கடந்த வாரம் கேரளாவின் கதிரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னியம் நயனார் சாலையில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடி மீது வெடிகுண்டு வீசிய குற்றத்தின் பேரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கை சேர்ந்த கே.பிரபேஷை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கேரளாவில் உள்ள மலால் பகுதியை சேர்ந்த அவர் சம்பவத்தன்று வெடிகுண்டை வீசிவிட்டு கோவையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் பதுங்கி உள்ளார். வெடிகுண்டு வீசிய தீவிரவாதியை தேடி வந்த திரு.நிஜீஷ் தலைமையிலான போலீசார் தீவிரவாதி பிரபேஷை அவரது […]
States News
டெல்லி ஷஹீன்பாக்: வயசானாலும் வீரம் குறையாத புரட்சி பெண்கள்!
டெல்லி ஷஹீன்பாக்கில் சிஏஏ , என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தை வழிநடத்தும் அஸ்மா காத்தூன் (90), பில்கீஸ் (82), சர்வாரி (75) ஆகிய மூன்று பாட்டிகளை கண்டு இன்று உலகமே வியப்பில் உள்ளது. நாங்கள் காந்தியின் வாரிசுகள்: “ராணிகளே, தேசமக்களின் தாய்மாரே, வீரர்களின் மனைவிகளே ஈமானின் நல்வாழ்த்து பெற்ற நீங்கள் இந்த பூமியின் ஆசிர்வாதம் ஆவீர்கள்” — என்கிற 1905ம் ஆண்டு சுதந்திர போராட்டக்களத்தில் நெஞ்சுரத்துடன் களமிறங்கிய பெண்களை கண்ணியப்படுத்தும் விதமாக மௌலானா அல்தாப் ஹுசைன் […]
பால் பாக்கட்டை திருடி செல்லும் உபி போலீசார் – வசமாக சிக்கிய வீடியோ !
உபி போலீசார் பால் பாக்கட்டை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் ஆன்லைனில் வெளியானதை அடுத்து வைரலாக பரவி வருகிறது. ஜனவரி 19 ம் தேதி அதிகாலையில் நொய்டா போலீசார் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் சீருந்து கடை ஒன்றின் அருகே வந்ததும் நிறுத்தபடுகிறது. உடனே வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் காவலர் ஒருவர் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடப்பதை காண முடிகிறது. பிறகு பால் அடுக்கி […]
பள்ளிவாசலில் நடைபெற்ற இந்து திருமணம், நகை பணம் வழங்கியும் உதவிய ஜமாத்தார் !
பள்ளிவாசல் ஜமாத்தார் உதவி: நேற்று கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள செருவள்ளி முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு இந்து தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது. கணவரின் மரணத்தைத் தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த மணமகளின் தாய் பிந்து, உதவிக்காக மசூதி குழுவை அணுகியதை அடுத்து அவரின் கோரிக்கையை ஜமாத்தார் உடனடியாக ஒப்புக்கொண்டனர். மணமகள் அஞ்சு மற்றும் மணமகன் சரத் ஆகியோர் மசூதி வளாகத்தில் ஒரு பூசாரி முன்னிலையில் மாலைகளை பரிமாறிக்கொண்டு இந்து முறைபடி சடங்குகளைச் செய்து […]
NIA சட்டத்தை எதிர்த்து சட்டிஸ்கர் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம், 2008 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து சட்டிஸ்கர்: இதன் மூலம் NIA சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முதல் மாநிலமாக சட்டிஸ்கர் ஆகியுள்ளது. அதே போல கேரள அரசும் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தை எதிர்க்க இந்திய அரசியலமைப்பின் 131 வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசங்கத்திற்கு மத்திய அரசுடன் […]
ரஜினியின் பொய்களுக்கு மறுப்பு – சுப. வீரபாண்டியன்
பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் – சுப. வீரபாண்டியன் 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி, ” 1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப் போனாரு” என்று பேசியுள்ளார். “அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, […]
‘அர்ஜுனர் அம்பில் அணுசக்தி..மகாபாரதத்தில் விமானம்’- மே. வங்க ஆளுநரின் கருத்துக்கு விஞ்ஞானிகள் கடும் விமர்சனம்..
..அவர் பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறிகளைக் வெளிகாட்டுகிறார். விஞ்ஞானிகளாகிய எங்களுக்கு இத்தகைய விஷயங்களைக் கேட்கும்போது கோபம் வருகிறது..
உபி : சமஸ்கிருத பல்கலையில் போட்டியிட்ட 4 சீட்டுகளிலும் ஏபிவிபி படுதோல்வி!
