முஹம்மத் நபி குறித்து நுபுர் ஷர்மா கூறிய அவதூறான கருத்துக்கு எதிராக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தெரிவித்த கருத்து என கூறி, அவரது பெயரில் செயல்படும் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று ஐபிஎல் கிரிக்கட் போட்டியை புறக்கணிக்கப்போவதாக ட்வீட்.
@Moeen_Ali18 என்ற ட்விட்டர் பயனர் “இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் எந்த ஒரு கிரிக்கட் போட்டியிலும் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களையும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன்.” என ட்வீட் செய்துள்ளார்.
மேற்கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலதுசாரி ஆதரவாளர்கள், கிரிக்கெட் வீரர் மொயீன் அலி பெயரிலான இந்த ட்வீடை பதிவு செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் முஸ்லிம்களில் சிலர் இந்த டீவீட்டை உண்மை என நினைத்து அதனை மொழியாக்கம் எல்லாம் செய்து அறியாமையின் காரணத்தால் பரப்பி வருகின்றனர்.
ட்விட்டர் கணக்கின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் மற்றும் ட்வீட்டை இங்கே காணலாம்.
இந்த ஆக்கத்தை தயாரிக்கும் போது, 13,000க்கும் மேற்பட்டோர் ட்வீட்டை ரீட்வீட் செய்திருந்தனர். பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் உள்ள மற்றவர்கள் ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளனர். அத்தகைய இடுகைகளின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
எனவே வைரலான ட்வீட் மற்றும் ட்விட்டர் கணக்கு மொயீன் அலிக்கு சொந்தமானது அல்ல. மேலும் பொய் செய்தியை பரப்பிய அந்த ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு ட்விட்டரில் கணக்கு கிடையாது, மேலும் இது குறித்து மொயீன் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.