Assam BJP Muslims

அசாம்: மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் பள்ளிவாசலில் இருந்த குர்ஆன், நபிமொழி புத்தகங்கள் எரிப்பு ..

அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் அசாம் மாநிலத்தின் பக்சா மாவட்டத்திலுள்ள போடோ பகுதியில் சில பாசிச சமூக விரோதிகள் முஸ்லிம்களின் மத புத்தகங்களை எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்ஸா மாவட்டத்தின் காலாபானி பள்ளிவாசலில் இருந்த 11 குர்ஆன் பிரதிகள், 3 ஹதீஸ் பிரதிகள் (நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளின் தொகுப்பு) மற்றும் வேறு சில முஸ்லிம் மத புத்தகங்களையும் பாசிஸ்டுகள் எரித்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மார்ச் 1 ம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. எரிக்கப்பட்ட குர் ஆன் பிரதிகளை பள்ளிவாசல் இமாம் அடுத்த நாள் காலையில் தொழுகைக்கு சென்ற போது கண்டெடுத்துள்ளார்.

மக்கள் போராட்டம்:

மத புத்தகங்களை கிழித்து எரித்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பாஜக அரசுக்கு எதிரான கோபத்தைத் தெரிவிக்கும் வகையில் வீதிகளில் இறங்கி போராடினர். 14 மத புத்தகங்களை எரித்ததற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

காவல் நிலையத்தில் புகார்:

மஸ்ஜித் கமிட்டியினர் கோபார்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், பின்னர் எஸ்.பி துபே பிரதீக் விஜய் குமார் தலைமையிலான பக்ஸா போலீஸார் குழு சம்பவ இடத்திற்கு வந்து, கூடி இருந்த மக்களை சமாதானப்படுத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.