வகுப்புவாத மற்றும் பயத்தை ஏவிவிடும் பேச்சுக்களை நீங்கள் எப்படி ஊக்குவிக்கலாம் ? இதனால் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் அச்சமுற்றவர்களாகவும் உணருகிறார்கள்.

பாஜகவுக்கு ஒட்டு போடுங்க இல்லை என்றால் கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா டெல்லியில் உள்ள பெண்களுக்கான உங்கள் செய்தி? இந்த அளவிற்கு தாழ்ந்திருக்கிறதா உங்கள் கட்சி?’ என்று கேள்வி எழுப்புகிறது அந்த கடிதம்.

பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மாவின் சமீபத்தில் “லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுகிறார்கள் (ஷாஹீன் பாக்). டெல்லி மக்கள் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைவார்கள், உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்வார்கள், கொலை செய்வார்கள்” என்ற பேச்சை குறிப்பிட்டு ..

“பாஜக இப்போது இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளது அந்த கடிதம்.

வன்முறை சம்பவங்களுக்கு பாஜக தலைவர்களே காரணம்:

“இதை தான் வரலாறு பதிவு செய்யும், இந்தியா உங்களை மன்னிக்காது, திரு. பிரதம மந்திரி அவர்களே. உங்கள் கட்சியின் உறுப்பினர்கள் உருவாக்கிய இந்த வன்முறை சூழ்நிலையின் நேரடி விளைவை தேசம் கண்டுள்ளது. இந்த வெறுப்பு பேச்சுக்கள் ஜனவரி 30 ஆம் தேதி ‘ராம் பக்த்‘ கோபாலுக்கு அப்பாவி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தூண்டி உள்ளது.

https://twitter.com/DesiPoliticks/status/1222815459080376321

உங்கள் கட்சியினரால் பரப்பப்பட்ட வெறுப்பு பேச்சுக்களால் ஆயுதம் ஏந்திய மற்றொரு பயங்கரவாதியும் பிப்ரவரி 1 ம் தேதி ஷாஹீன் பாக் பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் ”என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விஷம் பேச்சுக்கள்:

“துரோகிகளை சுட்டு தள்ளுங்கள்” என்கிறார் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்.

“போலி சே நஹி தோ கோலி சே மானங்கே” (அவர்கள் வார்த்தைகளை புரிந்து கொள்ளாவிட்டால், தோட்டாக்கள் மூலம் அவர்களுக்குப் புரிய வைப்போம்) என்கிறார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இங்கு துரோகிகள் என்று குறிக்கப்படுவது அமைதியாக போராடி வரும் பெண்களை தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அமித் ஷா:

மதிப்புமிக்க உள்துறை மந்திரி திரு. அமித் ஷா பிப்ரவரி 8 ஆம் தேதி ஈ.வி.எம் பொத்தான்கள் மீது பெண்கள் தரும் அழுத்தம் போராட்டக்காரர்கள் உணரும் வகையில் இருக்க வேண்டும் என கூறுகிறார். அவர் என்ன பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்திட விரும்புகிறாரா?” என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது..

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எங்களுக்கு போராட உரிமை உண்டு:

“ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சூழலை உண்டாகியுள்ளனர் உங்கள் கட்சியினர். இதனால் டெல்லி பெண்கள் – இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கிய, ஆதிவாசி மற்றும் தலித் என அனைவரும் அச்சத்தை உணர்கிறோம். இதை இந்த நாட்டின் பெண்களாக, டில்லியை சேர்ந்தவர்களாக உங்களிடம் கூறி கொள்கிறோம்.” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“NPR-NRC-CAA க்கு எதிரான நாடு தழுவிய எழுச்சி போராட்டங்களின் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது எங்கள் அரசியலமைப்பு உரிமை. அதை தான் நாங்கள் செய்கிறோம்.

நாங்கள் துரோகிகளா?

டெல்லியின் லட்சக்கணக்கான பெண்கள் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்ல, அதை வழிநடத்தும் முன்னோடிகளாகவும் உள்ளனர். இப்படிப்பட்ட பெண்களை பயங்கரவாதிகள் என்றும் துரோகிகள் என்றும் முத்திரை குத்தப்படும்போது நாங்கள் பொறுத்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம், நம் நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாத்திடவே பெண்கள் போராடி வருகின்றனர்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘பிரதமரே வாய் திறங்க’:

வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுக்களை பேசி வரும் பாஜக தலைவர்கள் மீது உரிய கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் இது குறித்து பிரதமர் வாய் திறக்க வேண்டும், இவ்வாறான பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் கவுரவத்தை நிலைநிறுத்தும் விதமாகவும், இந்தியாவின் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் நீங்கள் டெல்லி தேர்தலில் களம்காண வேண்டும்” என்று குறிப்பிட்டு கடிதம் நிறைவுபெறுகிறது

கடிதம் அனுப்பியவர்கள்:

மேற்சொன்ன கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் பெண்ணிய பொருளாதார நிபுணர் தேவகி ஜெயின், சமூக ஆர்வலர் லைலா தியாப்ஜி, முன்னாள் இந்திய தூதர் மது பதுரி, பாலின உரிமை ஆர்வலர் கம்லா பாசின் மற்றும் அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கம் (ஏஐபிடபிள்யுஏ), தேசிய இந்திய பெண்கள் கூட்டமைப்பு (என்எஃப்ஐடபிள்யூ) போன்ற குழுக்களும் அடங்கும்.