உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]
Uttar Pradesh
உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !
பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]
உபியில் கழுத்து அறுக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை !
உபி,கான்பூர் : வாடகை வீட்டில் தங்கி இருந்து 30 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை உபி பொலிஸார் தெரிவித்தனர். தேஷ் தீபக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது, பிரஹாம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளான அவர், 2019 முதல் பில்ஹூரில் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் முதல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த அவரது மொபைலில் எந்த பதிலும் வரவில்லை என்று தீபக்கின் குடும்பத்தினர் […]
தாஜ்மஹால் வளாக பள்ளிவாசலில் தொழுததற்காக 4 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!
ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ஷாஹி மசூதியில் தொழுகை நடத்தியதற்காக நான்கு பேர் மே 25 புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஷாஹி மசூதியில் அவர்கள் தொழுகை நடத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: […]
கியான்வாபி பள்ளிவாசல் குறித்து சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் எம்.எல் ஏக்களின் மவுனத்தை கேள்வி எழுப்பியவர் கைது !
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM, ஒவைஸி)-ன் உத்தரபிரதேச மாநில பிரிவு செயலாளர் ஹக்கீம் அப்துல் சலாம் கான், புகழ்பெற்ற கியான்வாபி மசூதியில் “சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் எம்.எல்.ஏ.க்களின் மௌனத்தை” விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கீர்தார்பூர் காவல் நிலையத்தில் ஹக்கீமீன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற எந்த ஊடகத்தின் வழியாகவும் வதந்திகளை பரப்புவது, அதன் மூலம் […]
உபி: 20 நாட்கள் ஆகியும் கடத்தப்பட்ட சையதாவை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் உபி போலீஸ்.. !
உபி: கடந்த ஏப்ரல் 25 அன்று, உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகரில் உள்ள எட்வாவில் ரம்ஜான் ஸஹர் உணவு உண்ணும் நேரத்தில் தனது வீட்டைச் சுற்றியுள்ள வயலுக்குச் சென்றபோது, சோனி (24) என்ற சையதா காதுன், பிரேந்திர குமார் மற்றும் அவனது நண்பர்களால் கடத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. காலை 6 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்தினரை போனில் அழைத்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டியதாகவும், சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு […]
உபி: சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது என கூறி கியான்வாபி பள்ளிவசாலின் ஒளு செய்யும் பகுதிக்கு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்!
உபி: கியான்வாபி மசூதியின் ஒரு பகுதியை சீல் வைக்குமாறு கடந்த திங்களன்று வாரணாசி நீதிமன்றம், மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அங்கு வீடியோ சர்வேயின் போது ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என கூறி தற்போது அந்த பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வீடியோ சர்வே எடுக்க வேண்டுமென கட்டாயமாக்கியதை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் மூன்று நாள் வீடியோ ஆய்வு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் […]
உபி: பாபர் பள்ளிவாசலுக்கு பிறகு மீண்டும் ஒரு பள்ளிவாசல் இடிப்பு; நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பள்ளிவாசல் இடிப்பு !!
மாநில உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உத்தரபிரதேசத்தின் உள்ளூராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல் ஒன்றை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ள சம்பவம் நாட்டில் எந்த பரபரப்பையும் ஏற்ப்படுத்த வில்லை. 1992 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் இடிக்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் நிகழ்வுக்கு பிறகு இது போன்ற ஒரு நிகழ்வை பாஜக மாநில அரசே முன்னின்று சட்டவிரோதமாக தற்போது அரங்கேற்றி உள்ளது. இது குறித்து நாம் செய்தி வெளியிடும் இந்த கணம் வரை இந்தியாவில் உள்ள […]
ஆக்ராவில் உள்ள ஜமா பள்ளிவாசல் கிருஷ்ணர் பிறந்த இடம், தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு!
இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரின் சிலைகள் பள்ளிவாசலின் கீழ் புதையுண்டுள்ளதா என்பதை கண்டறிய ஆக்ராவில் உள்ள ஜஹானாரா மசூதி (ஜமா மஸ்ஜித் ஆக்ரா என்று பிரபலமாக அறியப்படுகிறது) உள்ள நிலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) கதிரியக்க பரிசோதனை செய்யக் கோரி மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைகளை பள்ளிவாசலுக்கு கீழ் அவுரங்கசீப் புதைத்தாராம்: முகலாய பேரரசர் அவுரங்கசீப், மதுரா ஜன்மஸ்தன் கோயிலை இடித்துத் தள்ளிய (?) பின்னர், கிருஷ்ணரின் சிலைகளை மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு எடுத்து […]
நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடியவர்கள் மீது உபி போலீசார் வழக்கு பதிவு !
உபி: சமூக வலைதளங்களில் பயங்கரவாதியாக விமர்சிக்கப்படும் நரசிங்கானந்த் சரஸ்வதி நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்கு ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்த100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது உத்தரபிரதேசத்தின் பிலிபிட் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக பிரசித்திமிக்க உருது செய்தித்தாள் இன்குலாப் தெரிவித்துள்ளது. விதி மீறல் என குற்றச்சாட்டு: போராட்டக்காரர்கள் கொரோனா கால சமூக இடைவெளியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் மேலும் பஞ்சாயத்து தேர்தல் காரணமாக இப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் […]
உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசே ஏற்குமாறும் உத்தரவு!
உபி காஷி விஸ்வநாத் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி பள்ளிவாசலில்இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சி செய்திட வாரணாசி சிவில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2000 ஆண்டு பழமையான காஷி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை 1669 ஆம் ஆண்டில் கியான்யாபி மசூதியைக் கட்டுவதற்காக முகலாய பேரரசர் அவுரங்கசீப் இடித்ததாக எந்த ஒரு ஆதாரமுமின்றி இந்துத்துவாவினர் கூறி வருகின்றனர், இந்நிலையில் கியான்வாபி மசூதி அமைந்துள்ள மீட்டெடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. “… மேற்கண்ட கியான்வாபி நிலத்தின் நடுவில், […]
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உபி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு; 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து!
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (என்.எஸ்.ஏ) உபி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரையிலான காலத்தில் பதியப்பட்ட 120 வழக்குகளில் 94 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளது. மொத்த வழக்குகளில் 41 தேச துரோக வழக்குகள், பசுவதை தொடர்பாகப் பதியப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் சிறுபான்மையினர் மீது பதியப்பட்டிருப்பதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. […]
உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !
உபி யில் மோடியின் தொகுதியான வாரணாசியில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பாசிச கும்பல் ஒன்று ஒரு முஸ்லீம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து, அவர்களின் வீட்டு பொருட்களையும், ஒரு சிறிய தொழிற்சாலையையும் அடித்து நொறுக்கி, அங்கு வசிக்கும் பெண்களையும் தாக்கி உள்ளனர். வீட்டில் இருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர். காவல்துறையினர் குண்டர்களுடன் பக்கபலமாக இருந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் தாக்கி முஸ்லிம்கள் மீதே வழக்கு பதிவு செய்தனர் என சப்ரங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் சட்டத்தை […]
‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..
யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]
உபி: முசாபர்நகர் கலவர வழக்கில் பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பபெற்றது சிறப்பு நீதிமன்றம் !
உபி பாஜக அமைச்சர் சுரேஷ் ராணா, பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம், வி.எச்.பி தலைவர் சாத்வி பிராச்சி உள்ளிட்ட 12 பாஜக தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முசாபர்நகர் கலவர குற்ற வழக்குகளை வாபஸ் பெற உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள எம்.பி. / எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 27 அன்று அனுமதித்தது. முக்கிய பாஜக தலைவர்கள் அனைவர் மீதும் ஒரு வழக்கும் கூட இல்லாமல் ‘கிளீன் சிட்’ வழங்கியுள்ளது நீதிமன்றம். அறுபது பேர் கொல்லப்பட்டு, […]