தமிழகத்தில் மிக பிரபலமான மற்றும் நீண்ட காலமாக பத்திரிக்கை ஊடகத் துறையில் இருந்து வரும் தினமலர் நேற்று ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.
ஊடகங்கள் தொடர்ந்து மோடி அரசாங்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை விதைத்து வருவது வாடிக்கை ஆகி வருகிறது.இவ்வாறு நடப்பது தமிழ் ஊடகங்களில் சற்று குறைவு என்றாலும் வட இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மோடி அரசாங்கத்திற்கு சார்பாக செய்திகள் வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டு மிகவும் அதிகமான அளவில் உள்ளதால் நெட்டிசன்கள் “கோதி மீடியா(Godi Media)” என்று ஒரு சொல்லாக்கதையே உருவாக்கி வைத்துள்ளனர்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், முழுமையான அமைதி நிலவி வருவதாகவும் ஊடகங்கள் பொய்யான ஒரு சித்திரத்தை தொடர்ந்து கொடுத்து வருகின்றன. ஆனால் இதற்கு மாற்றமாக காஷ்மீர் மக்கள் பெல்லட் குண்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு வருவதை குறித்து நியூஸ்கேப் செய்தி வெளியிட்டிருந்தது.
காஷ்மீரில் 144 தடை நீக்கம் – இயல்பு நிலை திரும்பியது என்று பொய் செய்தி:
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த 5 நாட்களாக காஷ்மீரில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு மாவட்டத்தில் மட்டும் 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதை குறித்து newscap.in முதன்மையாக செய்தி வெளியிட்டிருந்தது.
மற்ற பிரதான தமிழ் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. அதாவது 144 தடை உத்தரவு ஜம்மு மாவட்டத்தில் மட்டும் வாபஸ் பெறப்பட்டது ,பள்ளி கல்லூரிகள் சனிக்கிழமை முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிபவிப்பை கீழே உள்ள படத்தி காணலாம்
ஜம்மு மாவட்டத்தில் மட்டுமே 144 தடை உத்தரவ நீக்கப்பட்டது . காஷ்மீரில் எந்த மாற்றமும் கிடையாது தடை உத்தரவு நீடிக்கும் தற்போது வரை நீடித்துக் கொண்டு தான் உள்ளது.
ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் செய்தி வெளியிட்டார்களா ?அல்லது காஷ்மீர் மாநில மக்கள் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்த மோடி அரசாங்கத்தின் அறிவிப்பை,காஷ்மீரி மக்கள் ஏற்று கொண்டு விட்டனர்.அமைதி திரும்பி விட்டது. ஆளும் அரசு வெற்றி கண்டது என்ற பிம்பத்தை தர நாடினார்களோ ? அவர்களின் எண்ணம் நமக்கு தெரியவில்லை.
ஆனால் இத்தனை பழமை வாய்ந்த ஒரு ஊடகமாக இருக்கும் நிலையில் இவ்வாறு ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு 12 மணி நேரம் ஆகியும் அதை நீக்காமல் இருப்பதும் மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது.
வெறுப்பு பிரச்சாரம்.
அடுத்து தொழுகை என்று ஒரு பத்தியை உருவாக்கி அதில் “நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகைக்காக குவியும் முஸ்லிம்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கருதிய மாவட்ட நிர்வாகம் கருதியது “என்று செய்தி வெளியிட்டுள்ளது .
ஆனால் இவ்வாறு மாவட்ட நிர்வாகம் எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை வெளியிடாத செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயமாக உள்ளது. முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்கள் அதிக அளவில் கட்டவிழ்த்து விட படும் நிலையில் இவ்வாறு பொறுப்புணர்வு வாசகங்களை பயன்படுத்துவது சரியான ஒரு விஷயமாக இருக்காது. நாட்டின் எந்த ஒரு ஊடகமும் இவ்வாறு செய்தியை வெளியிடவில்லை. முஸ்லிம்கள் தொழுகைக்காக வந்தால் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க தான் செய்வார்கள் என்ற கருத்தையும் உள்ளடக்கியதாக இந்த வாக்கிய தோரணை அமைந்துள்ளது.
பாதி உண்மையை மறைத்தல் !
அடுத்ததாக சில இடங்களில் நேற்று பாதுகாப்பு படையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு செய்தியையும் குறிப்பிட்டுள்ளது தினமலர் .
அத்துடன் இணைத்து போராட்டக்காரர்கள் மீது பெல்லெட் குண்டுகளால் தாக்கப்பட்டது என்ற செய்தியையும் வெளியிட்டு இருந்தால் நடுநிலையாக இருந்திருக்கும் . ஆனால் கல்வீச்சு தாக்குதலை குறித்து செய்திகள் மட்டும் இவர்களை அடைந்து, பெல்லெட் குண்டுகளால் மக்கள் தாக்கப்பட்ட செய்திகள் மட்டும் இவர்களை அடையாமல் இருந்தது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் குறித்து அறிவீனமான நய்யாண்டி !
இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் உண்மை நிலவரம் கீழே தரப்பட்டுள்ளது.
சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார், எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ யூசுப் தாரிகாமி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரையும் இதர கட்சி தோழர்களையும் சந்திக்க செல்வதாக முன்பே கவர்னரூக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் மற்ற தமிழ் ஊடகங்களில் பழமையானதும் அதிக வாசகர்களைக் கொண்ட பத்திரிகையாகும் உள்ள காரணத்தினால் அதே அளவிற்கு அதிக பொறுப்புணர்வும் , கவனமும் இருப்பதுஅவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவது மிகவும் சிறந்ததாக இருக்கும்.