குஜராத் அகமதாபாத் மோட்டேராவில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கை திறந்து வைத்தார். விரிவான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட இந்த புதிய அரங்கில் விரைவில் முதல் சர்வதேச போட்டி புதன்கிழமை தொடங்க உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்றாவது டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. புதிய ஸ்டேடியத்தில் 1,10,000 […]
States News
உபி: தர்காவில் நுழைந்து பாசிஸ்டுகள் வெறியாட்டம்; முதியவர் தாக்கப்பட்டு விரட்டியடிப்பு ..
உபி மாநிலம் , அம்பேத்கர் நகரில் உள்ளது வரலாற்று சிறப்புமிக்க “ஷாஹ்நூர் பாபா” தர்கா. இந்த பாபாவுடைய தர்கா அப்பகுதியில் மிகப்பிரபலமில்லை என்ற போதும் இந்துக்களும் முஸ்லீம்களும் அங்கே மிக இணக்கமாக சகோதர பாசத்தோடு பழகிவந்துள்ளனர். உரூஸ் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் அங்கு நடக்கப்பெறாது காரணம் அது மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒர் இடம் ஆதலாலும் மக்கள் பரவலாக வந்துபோகாத இடம் என்பதாலும் அங்குள்ளவர்கள் மட்டுமே வழிபடுவார்கள். இந்நிலையில் நூற்றாண்டு காலமாக பாபாவின் தர்காவினை பராமரித்து […]
டில்லி: தனியார் பள்ளிகளில் முற்றிலுமாக ஒதுக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!
புது டில்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முந்தைய (Pre-Primary) நிலையிலேயே முஸ்லிம் குழந்தைகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. டில்லி பல்கலைக் கழக சமூகப்பணித் துறையின் ஆராய்ச்சி வல்லுநரான ஜன்னத் ஃபாத்திமா ஃபரூக்கி மற்றும் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசகரான சுகன்யா சென் ஆகியோர் இணைந்து டிசம்பர்-2020ல் சமர்பித்த “இந்தியாவில் தொடக்க நிலை கல்வியில் ஓரங்கட்டப்படும் முஸ்லிம் குழந்தைகள்: டில்லி தனியார் பள்ளிகளில் நர்சரி சேர்க்கை பற்றிய அலசல்” என்ற ஆய்வறிக்கையில் […]
போதை பொருள் கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி கைது ..
இது குறித்த கருத்து தெரிவித்த மே.வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா பேசிய போது, இது திட்டமிட்ட சதி என்றும் பமீலாவின் காரில்..
உபி : திருட்டு பட்டம் சுமத்தி ரேஹான், ஷாரூக் மீது கொலைவெறி தாக்குதல்; ஒருவர் பலி !
உபி மாநிலம் பரேலி பகுதியில் வசிப்பவர்கள் ரேஹான் மற்றும் அவரது நண்பர்ஷாருக், சம்பவத்தன்று நந்தன்சிங் என்பவரது வீட்டுச்சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்ததை கண்ட நந்தன்சிங்கும் அவரது குடும்பத்தினரும், இருவரும் தங்களது வீட்டிற்கு திருட வந்திருப்பதாக நினைத்து அடித்து உதைக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத நந்தன்சிங் குடும்பத்தினர் இருவரையும் வலுவான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரேஹான், பரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மேல் சிகிச்சைக்கு வசதிகள் இல்லை என கூறி மருத்துவர்கள் டெல்லிக்கு அனுப்பி […]
அமித் ஷா பேரணியில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்த பெண்கள் !
மேற்கு வங்காளத்தின் நம்கானாவில் வியாழக்கிழமை, அமித் ஷாவின் பேரணியின் போது, சில பெண்கள் அவருக்கு கருப்பு கொடியைக் காட்டினர், இதனால் நிகழ்ச்சி தாற்காலிகமாக சிறிது நேரம் தடைப்பட்டது. அமித் ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி ஷாவுக்கு முன்னால் கறுப்புக் கொடிகளுடன் கோஷம் எழுப்பினர் என மேற்கு வங்காள நாளேடான சங்க்பாத் பிரதிடினின் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள் தடைகளையும் மீறி எதிர்ப்பு தெரிவித்ததால் இதை சற்றும் எதிர்பாராத அமித் ஷாஅதிர்ந்து போனார், உடனே நிலைமையை […]
உ.பி : கை, கால் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகளின் உடல்கள் சடலமாக மீட்பு..
தலைமை பூசாரி ஆளும் மாநிலமான உபி யில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் உபி உன்னாவோவில் புதன்கிழமையன்று வயலில் இறந்த நிலையில் இரு தலித் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், உ.பி. காவல்துறை இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாபுரா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. […]
கோ பேக் மோடி ட்வீட் எதிரொலி-நடிகை ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் புகார்!
மோடி தமிழகம் வருகையின் போது , பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஓவியாவும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்வீட் செய்தார். இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் என்பவர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்துள்ளார். “பிரதமர் மோடி இந்தியாவின் இறையாண்மையை காப்பதில் முக்கியமான பங்கு உடையவர். பிரதமர் தமிழகம் வரும்போது சமூக வலைதளத்தில் ‘கோ பேக் மோடி’ என கருத்தை பதவிட்டு பொது […]
கூகுல் சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த உபி காவல்துறை !
