சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய ‘பங்களாதேஷ் மற்றும் வெளிநாட்டவர்களை ” அடையாளம் காணத் தொடங்குமாரு உ.பி. மாநில டி.ஜி.பி கட்டளை பிறப்பித்துள்ளார். அஸ்ஸாமை தொடர்ந்து உபியில் ( தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சி அமல் படுத்தும் முகமாக டி.ஜி.பி தலைமையகம் பிரத்யேகமாக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.அதன்படி ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், சாலையோரங்கள் மற்றும் சேரி பகுதிகள் ஆகியவற்றில் புதிய குடியிருப்புகளை அடையாளம் காணுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பெரும்பாலும் ஏழை மக்கள், தின கூலிக்கு […]
States News
’43 மாதங்களாக சம்பளம் இல்லை’! – அரசு நியமித்த மதரஸா ஆசிரியர்களின் நிலை!
கடந்த 43 மாதங்களாக(!) மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை எதிர்க்கும் விதமாக உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள மதரசா ஆசிரியர்கள் கடந்த திங்களன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர். மதரஸாக்களை நவீனமயமாக்குவதற்கான பாஜக தலைமையிலான அரசாங்க திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் தான் இந்த ஆசிரியர்கள். மதரஸாவில் தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் (SPQEM), உ.பி.யில் பணியமர்த்தப்பட்ட 21,000 க்கும் மேற்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுவது இல்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா […]
சிறுமி பாலியல் பலாத்காரம்;பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
2016-ஆம் ஆண்டில் 16 வயது சிறுமியை போதைப்பொருள் செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பனாஜி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ அடனாசியோ மான்சரேட் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு IPC 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பிரிவு (போக்ஸோ) சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை அக்டோபர் 15 முதல் தொடங்கும் என கடந்த வியாழன்று கோவா வடக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் […]
பெண் காவலரிடம் தவறான பேச்சு; பாஜக எம்எல்ஏ கைது !
ஒருபுறம், பாரதீய ஜனதா-சிவசேனா காட்சிகள் எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தீர்மானிப்பதில் மும்முரமாக உள்ளது. மறுபுறம், மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாஜக எம்எல்ஏ சரண் வாக்மரே ஒரு பெண் காவலர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதால் போலீசாரால் சனிக்கிழமை (28-9-19) கைது செய்யப்பட்டார். இவர் மகாராஷ்டிராவில் உள்ள தும்சர் மொஹாடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஆவர். […]
ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; டாக்டர் கஃபில் கான் குற்றமற்றவர் என ஊர்ஜிதம்!
உபியில் 60 குழந்தைகள் மரணித்த சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் டாக்டர் கஃபில்கான் குற்றமற்றவர் என்று அறிவிப்பு ! கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உபி மாநில கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்டர் கஃபில் கான் தனது சொந்த பணத்தை செலவு செய்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்தார்.தன்னால் இயன்ற அளவு உயிர் சேதம் […]
கர்ப்பிணி பெண்ணின் ஆடை களையப்பட்டு கடும் தாக்குதல்!-குழந்தையை பறிகொடுத்த தாய்!
“செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த போதிலும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யாததால் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களை அணுகி உள்ளனர்”…
மக்கள் தூர்வாரிய கால்வாயை, அரசு தூர்வாரியதாக காட்டி 5 லட்சம் ரூபாய் அபேஸ்?!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாசன கால்வாயை தூர்வாராமலேயே அரசு அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் செலவு கணக்குக் காட்டி சுருட்டி விட்டதாக விவசாயிகள் புகார் !
உ.பி யில் “ரொட்டியும், உப்பும்” தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு ! – வைரல் வீடியோ
“ஒரு சமயம் குழந்தைகளுக்கு ரொட்டியும் உப்பும் கிடைக்கும், மறு சமயம் அரிசியும் உப்பும் அரிதாக ஏதேனும் ஒரு நாள் பால் வந்தடையும். ஆனால் அது ஒருபோதும் பகிர்ந்து அளிக்கப்படுவது கிடையாது. வாழைப்பழம் அப்படி தான் பகிர்ந்து அளிக்கப்படாது. கடந்த ஒரு வருடமாக இதே நிலைதான் நீடிக்கிறது”…..
வெள்ள பாதிப்பிற்கு 4,432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- கேரளா, தமிழகம் புறக்கணிப்பு!
