மேற்கு வங்க பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் 74 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மார்ச் 9 ம் தேதி ரெய்னா காவல் நிலைய பகுதியில் உள்ள […]
States News
உபி: கோயில் புனரமைக்க உதவிய முஸ்லிம்களுக்கு, கோயில் செல்ல தடை!
காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் சிறுவன் தண்ணீர் குடிப்பதற்க்காக கோயிலில் நுழைந்ததற்காக ஷ்ரிங்கி யாதவ் என்பவனும் , அவன் சகாக்களும் அந்த சிறுவனின் தந்தை பெயரையும் , அவன் பெயரையும் கேட்டு அச்சிறுவனை பலமாக தாக்கி அதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் சிறுவனின் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருக்க அவனை கோயிலின் வெளியே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சியான காணொளி நடுநிலையாளர்களையும், பாசிசத்திற்கு எதிரான மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. […]
உபி : கோயிலில் பூசாரி வெட்டி கொலை; மவுனம் சாதிக்கும் இந்துத்துவாவினர் – காரணம் என்ன?
உபி,ஆக்ரா: புதிய ஆக்ரா போலீஸ் அதிகார எல்லைக்குட்பட்ட ஆக்ராவின் மவு கிராமத்தில் 55 வயதான கோயில் பூசாரி ஒருவர் கோடரியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றம் நடந்த சில மணி நேரங்களுக்குள் சந்தேக நபரை கைது செய்தனர். புதன்கிழமை காலை 6:30 மணியளவில் கோயில் வளாகத்தில் ரத்தக் கறை படிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை சம்பவ இடத்தை அடைந்து விசாரணையைத் தொடங்கியது. கொலை நடைபெற்ற முந்தைய […]
குஜராத்: தலித் ஆர்டிஐ செயற்பாட்டாளரின் கொலை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார்!
குஜராத்: சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதியின்றி தலித் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை பலமுறை எழுப்பியதை அடுத்து, “ஒழுக்கமின்மை” காரணமாக குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மாநில சட்டமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியின் உத்தரவின் பேரில் அவர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல கடந்த வியாழக்கிழமையும் இதே காரணத்திற்காக ஜிக்னேஷ் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 2 ம் தேதி போலீஸ்ஸார் […]
கேரள முதல்வருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு: அமலாக்கத்துறையினர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு !
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மத்திய விசாரணை நிறுவனமான அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மீது கேரள காவல்துறை வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது. கேரள முதலமைச்சருக்கு எதிராக பொய்யாக குற்றம்சாட்டிட அமலாக்க துறை அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஸ்வப்னா கூறியுள்ளதன் அடிப்படையில் கேரள போலீசார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். சதி, அச்சுறுத்தல் மற்றும் தவறான அறிக்கையை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துதல் போன்ற ஜாமீனில் வெளிவராத குற்றங்களின் பேரில் எஃப்.ஐ.ஆர் […]
தெலுங்கானா கலவரம்: 150 இந்து வாகினி அமைப்பினர் கைது; பாஜக எம்பி கைதுக்கு கண்டனம் – மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மிரட்டல் !
தெலுங்கானா: கடந்த மார்ச் 7 ஆம் தேதி பைன்சாவில் நடந்த இனக் கலவரத்தைத் தூண்டியது வலதுசாரி அமைப்பான இந்து வாகினி என்று தெலுங்கானா மாநில காவல்துறை (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இத்தீவிர இந்துத்துவா அமைப்பின் உறுப்பினர்களான தோட்டா மகேஷ் மற்றும் டட்டு படேல் ஆகிய இருவரால் கலவரம் தொடங்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. மார்ச் 7 ம் தேதி பைன்சா நகரில் வன்முறை வெடித்தது, இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். நான்கு வீடுகள், 13 […]
திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவா? – ஓர் அலசல் பார்வை
திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தை அங்கீகரிக்கின்ற வகையில் இருக்கின்ற வாசகங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ‘இதுதான் நியாயமா?’ என நல்லிதயங்களைத் துடிக்க வைப்பவையாய் இருக்கின்றன. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டு பாகுபாடு காட்டுவது திராவிட சித்தாந்தத்துக்கு நேர் எதிரானதாகும். அதற்குத் துணை போகின்ற வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருப்பது தகுமா? இந்திய வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த சிஏஏ எதிர்ப்பு மக்கள் போராட்டத்தையும், தன்னெழுச்சியாக நடந்த மகளிர் ஷாஹீன் பாக் போராளிகளையும், உயிரையே […]
‘பாஜக வுக்கு ஓட்டு போடாதீங்க’ – விவசாயிகள் கூட்டமைப்பு சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தல் !