பிரதமர் நரேந்திர மோடியை குறித்து வீடியோ ஒன்றில் அவதூறு உள்ளதாக கூறி, உத்தரபிரதேச வாரணாசியில் உள்ள காவல்துறையினர் கடந்த வாரம் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் மற்றும் 17 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர், பிறகு இது குறித்த செய்தி வெளியானதும் மேற்குறிப்பிட்டோரின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் இருந்து காவல்துறை அதிகாரிகள் நீக்கினர். இந்த வழக்கில் “சம்பந்தப்படவில்லை” என்று கண்டறியப்பட்ட பின்னர் சுந்தர் பிச்சை மற்றும் மூன்று கூகிள் உயர் அதிகாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன, […]
குஜராத் இனக்கலவரம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னும் சொல்லொண்ணா துயரில் முஸ்லிம்கள்!
பாஜக-மோடி ஆட்சியில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமார் 17,000 முஸ்லிம்கள் இன்றளவும் துன்பங்களைச் சுமந்து மாநில, மத்திய அரசுகளின் உதவியை எதிர்பார்த்து துயர வாழ்க்கையில் உழல்கின்றனர். மிக மோசமான நிலையில் முஸ்லிம்கள்: இனக்கலவரத்தால் தங்களுடைய வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மிக ஏழ்மையான முஸ்லிம்கள், மறுவாழ்வு மையம் என்ற பெயரில் மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற வகையில் அமைக்கப்பட்ட சிதிலமடைந்த தற்காலிக கூடாரங்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய […]
அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம்: தருண் கோகோய்
குவாஹாட்டி: அசாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் பதவிக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். அஸ்ஸாமிற்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்க படலாம் என்று நான் சந்தேகிக்கிறேன், ” என்று கோகோய் […]
சிஏஏ க்கு எதிராகப் போராடியதாக அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது ..
உபி : அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சமூகசெயல்பாட்டிற்கான படிப்பில் முதுநிலை இறுதியாண்டு பயிலும் ஃபர்ஹான் ஜூபேரி, அதே துறையில் இளநிலை பயிலும் ரவிஷ் அலிகான் என்ற இரு மாணவர்கள் CAA-வுக்கு எதிராகப் போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 28 ஆம் தேதி வியாழக்கிழமை உ.பி போலீஸால் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்ட ரவிஷ் அலிகான் பிறகு விடுவிக்கப்பட்டாலும், பர்ஹான் சிறையில் அடைக்கப்பட்டார். ஊரடங்கில் கைது வேட்டை: கொரோனாவுக்காக நான்காம் கட்ட ஊரடங்கை நாடு எதிர்கொண்டுள்ள […]
‘இது குஜராத். உன்னை சுட்டு கொன்றால் எனக்கு பதவி உயர்வு தான் கிடைக்கும்’ – வழக்கறிஞர் பிலாலை மிரட்டிய போலீஸ்!
குஜராத் மாநிலத்தில் உள்ள கொசம்பா என்ற ஊரில் பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான FIR நகல் வேண்டும் எனக் கோரியதற்காக அக்காவல் நிலைய ஆய்வாளர் வழக்கறிஞர் பிலாலை லாக்-அப்பில் 8 மணி நேரம் அடைத்து வைத்துள்ளார். பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் கொசம்பா காவல்நிலையம் சென்று புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டாலும், மறுநாள் வந்து FIR நகல் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் […]
கள்ளக் காதலியைக் காணச் சென்று காலை உடைத்துக் கொண்ட பா.ஜ.க பிரமுகர்!
51 வயதான சந்தர் பிரகாஷ் கதூரியா ஹரியானா பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர். அம்மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், கர்னால் தொகுதியில் கடந்த 2019 ஆம் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகவும் போட்டியிட்டவர் கதூரியா. கடந்த வெள்ளியன்று சண்டிகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணைக் காண சென்றுள்ளார் கதூரியா. அப்போது வீட்டில் திடீரென காலிங் பெல் ஒலிக்கவே, ஒரு துணியை கொண்டு இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து தப்பிக்க முயன்ற போது, […]
பாதாளச் சிறையை விட மோசமான நிலையில் குஜராத் பொது மருத்துவமனை: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
குஜராத்: கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக செயற்கையாக சித்தரிப்பதாகவும், கொரோனா சிகிச்சைக்கென மாநிலத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையான அஹமதாபாத் பொது மருத்துவமனை பாதாளச் சிறையை விட மோசமான நிலையில் இருப்பதாகவும் அம்மாநில அரசின் மீது குஜராத் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வரை குஜராத்தில் கொரானாவால் ஏற்பட்ட மொத்த மரணங்களில் 45% , அதாவது 377 மரணங்கள் அஹமதாபாத் மருத்துவமனையிலே தான் நடந்துள்ளன. நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஐலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ” […]