Delhi

டெல்லி மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது பாஜக; ஆம் ஆத்மீ, காங்கிரஸ் கட்சிகள் வெற்றி!

புதன்கிழமையன்று ஐந்து இடங்களில் டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் கல்யாணபுரி, ரோகிணி-சி, ஷாலிமார் பாக் (வடக்கு), மற்றும் திரிலோக்புரி உள்ளிட்ட நான்கு இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றது. மறுபுறம், காங்கிரஸ் சவுகான் பங்கர் வார்டை வென்றது. பாஜக ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்தது.

வடக்கு தில்லி மாநகராட்சியில் (என்.டி.எம்.சி) ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் (வடக்கு) ஆகிய இரண்டு வார்டுகளிலும், கிழக்கு தில்லி மாநகராட்சியில் (ஈ.டி.எம்.சி) திரிலோக்புரி, கல்யாணபுரி மற்றும் சவுகான் பங்கர் ஆகிய மூன்று வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்றது. 50.86 சதவீத வாக்குகள் பதிவாயின.

ஷாலிமார் பாக் வடக்கில் பாஜக கவுன்சிலர் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது அவர் படுதோல்வி அடைந்துள்ளார்.

டெல்லி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் பாஜகவுடன் சோர்ந்து போயிருக்கிறார்கள், இந்தத் தேர்தல் அதற்கான அறிகுறியாகும். 2022 டெல்லி நகராட்சி தேர்தலில் பாஜக அழிக்கப்படும் என ஆம் அத்மீ கட்சி தலைவர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.