விவசாயிகள் மற்றும் மேற்கு வங்காள மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) வலியுறுத்தி உள்ளது. தேர்தல் தோல்வி மூடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பாஜக அரசை கட்டாயப்படுத்தும் என்று எஸ்.கே.எம். தெரிவித்துள்ளது. “நாங்கள் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்கவில்லை, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கூறவில்லை, ஆனால் பாஜகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே […]
தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி பெயரை குறிப்பிட அமலாக்கத்துறை கட்டாயப்படுத்தியது: குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர்..
கேரளாவின் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர், கேரள முதல்வர் பினராயி, பிற மாநில அமைச்சர்கள் மற்றும் இந்த வழக்கில் ஒரு முக்கிய நபரின் மகன் ஆகியோரை பெயரிடுமாறு அமலாக்க இயக்குநரகத்தின் (ED) விசாரணை அதிகாரியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சந்தீப் நாயர் இதை தெரிவித்துள்ளார். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்துவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் ..
கடந்த மார்ச் 8ம் தேதி அன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் சுர்குடாவில் ஒரு கிறிஸ்தவ தனியார் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, சுமார் 70 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கே சென்று வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சுமார் இரவு 8.30 மணியளவில் ஜாகு என்ற நபருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்றுள்ளது, அவ்விடத்தில் சுமார் 30 பேர் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். கும்பலில் இருந்த சிலர் ஆயுதங்களை வைத்திருந்தாகவும், […]
உபி : முபாரக் கான் தர்காவை இடிக்க தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் !
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள தர்கா முபாரக் கான் ஷஹீத்தில் அமைந்துள்ள எந்தவொரு கட்டமைப்பையும் இடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம், உபி அரசுக்கு திங்களன்று நோட்டீஸ் அனுப்பியது. புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் தனது மிகப் பிரபலமான கதைகளில் ஒன்றான ‘இத்கா’வை தர்கா முபாரக் கான் ஷஹீதில் வைத்து எழுதினார், இது தர்காவை பிரபலமாக்கியது. இந்த விவகாரத்தில் நீதிபதி நவின் சின்ஹா மற்றும் நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரபிரதேச மாநிலத்திற்கு நோட்டீஸ் […]
உபி : 16 வயது சிறுவனுக்கு ஆசன வாயில் வழியாக காற்று செலுத்தப்பட்டதில் கொடூர மரணம் !
பிலிபிட்: உபி யில் 16 வயது சிறுவனைப் பிடித்து, ஆசனவாயில் வழியாக உயர் சக்தி கொண்ட காற்று அமுக்கி மூலம் காற்றை உந்தி, அவரது உள் உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர் மூன்று கயவர்கள். பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்துள்ளார். சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்ததையடுத்து, 22 முதல் 26 வயது இடையிலான மூன்று நபர்கள் மீது பிலிபிட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் […]
உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !
உபி ஹத்ராஸில் உள்ள புல்கரி கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், உயர் சாதியை சேர்ந்த நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் உயிர் இழந்தார். பெண்ணின் மரணம் மற்றும் நள்ளிரவில் அவரது குடும்பத்தின் அனுமதியின்றி யோகியின் காவல்துறையினர் கட்டாய உடல் தகனம் செய்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக அமைந்தது. குடும்பத்தினரையும் ஊடகங்களையும் இறுதி சடங்கிலிருந்து விலக்கி வைத்தனர்,காவல்துறையினர். இது குறித்து செய்தி வெளியிட ஆர்மபத்தில் கோதி மீடியாக்கள் மறுத்தன, […]
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தே.மு.தி.க !
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது தே.மு.தி.க. இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில். “அதிமுக உடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் தே.மு.தி.க. கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. எனவே தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருமித்த முடிவாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்துள்ளோம்.” என கூறப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என தே.மு.தி.க துணை […]
மே.வங்க தேர்தலை 8 கட்டங்களில் நடத்துவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கமும், நடுநிலையாளர்களும் மாநில தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்துள்ளது, தேர்தலில் பாஜக வுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டினர். அரசியலமைப்பின் 14 வது பிரிவு மற்றும் 21 வது பிரிவை மீறியுள்ளதால், மாநிலத்தில் எட்டு கட்ட தேர்தல் நடத்துவதைத் தடுத்து […]