உபி வாரணாசியில் உள்ள சம்பூர்நாடு சமஸ்கிருத விஸ்வவித்யாலயாவில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் பாஜக வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இந்திய தேசிய மாணவர் சங்கத்திடம் (என்எஸ்யுஐ) தோல்வியடைந்தது. முன்னதாக 2019 தேர்தலில் 4 சீட்டுகளிலும் வெற்றி பெற்ற ஏபிவிபி தற்போது அனைத்து சீட்டுகளையும் இழந்துள்ளது. வாரணாசி என்பது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியாகும், கூடுதலாக இந்துத்துவ ஆதித்யநாத் ஆளும் மாநிலமாகவும் இருப்பதால் இது இந்துத்துவாவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏபிவிபி […]
குஜராத்: தலித் இளம்பெண்(19) கற்பழித்து கொலை – 4 பேர் கும்பல் அராஜகம் !
கண்டுகொள்ளாத மீடியா: குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் 19 வயது தலித் சமூக பெண் ஒருவரை கடத்தி, கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்து, பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. எனவே தான் இது குறித்த செய்தி எந்த தொலைக்காட்சியிலும் முக்கியத்துவத்துடன் காண்பிக்கப்படவும் இல்லை. அலைக்கழித்த போலீஸ்: கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி , எங்கள் வீட்டு பெண் எங்கு தேடியும் காணவில்லை என […]
குஜராத்: CAA வுக்கு ஆதரவாக கடிதம் எழுத கட்டாயப்படுத்தி பிறகு எதிர்ப்பால் பின்வாங்கிய பள்ளி நிர்வாகம்!
குஜராத்தின் அகமதாபாத் கங்காரியா பகுதியில் உள்ள லிட்டில் ஸ்டார் பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் CAA வுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகளை எழுதுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்த பட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் அராஜகம் : “வாழ்த்துக்கள். இந்திய குடிமகனான நான், CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) கொண்டு வந்ததற்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் இதை ஆதரிக்கிறோம்.” என்ற வாசகத்தை ஆசிரியர்கள் […]
CAA வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முஸ்லிம் தலைவராக தேர்வு; அசத்திய கிராம மக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்திலுள்ள செரியலூரினம் எனும் கிராமத்தில் தான் இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது. கிராம்ப்பஞ்சாயத்து தலைவராக அவ்வூரை சேர்ந்த ஜியாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் அந்த கிராமத்தில் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமகன் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இந்த முடிவினை எடுத்ததாக அறிவிக்கிறார் உள்ளூர்வாசியான சி.ராஜகோபால். எங்கள் ஊரிலும்சுற்றி உள்ள மற்ற ஊர்களிலும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிகள் ஏலம் […]
உள்ளாட்சி தேர்தல் : 79 வயதில் வெற்றி பெற்று அசத்திய மூதாட்டி !
கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வரும் வேளையில் மதுரையை சேர்ந்த 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அவர் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பதவியில் ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு தோல்வியுற்ற மூதாட்டி விடாமுயற்சியுடன் போராடி […]
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர் ..
புதிதாக விரிவுபடுத்தப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்கப்படாததை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்ராம் தோப்டேவின் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை புனே மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடினர். சுமார் 40 ஆதரவாளர்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்திற்குள் இருந்த தளபாடங்களை உடைத்து, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தோப்டே போர் (Bhor) தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். சிவசேனாவின் குல்தீப் சூடம் கோண்டேவை 2014 மற்றும் 2019 ஆம் […]
உபி : போராளி பெற்றோர் சிறையிலடைப்பு; பாசம் தேடி அழும் 14 மாத குழந்தை!
ரவி சேகர் – ஏக்தா இருவரும் வாரணாசியில் வாழும் தம்பதியர். இவர்களுக்கு ஆர்யா என்ற 14 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த 19ம் தேதியன்று, வாரணாசியில் இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கெதிரான அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தம்பதியர் இருவருமாக இணைந்து காற்று மாசுப்பாடினை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் NGO அமைப்பு ஒன்றிணையும் நடத்தி வருகின்றனர். உபி வாரணாசியில் தடையை மீறி நடத்தப்பட்ட அந்த சிஏஏ அமைதி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்று […]
CAA, NRC க்கு எதிராக பிராமண அர்ச்சகர்கள் நடத்திய போராட்டம்!
சிஏஏ மற்றும் என்.ஆர்.சி க்கு எதிராக சாதி மதம் கடந்து இந்திய அளவில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொல்கத்தாவின் மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே கடந்த திங்களன்று (30-12-19) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகள் கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பஸ்ச்சிம் பங்கா சனாதன் பிராமின் எனும் […]