அகமதாபாத், குஜராத்: அண்டை வீட்டுகாரரின் மனைவியுடன் உறவு வைத்திருந்ததாகவும், அப்பெண்ணை அழைத்து கொண்டு ஓடி விட்டதற்காகவும் குஜராத் பாஜக செயற்பாட்டாளர் ஒருவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் உள்ள பருச் மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பருச் பாஜக நகரத்தின் யுவ மோர்ச்சாவின் பொதுச் செயலாளர் ஹிமான்ஷு வைத். இவர் அடிக்கடி தனது அண்டை வீட்டாரின் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்ததாக பிரபல உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. அண்டை வீட்டுக்காரரின் மனைவி கடந்த சில நாட்களாக காணாமல் போனதால் […]
States News
‘முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அது ஒரு தீய வழக்கம்’ – பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப்
உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கடந்த புதன்கிழமையன்று முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து “விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இதை தீய வழக்கம் என்று வர்ணித்த அவர், இதனை இந்தியாவில் தடை செய்யப்பட்ட மூன்று தலாக் சட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் காரணமாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி சப்தத்தின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறி, பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேடுக்கு அமைச்சர் எழுதிய கடிதம் எழுதியுள்ள […]
பாஜக ஆளும் ஹரியானா குர்கானில் செவ்வாயன்று இறைச்சி கடைகள் மூட உத்தரவு !
பாஜக ஆளும் ஹரியானாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் ஒரு தொடர் கதையாக உள்ளது. அதில் ஒன்றாக தற்போது குருக்ராம் மாநகராட்சி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என சட்டம் கொண்டு வந்துள்ளது பாஜக வின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகம். குடிமை அமைப்பின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 129 உரிமம் பெற்ற இறைச்சி கடைகளில், “குறைந்தது 120” செவ்வாயன்று மூடப்படிருந்தது என எம்.சி.ஜி.யின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குருகிராம் மாநகராட்சி மற்றும் குர்கான் […]
டில்லி: ‘நடுரோட்டில் பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட சொல்லி கொடூரமாக தாக்கியவர் மீது வழக்கு பதிவு !
வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் ‘பாகிஸ்தான்/ ஒவைசி முர்தாபாத்’ , ‘இந்தியா ஜிந்தாபாத்’ என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கப்படுகிறார். வீடியோவில் உள்ள மஞ்சள் நிற சட்டை அணிந்தவர் அஜய் கோஸ்வாமி பண்டிட். டெல்லி கலவரம் வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டவர். காணொளி வைரல் ஆனதை தொடர்ந்து அஜய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. வீடியோவில், தாக்கப்படுபவர் சித்திரவதை செய்யப்பட்டு உடல் ரீதியாக தாக்கப்படுகையில் அருகில் உள்ளோர் சிரிப்பதைக் கேட்க முடிகிறது. பாதிக்கப்பட்டவர் கோஸ்வாமியின் கால்களைப் பிடித்து, […]
‘நாங்க ஜெயிச்சா லவ் ஜிஹாதுக்கு எதிரா சட்டம் கொண்டு வருவோம்’- கேரள பாஜக அறிவிப்பு !
கேரளாவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான தனது அறிக்கையை பாஜக புதன்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையில் (இல்லாத) லவ் ஜிஹாதுக்கு எதிராக ஒரு சட்டம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், நிலமற்ற ஒவ்வொரு எஸ்சி / எஸ்டி குடும்பத்திற்கும் ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சபரிமாலாவின் மரபுகளைப் பாதுகாப்பதற்காக சட்டத்தை இயற்றுவோம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் கேரளாவில் உள்ள ஒற்றை பாஜக […]
மோடிக்கு எதிரான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தயாரா ? சிவசேனா கேள்வி!
குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அக்கடிதத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தயாரா என்று ஆளும் சிவசேனா செவ்வாய்க்கிழமை பாஜக விடம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனிடையயே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் சிவசேனா கட்சி செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தது. அதில் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் […]
மே.வங்கம்: குளித்து கொண்டிருந்தவருடன் போஸ் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!
சமீபத்தில் அமித் ஷா முன்னிலையில் பாஜக வில் இணைந்த மே .வங்க சினிமா நடிகர் ஹிரான் சாட்டர்ஜிக்கு கரக்பூர் சதர் தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது. இந்நிலையில் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எந்த அளவிற்கு என்றல் குளித்து கொண்டிருக்கும் ஒருவருடனும் கூட நின்று போஸ் கொடுத்து, வாக்குகளை சேகரித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து இவர் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். மார்ச் 27 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள மே.வங்க […]
மாட்டிறைச்சி என்பது இந்தியாவின் ‘தேசிய உணவு’ – அசாம் பாஜக வேட்பாளர் தேர்தல் பரப்புரை !
ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆதரவாளர்கள் எப்போதும் நாடு தழுவிய மாட்டிறைச்சி தடை கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவர் மாட்டிறைச்சி இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ என்று கூறியுள்ளது, பாஜக வேட்பாளர்கள் ஓட்டு வேண்டுமெனில் எதையும் சொல்வார்கள் என்ற விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது. அசாம் கவ்ரிபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் முஷாரி, முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் ‘மாட்டிறைச்சி’ என்பது இந்தியாவின் […]
கேரள கன்னியாஸ்திரிகள் மீதான பஜ்ரங் தள் அமைப்பினரின் தாக்குதலை கண்டிக்குமாறு கேரள முதல்வர், அமித் ஷாவுக்கு கடிதம் !
உத்தரபிரதேசத்தில் ரயில் பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகள் குழுவை பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதற்கு சிரோ மலபார்-சர்ச் கண்டன அறிக்கை வெளியிட்ட ஒரு நாளில், இந்த சம்பவத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் இந்த தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சரை, பினராயி கேட்டுக் கொண்டார். […]
டில்லி முதல்வரின் அதிகாரங்களை பறிக்கும் விதத்தில் மோடி அரசு கொண்டு வந்த சட்டம்?
மத்திய அரசு சமீபத்தில் தில்லி தேசிய தலைநகரப் பகுதி திருத்த சட்டம் ஒன்றை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த திருத்த சட்டம் சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கனவே தில்லி மாநில அரசிடம் பெரிய அதிகாரம் என்று இருக்கவில்லை. துணை ஆளுநர் வசம்தான் நிறைய அதிகாரங்கள் இருந்தன. சமீபத்திய சட்டம் அந்த அதிகாரங்களை மேலும் அதிகரித்து இருக்கிறது. தில்லி மாநில அரசு ஒரு டம்மி பீஸ் மட்டுமே என்று ஆக்கி இருக்கிறது மோடி அரசு. இந்தத் திருத்த சட்டம் அமுலுக்கு […]
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம், இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் – எஸ்.பி உதயகுமார்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம். இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் என எஸ்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே வழங்கப்படுகிறது. ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய மனித உரிமைகள் மீறல் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான தீர்மானத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய் நின்று வரவேற்போம். பனிரெண்டு ஆண்டு […]
கேரளாவில் பாஜக வேகமாக வளராமல் உள்ளதற்கு 90% கல்வியறிவு விகிதமும் ஒரு காரணம் – பாஜக எம்.எல்.ஏ கருத்து !
திருவனந்தபுரம்: கேரளாவின் ஒரே பாஜக எம்.எல்.ஏ வும் பாஜக தலைவருமான ராஜகோபால், கேரள மாநிலத்தில் பாஜக வேகமாக வளராததற்கான காரணங்களை கூறினார். ‘கல்வியறிவு ஒரு முக்கிய காரணியாகும், கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90%’ என்று அவர் கூறினார். ‘கேரளா ஒரு வித்தியாசமான மாநிலம். இங்கே இரண்டு, மூன்று வெவ்வேறு காரணிகள் உள்ளன. கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90% ஆகும். அவர்கள் எதையும் சிந்திப்பவர்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள், விவாதிக்கின்றனர். இவை படித்தவர்களின் பழக்கம். அதுவும் ஒரு […]
குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !
அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், […]
கோவை: வெடிபொருட்கள் பதுக்கல் வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது !
கோவை: வெடிபொருட்கள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கேரள போலீசாரால் கோவையில் கைது செய்யப்பட்டனர். வெடிபொருள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவின் கீழ் தர்ஷன் குமார்(30), ராஜேஷ் (29) ஆகியோர் மீது கேரளா, திருச்சூர், காட்டூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை, கேரளா போலீசார் தேடி வந்த நிலையில், கோவை ரயில் நிலையம் அருகே குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக, கேரளா போலீசார், கோவை ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். உடனே களத்தில் இறங்கியே […]
‘ஏன் இருவரை மட்டும் பெற்று எடுத்தீர்கள்? இருபது பேரை பெற்றெடுத்து இருந்தால் அதிக ரேஷன் பொருட்கள் கிடைத்திருக்கும்’ – பாஜக உத்தரகண்ட் முதல்வர் கேள்வி!
கொரோனா காலங்களில் உணவு பெற்று கொள்ள போராடும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தலா இருபது குழந்தைகள் வரை பெற்றிருந்தால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பெற்று இருக்க முடியும் என பாஜக வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். “ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 பேர் உள்ள வீட்டில் […]