இன்று உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டம், ஜெகாங்கிராபாத்தில் உள்ள கங்கை நதியில் தனது ஐந்து குழந்தைகளை (ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, சிவசங்கர் மற்றும் கேசவ் பிரசாத்) வீசி எறிந்துள்ளார் ஒரு தாய். காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்தனர், குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக நதியில் நீச்சல் அடிக்கவல்ல சில டைவர்ஸ் ஈடுபடுத்தப்பட்டனர். குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மனநலம் குன்றியதாகத் தெரிகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் (மோடி அரசு முறையான […]
Uttar Pradesh
உபி : கொரோனா பரவிவரும் வேளையில் லச்சக்கணக்கானோர் கூடும் ராமர் திருவிழாவுக்கு மாநில அரசு அனுமதி..?
இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ராம் நவாமி தினத்தன்று அயோத்தியில் ஒரு மெகா நிகழ்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ராம் நவமி மேளா/கண்காட்சி வருகிற மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது இதில் லச்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வை நிகழ்வை கைவிடுமாறு மருத்துவ ஆலோசகர்கள் மாநில அரசுக்கு அறிவுறுத்திய […]
வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !
யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை. மேலும் அந்த சமயத்தில் […]
உபி முதல்வர் : “போராட்டத்தின் போது போலீசார் ஒருவரை கூட சுடவில்லை, அவர்கேள அவர்களுக்குள் சுட்டு கொண்டனர்”
கடந்த 2019 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு நபர் கூட பொலிஸ் தோட்டாக்களால் கொல்லப்படவில்லை, மேலும் இறந்தவர்கள் “கலவரக்காரர்களின் தோட்டாக்களால்” தான் கொல்லப்பட்டனர் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களின் போது உபி போலீசார் சிறப்பாக செயல்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார். “அகர் கோய் மர்னே கே லியே ஆ ஹி ரஹா ஹை தோ வோ ஜிந்தா […]
ஆம்ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லாவின் வெற்றியை கொண்டாடிய உபியில் உள்ள அவரது குடும்பத்தினர் மீது போலீசார் அராஜகம் !
ஆம் அட்மி கட்சி (ஆம் ஆத்மி) எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உறவினர்கள் கோவில் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் மாநிலமான உபியின் மீரட் மாவட்டத்தில், அக்வான்பூரில் வசித்து வருகின்றனர். அமானத்துல்லாவின் வெற்றியை கொண்டாடிய அவரது உறவினர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர் உபி போலீசார். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அமானத்துல்லா கான், ஓக்லா தொகுதியில் இருந்து சமீபத்தில் டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரஹம் சிங்கை 71, […]
உபி : தண்ணீர் குடி, ஆனா சிறுநீர் போகக்கூடாது, தூங்கக்கூடாது, கொடூர தயடிகள் என சிறுவர்கள் மீது கொடூரத்தை அரங்கேற்றும் போலீசார்!!
CAA எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனக்கூறி சிறுவர்கள் மீது வன்முறையை ஏவிய உபி போலீஸ் – உண்மைநிலையறியும் குழு சமர்பித்த ஒரு கள ரிப்போர்ட் உபி மாநிலம் லக்னோ, பிஜ்னோர், முஸாபர்நகர் மற்றும் பிரோஸாபாத் நகரில் கடந்த டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி ஆகிய மாதங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு மிகத்தீவிரமான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன, அவற்றில் அமைதிப்பேரணிகளே அதிகம் எனினும் அப்போராட்டங்களில் கலந்து கொண்டார்கள் என பொய் கூறி, சிறார்கள் சிலரை கைது செய்து அவர்களை […]
உபி : பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு !
உபி : பாஜக எம்எல்ஏ ரவீந்திரநாத் திரிபாதி மற்றும் 6 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக உபியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று (10-2-2020) படோஹி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆசை வார்த்தை காட்டி மோசம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 2007 இல் இறந்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகனை 2014 இல் சந்தித்துள்ளார் அந்த பெண். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை […]
உபி: அதிகாலை 4 மணிக்கு பெண் போராட்டக்காரர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை குண்டு ..
அசாம்கர் போராட்டக்காரரர்கள் மீது உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். எஃப்.ஐ.ஆரின் படி, போராட்டக்காரரர்கள் மீது கலகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகள் பதியபட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் அசாம்கர் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவிக்க கூடியிருந்த சுமார் 200 பெண்கள், பிப்ரவரி 5, புதன்கிழமை அதிகாலையில் காவல்துறையினரால் லத்திசார்ஜ் செய்யப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் ! பிப்ரவரி 4ம் தேதியின் காலை முதல் அசாம்கரின் பிலாரியாகஞ்ச் பகுதியில் உள்ள மவ்லானா ஜோஹர் அலி […]
“தீயில் கிடந்த விறகுகளை கொண்டும் தாக்கினர், ஆபாசமாகவும் சீண்டினார்கள்” – குமுறும் உபி பெண்கள்!!
