”கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் நிறைவேற்றி வருகின்றன. தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது […]
Tamil Nadu
பதவிக்காக தன்னை தானே தாக்கிக்கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி-அம்பலமானது நாடகம் !
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். அவர் கடந்த செவ்வாயன்று, இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் போது அவரது இரு சக்கர வாகனத்தை மறித்து 7 பேர் கொண்ட கும்பலால் தாக்கபட்டதாக நேற்று செய்தி வெளியானது. தாக்குதலை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நந்து. மருத்துவமனைக்கு வெளியே நூற்று கணக்கான இந்துத்துவாவினர் கூடினர். வழக்கம் போல் […]
என்.பி.ஆர் குறித்து அமைச்சர் உதயகுமாரின் கண்துடைப்பு அறிவிப்பு…
தமிழக வரலாறு இதுவரை கண்டிராத அளவுக்கு மூன்று மாதங்களாக லட்சோப லட்சம் தமிழக மக்கள், பேரணி, ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா என நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.. கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பெண்கள் குழந்தைகள், முதியோர் என “சாஹின் பாக்” என்ற பெயரில் இரவு பகலாக தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், வியாபாரம், உழைப்பு, அன்றாட அலுவல்கள், குடும்பத்தை கவனிக்காமை, வருமானம் இழப்பு, உடல்நலம் […]
“சரிதான்.. உங்கள் போராட்டங்களில் நியாயம் உள்ளது” ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த்..
இன்று ஞாயிறன்று காலை 11 மணியளவில் திரு ரஜினிகாந்த் அவர்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் உடைய மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். பிப்ரவரி 5ஆம் தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசியல் கட்சிகள், முஸ்லிம் மத குருமார்களை தூண்டிவிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருந்தார். அவருக்கு ஜமாத்துல் உலமாவின் சார்பில் அன்றே பதில் தரப்பட்டது. இந்த போராட்டத்தில் எதார்த்த நிலவரம் குறித்து அவரை சந்தித்து விளக்க விரும்புவதாக அதில் தெரிவித்திருந்தோம் . அந்தக் கடிதத்தைப் படித்த திரு […]
திருப்பூர் சிஏஏ ஆதரவு பேரணி எதிரொலி : பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி புகார் மனு.
நாடு முழுவதும் பாஜகவின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக தொடர் எழுச்சி போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் அதை குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஹிந்துத்துவாவினர் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன. நாட்டில் சிஏஏ வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும் எங்குமே மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. எனினும் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது, எனினும் அதன் மர்மத்தையும் மக்கள் உணர்ந்தே வைத்துள்ளனர். ஆனால் சிஏஏ […]
டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! – சீமான் | நாம் தமிழர் கட்சி.
இந்தியத்தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மதக்கலவரமும், இசுலாமியர்களுக்கு எதிரானத் தொடர் தாக்குதல்களும் அதிர்ச்சியளிக்கின்றன. குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுமைக்கும் நடைபெற்று வரும் போராட்டங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு போராடுவோர் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு கோரத்தாக்குதல் நிகழ்த்தப்படுவதும், போராட்டக்களங்கள் வன்முறைக்களங்களாக மாற்றப்பட்டு ஆளும் வர்க்கத்தின் துணையோடு மதரீதியாக நாட்டைத் துண்டாடும் முயற்சிகள் நடப்பதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினை சிதைத்தழித்து, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்நாட்டின் பன்முகத்தன்மையையைத் தகர்த்து ஒற்றைமயமாக்கும் […]
கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்! – வைகோ கோரிக்கை…
தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பன்னூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல வெவ்வேறு மாதங்களில் அம்மன் கோவில் கொடை விழாக்களும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து வருகின்றன. உலகின் பல பகுதிகளுக்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் தத்தமது ஊர்களில் நடக்கும் இதுபோன்ற திருவிழாக்களில்தான் ஒன்று கூடி உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவி மகிழ்கின்ற வாய்ப்பினைப் பெறுகின்றனர். உறவுகளை அழைத்து விருந்தோம்பல் செய்து தங்கள் […]
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் ..
ஒதிஷாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், ஒதிஷா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்கது. மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒதிஷா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே, மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக […]
மூன்றாண்டுகள் முதல்வராக நீடித்ததே சாதனைதான்: கே.எஸ்.அழகிரி!
