கடந்த திங்கட்கிழமையன்று மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் வெடி பொருட்களைக் கொண்ட பையை கண்டெடுத்தார். பின்னர் அதை ஆளில்லா இடத்தில் பாதுகாப்பான முறையில் அதிகாரிகள் வெடிக்க செய்தனர்.
ஊடக பயங்கரவாதம்:
ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. குண்டு வைத்த தீவிரவாதியின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பாகின. இதை செய்துள்ளது முஸ்லிம்கள் என்ற தொனியில் வழக்கம் போல தங்கள் மறைமுக சமிக்ஞைகள் மூலம் விஷம பிரச்சாரங்களை முழு உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக கர்நாடக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் குற்றவாளி கைது செய்யப்படும் முன்னரே ஜிஹாதிகள் என்று கூறி முஸ்லிம்கள் மீது மறைமுகமாக பழி சுமத்தியது.
அதே போல மோடி பக்தர்களும், சங் பரிவார கூட்டமும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கினர் .
தீவிரவாதி ஆதித்யா ராவ் சரண்:
திங்கள்கிழமை விமான நிலையத்தில் இருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகளை பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற காவல்துறை அதிகாரிகளுடன் மங்களூரு போலீசார் பகிர்ந்து கொண்டனர். குற்றவாளி உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள கே.எச்.பி காலனியில் வசிக்கும் ஆதித்யா ராவ் (36) என போலீசார் அடையாளம் கண்டனர்.இதைத் தொடர்ந்து பெங்களூரு போலீசார் ஆதித்யா ராவ் குறித்த விவரங்களை செவ்வாய்க்கிழமை காலை மங்களூரு போலீசாருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை தீவிரவாதி ஆதித்யா ராவ் தாமாக முன் வந்து சரணடைந்துள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதை சற்றும் எதிர்பார்காத சங் பரிவார அமைப்பினர் வாயடைத்து போயுள்ளனர்.
ஆதித்யா ராவ் குறித்த மேலதிக தகவல்கள்:
ராவ் மீது பெங்களூரில் ஏற்கனவே நான்கு வழக்குகள் உள்ளன, அவற்றில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள், திருட்டு உள்ளிட்ட வழக்குகள் அடங்கும். ஆதித்யா ஒரு பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி.
இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டில் கே.ஐ.ஏ மற்றும் கிரந்திவேரா சங்கோலி ராயண்ணா (கே.எஸ்.ஆர்) ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் உள் பாதுகாப்பு பிரிவு (ஐ.எஸ்.டி) மற்றும் பெங்களூரு காவல்துறையின் கூட்டுக் குழுவால் பயப்பனஹள்ளியில் இருந்து கைது செய்யப்பட்டார்.பிறகு சிறையிலிருந்து விடுதலையான ராவ் இம்முறை மிரட்டலுடன் நிறுத்தி கொள்ளாமல் நிஜமாகவே வெடிகுண்டை வைத்துள்ளார்.
மேட்டரை ஆஃப் செய்த ஊடகங்கள்:
தற்போது பிடிபட்டவர் முஸ்லிம் இல்லை என்பதாலோ என்னவோ, யாரும் இவரை பயங்கரவாதி என்று அழைப்பதில்லை. மேலும் இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர், ஏதோ வேலை கிடைக்காத விரக்தியில் இவ்வாறெல்லாம் செஞ்சுட்டார் என்கிற ரீதியில் பெரும்பான்மை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இங்கு கேள்வி என்னவென்றால் பிடிபட்டவர் அப்துல்லாவாக இருந்திருந்தாலும் பெரும்பான்மை ஊடகங்கள் இப்படி செய்தி வெளியிட்டு இருக்குமா? அல்லது அடுத்த வூட்டு முஜாகிதீன், பக்கத்து வீட்டு முஜாகிதீன் என்று கதை அளந்திருக்காமா என்பது தான்.