குஜராத் அகமதாபாத் மோட்டேராவில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கை திறந்து வைத்தார்.
விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட இந்த புதிய அரங்கில் விரைவில் முதல் சர்வதேச போட்டி புதன்கிழமை தொடங்க உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்றாவது டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
புதிய ஸ்டேடியத்தில் 1,10,000 பேர் அமர முடியும், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம் என்ற பெருமையை இந்த மைதானம் பெறுகிறது.
சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டது, இப்போது மற்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி வசதிகளை உள்ளடக்கி உள்ளதால் அதை சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவ் என்றும், கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி ஸ்டேடியம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ செயலாளர் ஜே ஷா மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடல்நல குறைவால் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்த நிகழ்வில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.