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து, 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். சசிகலாவின் விருப்பு, வெறுப்பின் காரணமாக பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி 16 […]
சி.ஏ.ஏ: ‘நாளைய சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்போம்’ : தொல் .திருமாவளவன் அறிவிப்பு!
இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் நாளை தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தொல்.திருமாவளவன், எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார். ‘சி.ஏ.ஏ வை நிராகரிப்போம், என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடத்தமாட்டோம்’ என தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு இசுலாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு […]
பாசிசத்தின் குரலான தமிழக முதல்வர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் !
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எனும் கருப்பு சட்டத்தை கண்டித்து தன்னெழுச்சியாக மக்கள் போராடி வருகின்றனர். ஜனநாயக நாட்டில் அகிம்சாவழியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை சகித்துக் கொள்ளாத பாசிச அதிமுக அரசு மக்கள் கூட்டத்தை கலைக்க காவல்துறையை ஏவிவிட்டது. காவல்துறை நடத்திய தடியடியால் ஆண்கள் – பெண்கள் என பலர் காயமடைந்ததுடன் தடியடியால் ஏற்பட்ட சூழலில் அப்பகுதியில் வசித்து வந்த முதியவரின் உயிரும் பலியாகியுள்ளது. இத்தகைய கோரத்தாண்டவத்தை ஆடிய அதிமுக அரசு – காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து […]
தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கும்பல் படுகொலை; தடுக்க முயன்ற அவரது தங்கையை குழந்தையுடன் எட்டி மிதித்த மிருகங்கள்!
விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயதான சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மேல்ஜாதி என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒருவருக்கு சொந்தமான வயலில் இயற்கை தேவையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை பிடித்து அடித்தே கொன்றுள்ளது ஒரு வெறிபிடித்த கும்பல். இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது, இளைஞர் தாக்கப்படுவது தொடர்பான வீடியோக்கள்வைரல் ஆனது. அதற்கு பிறகு வெள்ளிக்கிழமையன்று போலீசார் 7 பேரைக் கைது செய்து, மேலும் […]
திருச்சி பாஜக பிரமுகர் கொலை வழக்கு: ‘இஸ்லாமிய பயங்கரவாதிகள், ஜிஹாதிகள்’ என்று பாஜக தலைவர்கள் தொடர் பொய் வெறுப்பு பிரச்சாரம் போலீசாரால் முறியடிப்பு !
திருச்சி பாலக்கரை மண்டல பாஜக துணைத் தலைவராக இருந்தவர் விஜயரகு. இவரை இன்று காலை 6மணி அளவில் ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக பிரமுகரின் கொலையைக் கண்டித்து காந்தி மார்க்கெட் பகுதியில் கடைகளை அடைக்கும்படி பா.ஜ.கவின் காட்டாயப் படுத்தியுள்ளனர். ஊடகங்களில் “மிட்டாய் பாபு” என்பவர் தான் கொலை செய்தது என்று செய்திகள் வெளியாகின. அதே சமயத்தில் வழக்கம் போல பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் […]
சென்னையில் தமிழரை காணோம் – பான்பராக் வாய்களால் நிறம்பிவிட்ட மாநகரம்!!
சென்னையில் எங்கு பார்த்தாலும் வடநாட்டுக்காரர்கள் தான் எனும் அளவிற்கு தற்போது நிலைமை உள்ளது . அவர்களுடைய அங்க அடையாளங்கள் வைத்து இவர்கள் தமிழர்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கடைத்தெருக்களில் காய்கறி மார்கெட்களில் பெண்களை இடித்து நகட்டிக்கொண்டு சாதாரணமாக போகிறார்கள். யாருக்கும் அடுத்த பெண்களை இடிக்கிறோம், நெருக்கமாக முட்டுவது போல நடக்கிறோம் என்கிற அக்கறையே இல்லை. காய்கறி மார்க்கெட்டில் ஒரு பெண் கூறுகிறார்….யப்பா…இதுங்க தொல்ல தாங்கல….ரேசன் கடை போனாலும் இதுங்கதான், குழாயடிக்கு போனாலும் இதுங்கதான் –என்ற சலிப்பு […]
ரஜினியின் பொய்களுக்கு மறுப்பு – சுப. வீரபாண்டியன்
பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் – சுப. வீரபாண்டியன் 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி, ” 1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப் போனாரு” என்று பேசியுள்ளார். “அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, […]