டில்லி ஷஹீன் பாகில் பெண்கள் தலைமையில் நடந்து வரும் தொடர் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவர்களை பின்பற்றி போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் ஒன்றுதான் உபி யில் உள்ள எட்டாவா. போலீசாரா அல்லது ? “போலீசார் எங்களை தீயில் எரிந்து கொண்டிருந்த விறகுகளை கொண்டு தாக்கினர். சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் இது தான் உண்மை. விறகின் முன் பக்கத்தில் தீ இல்லை என்றாலும் அது சூடாகவே […]
பால் பாக்கட்டை திருடி செல்லும் உபி போலீசார் – வசமாக சிக்கிய வீடியோ !
உபி போலீசார் பால் பாக்கட்டை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் ஆன்லைனில் வெளியானதை அடுத்து வைரலாக பரவி வருகிறது. ஜனவரி 19 ம் தேதி அதிகாலையில் நொய்டா போலீசார் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் சீருந்து கடை ஒன்றின் அருகே வந்ததும் நிறுத்தபடுகிறது. உடனே வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் காவலர் ஒருவர் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடப்பதை காண முடிகிறது. பிறகு பால் அடுக்கி […]
உபி : சமஸ்கிருத பல்கலையில் போட்டியிட்ட 4 சீட்டுகளிலும் ஏபிவிபி படுதோல்வி!
உபி வாரணாசியில் உள்ள சம்பூர்நாடு சமஸ்கிருத விஸ்வவித்யாலயாவில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இந்திய தேசிய மாணவர் சங்கத்திடம் (என்எஸ்யுஐ) தோல்வியடைந்தது. முன்னதாக 2019 தேர்தலில் 4 சீட்டுகளிலும் வெற்றி பெற்ற ஏபிவிபி தற்போது அனைத்து சீட்டுகளையும் இழந்துள்ளது. வாரணாசி என்பது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும், கூடுதலாக இந்துத்துவ ஆதித்யநாத் ஆளும் மாநிலமாகவும் இருப்பதால் இது இந்துத்துவாவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏபிவிபி […]
உபி : போராளி பெற்றோர் சிறையிலடைப்பு; பாசம் தேடி அழும் 14 மாத குழந்தை!
ரவி சேகர் – ஏக்தா இருவரும் வாரணாசியில் வாழும் தம்பதியர். இவர்களுக்கு ஆர்யா என்ற 14 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த 19ம் தேதியன்று, வாரணாசியில் இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கெதிரான அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தம்பதியர் இருவருமாக இணைந்து காற்று மாசுப்பாடினை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் NGO அமைப்பு ஒன்றிணையும் நடத்தி வருகின்றனர். உபி வாரணாசியில் தடையை மீறி நடத்தப்பட்ட அந்த சிஏஏ அமைதி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்று […]
உபி : சமூக ஆர்வலர் சதாஃபை வயிற்றில் உதைத்து, லத்தியாலும் தாக்கிய போலீஸ்-10 நாட்கள் மேலாகியும் பெயில் இல்லை.
செத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்- சதாஃப் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகருமான சதாஃப் ஜாஃபர், கடந்த 19ந்தேதியன்று , லக்னோவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது படம்பிடித்து கொண்டிருந்த அவரை போலீசார் அநியாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். ஆரம்பத்தில் ஜாஃபர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றே தெரியாமல் தவிக்கவிட்ட போலீஸ் 2நாட்கள் கழித்த பிறகே அவரது சகோதரிக்கு அவர் இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீரா நாயர் போன்ற திரைத்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக […]
CAAக்கு எதிராக கருத்து: உபியில் 124 பேர் கைது 19,000 சமூகவலைத்தள கணுக்குகள் ரிப்போர்ட்!
தலைமை பூசாரி யோகி ஆதித்யநாத் ஆளும் உபி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20,000 இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, அதில் 181 யூடியூப் புரோபைல்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இதுவரை 9,372 ட்விட்டர் பதிவுகளும், 9,856 முகநூல் பதிவுகளும் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. போராட்டகாரர்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் பதிவிட்டதால் 124 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்னும் 93 பேர் மீது FIR பதிந்துள்ளது. 19,000 சமூகவலைதள கணக்குகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. யோகியின் தலைமையிலான போலீசாரால் […]
உபி :பொது சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ரூ.6.27 லட்சத்தை வழங்கிய முஸ்லிம்கள். பயனளிக்கும் செயலா ?
உபியில் கலவரத்தை ஏற்படுத்தியது, அர்த்த ராத்திரியில் முஸ்லிம் வீடுகளில் புகுந்து பொருட்களை தாக்கி உடைத்து நகையும் பணமும் கொள்ளையடித்துப்போன காவிவல்துறை பற்றி காட்டுத்தீயாய் செய்திகள் உலாவரும் நிலையில்…. கலவரத்தை ஏற்படுத்தியமைக்காகவும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் மீரட் புலந்த்சாஹர் முஸ்லிம்கள் சிலர் சேர்ந்து யோகி அரசுக்கு ரூ.6.27 லட்சத்தை வழங்கியுள்ளனர். பொது சொத்தை சேதப்படுத்தினர் என கூறி சொத்துக்களை பறிமுதல் செய்ய யோகி அரசு பழிவாங்கும்(யோகியே சொன்ன வார்த்தை) நடவடிக்கை எடுத்து வரும் வேலையில் முஸ்லிம்கள் இவ்வாறு பணத்தை வசூலித்து […]