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் அளவிற்கும் அதிகமாக மழைபெய்ததாலும் சரியான நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லாததாலும் வெள்ளம் ஏற்பட்டது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சில கேரளா, ஒடிஷா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகாவாகும். இன்றைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவில் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு கூடுதலாக 4432 ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபானி சூறாவளி புயலால் பாதிக்கபட்ட ஒடிஷாவிற்கு 3338.22 […]
கேரள வெள்ளத்தில் கோயிலை சுத்தம் செய்யும் முஸ்லிம் இளைஞர்கள் : மக்களின் ஒற்றுமையும் குவியும் பாராட்டுக்களும்
மழை சற்று குறைந்து வருவதால் , கேரளம் மெல்ல இயல்பு நிலைக்கு மாறிட முயற்சித்த நிலையில் உள்ளது. பல நாட்களாக நீருக்கடியில் இருக்கும் கட்டிடங்களை சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. வயநாடு சுல்தான் பத்தேரி எனும் பகுதியில் உள்ள ராமர் கோயில் இரண்டு நாட்களுக்கும் மேலாக முழுவதுமாக தண்ணீருக்கு அடியில் இருந்தது . ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் குறைந்துவிட்ட நிலையில், முஸ்லிம் யூத் லீக்கின் (வெள்ளை காவலர்கள்-white guards ) தன்னார்வத் தொண்டர்கள் கோயிலை சுத்தம் செய்ய களம் […]
பாஜகவினரை விரட்டியடித்த அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் !
பாஜக-வில் இணையுங்கள், ‘ஒரு மிஸ்டுகால்’ கொடுங்கள் என தொலைக்காட்சி, வானொலி என எங்கு பார்த்தாலும் தற்போது பாஜக-விற்கு ஆள் சேர்க்கும் வேலை முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் மத்தியிலும் ஆள் சேர்க்க முயன்று வருகிறது பாஜக . அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை செய்ய வந்த பி.ஜே.பி.-யை எதிர்த்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் […]
குஜராத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட மறுத்ததால் 3 முஸ்லீம் மாணவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்- போலீசார் வழக்கை திசை திருப்பவும் முயற்சி!
ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு 11 மணியளவில் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கோத்ராவில் மூன்று முஸ்லீம் மாணவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நண்பர்கள், சமீர் ஹபீஸ் ஃபகத், சோஹல் ஹபீஸ் பகத் மற்றும் சல்மான் ஆகியோர் தேநீர் அருந்துவதற்காக இரவில் வெளியே சென்றிருந்தபோது, சுமார் ஆறு அல்லது ஏழு ஆண்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தி பிறகு கூற மறுத்ததால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.மூன்று முஸ்லீம் […]
ஜார்கண்டில் 3 வயது குழந்தையை கடத்தி,கூட்டு பலாத்காரம் செய்து,தலை துண்டித்து கொன்றுள்ளனர் ஈன பிறவிகள்.
Image used for representational purposes -istock கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெத்பூர் டாடா நகர் ரயில் நிலையத்தில் தன் தாயுடன் உறங்கி கொண்டிருந்த 3வயது சிறுமியயை இரண்டு கயவர்கள் கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட பின்னர் அப்பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, தலையை துண்டித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 30) இரவு ரயில் நிலையத்திலிருத்ந்து 4 கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் […]
“ஜெய்ஸ்ரீராம்” கூற மறுத்து “அல்லாஹூ” வையும் திட்ட மறுத்ததால் உயிருடன் கொளுத்தப்பட்ட 15 வயது முஸ்லிம் சிறுவன் மரணித்தார் -உபி யில் காட்டுமிராண்டி சம்பவம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காலித் அன்சாரியை (15 வயது) “துதாறி” பாலத்தருகே 4 நபர்கள் முகங்களை மூடிய நிலையில் கடத்தி சென்று அவர் மீது கிரோசின் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இந்த காட்டுமிராண்டிதனமான சம்பவத்தில் மரணித்த அந்த சிறுவன் கூறியவைகள்: 4 பேரில் இருவர் என்னுடைய கைகளை பிடித்துக் கொண்டனர். அனைவருடைய முகங்களும் துணிகளால் மறைத்து வைத்திருந்தனர்.அதில் ஒருவன் “சுனில் இவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்றவை, இதனால் இவன் தானாகவே இறந்துவிடுவான்” என்று […]
இந்துத்துவ அமைப்பை எதிர்த்து சவால் விட்டதால் திவிக நிர்வாகி கைது!
சனிக்கிழமையன்று(27-7-19) கோவை காட்டூர் போலீசார் திராவிடர் வி டுதலை கழக (திவிக)மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக “மாட்டுக்கறி உணவு உரிமை” குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அவாரம்பாளையத்தைச் சேர்ந்த வி.மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத ஜூலை 11 ம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள போர்வாச்சேரியில் முஸ்லீம் வாலிபர் மாட்டுக்கறி சூப்பு சாப்பிட்டதற்க்காக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. […]