மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு தக்க பாடம் கற்பித்த ஷிவசேனா, இப்போது விஜய் சர்தேசாயின் கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் கூட்டணியை அமைத்து அண்டை மாநிலமான கோவாவிலும் பாஜக வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது.
“மகாராஷ்டிராவுக்கு அடுத்தது கோவா, அதற்கு அடுத்து மற்ற மாநிலங்களுக்கும் செல்வோம். இந்த நாட்டில் பாஜக அல்லாத அரசியல் முன்னணியை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம், ” என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் மும்பையில் நேற்று (29-11-19) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவாவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை முதல்வருமான விஜய் சர்தேசாய் மூன்று எம்.எல்.ஏ.க்களுடன் மகாராஷ்டிராவுக்கு வந்து சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் . மகாராஷ்டிராவில் நடந்ததைப் போலவே கோவாவிலும் ஒரு புதிய அரசியல் முன்னணி உருவாகி வருகிறது” என்று ரவுத் மேலும் கூறினார்.
கோவா மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை உருவாக்கிய விதம் மக்களுக்கு பிடிக்கவில்லை, எனவே நாங்கள் அங்கு செல்லவிருக்கிறோம்.பாஜக அரசாங்கத்தை ஆதரிக்கும் சில எம்.எல்.ஏக்கள் இப்போது சிவசேனாவுடன் தொடர்பில் இருப்பதால் கோவாவில் விரைவில் “மேஜிக்” நடக்கும் என்று ஷிவ சேனாவின் சாம்னா பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
காங்கிரஸ்-விரோதத்திலிருந்து பிஜேபி-விரோதத்திற்கு ஷிவ சேனா கட்சி மாறிவருவதை தான் ரவுத்தின் இந்த அறிவிப்பு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
40 தொகுதிகளை கொண்ட கோவா மாநிலத்தில் கடந்த 2017 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்றது, பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்றது. இப்படி இருந்தும் கூட பாஜக தான் கோவா மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் 12 பேர் பாஜகவுடன் இணைந்தனர். இது குதிரை பேரத்தினால் நடந்தது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். பிருகு இவிஎம் மூலம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ க்கள் என கோவாவில், தற்போது பாஜக 27 எம்எல்ஏ க்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.