New India Pakistan

இந்தியாவுக்கு உதவுங்கள் என ட்ரெண்ட் செய்து வரும் பாகிஸ்தான் மக்கள்; உதவிக்கரம் நீட்டும் பாகிஸ்தான்..

புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ முன்வந்தள்ள பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பு எடி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பைசல் எடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். எடி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தனது கடிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் துணை ஊழியர்களை உள்ளடக்கிய குழுவுடன் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி கோரி எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு […]

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !
Delhi Pogrom Hindus Pakistan

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !

கராச்சி: கடந்த மாதம் இந்திய தலைநகரில் பாசிஸ்டுகளின் வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்துச் சென்றனர். மேலும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை (இன்று) ஆரவாரமின்றி மிகவும் அமைதியான முறையில் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் சிறுபான்மையினர்: 210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் 2 சதவிகிதம் இந்துக்கள் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் தெற்கு சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆண்டு தோறும் ஹோலி பண்டிகையின் […]

பாகிஸ்தான் ஹபீஸ் சையத் தீவிரவாத மும்பை பயங்கரவாத தாக்குதலில்
Pakistan Terrorism

பாகிஸ்தானின் ஹபீஸ் சையதிற்கு 5.5 ஆண்டு சிறை;பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பயங்கரவாத நிதியுதவி தொடர்பான வழக்கில் லஷ்கர்-இ-தயாபாவின் நிறுவனரான ஹபீஸ் முஹம்மது சயீத்துக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் போது சயீத் இரண்டு வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகள்: பாகிஸ்தான் சட்டத்தின் கீழ் “தடைசெய்யப்பட்ட அமைப்பில்” உறுப்பினராக இருந்ததற்காக ஆறு மாத சிறைத்தண்டனையும், “சட்டவிரோத சொத்து” தொடர்பான குற்றச்சாட்டுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என […]

பாகிஸ்தான் இந்துக்கள் துன்புறுத்தல்
Hindus Pakistan

பாகிஸ்தான்: இந்துக்கள் மனம் புண்படும்படி பேனர் வைத்தவர், வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பின்பும் பதவியில் இருந்து அதிரடி நீக்கம் !

பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர் மியான் அக்ரம் உஸ்மான். அவர் தெற்கு லாஹூர் பகுதியின் கட்சி பொது செயலாளராக உள்ளவர். இந்நிலையில் காஷ்மீர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 5ம் தேதி தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் மனம் புண்படும்படி சில பேனர்கள் தென்பட்டுள்ளது. உடனே கட்சி மேலிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பிரிண்ட் எடுக்கும் […]

சீனா பாகிஸ்தான் மாணவர்களை
Just In Pakistan

சீனாவில் உள்ள பாகிஸ்தான் மாணவர்களை கைவிட்ட பாகிஸ்தான் அரசு – வலுக்கும் கண்டனம்!

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்க, இந்தியா, பங்களாதேஷை சேர்ந்த மாணவர்களை அரசாங்கங்கள் அக்கறையுடன் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்று விட்டன, எனினும் பாகிஸ்தான் நாட்டு அரசாங்கம் தங்கள் சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க தவறி உள்ளது. மாணவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யவில்லை. சீனாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உணவு கூட கிடைக்க வழியின்றி பாகிஸ்தான் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாகிஸ்தான் தூதரகத்தை […]

pakistan india modi imran khan
International News Pakistan

இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கும் மோடி அரசு ..

டெல்லியில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. எஸ்.சி.ஓ வில் அங்கம் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகள் 4 பார்வையாளர்கள் மற்றும் பிற சர்வதேச உரையாடல் கூட்டாளர்களுக்கும் ( international dialogue partners) அழைப்பு விடுக்கப்படும். பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை […]

pakistani hindus
CAA Pakistan

‘யாருக்கு வேண்டும் உங்கள் குடியுரிமை ஆஃப்பர்’ – பாகிஸ்தானி இந்துக்கள் பதிலடி !

எங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் குடியுரிமை வேண்டாம் என மோடி – அமித் அளித்த அற்புத ஆஃபரை நிராகரித்த பாகிஸ்தான் இந்து கவுன்சில்கள். மோடி இந்திய இந்துக்களுக்கு மட்டுமல்லாது உலகில் வாழும் மற்ற இந்துக்களுக்கும் ஆபத்தானவர் என சாடல். இந்தியாவில் பரம்பரையாக வாழும் இஸ்லாமியர்களை அகதிகளாக்கிவிட்டு எங்களுக்கு குடியுரிமை அளிப்பதாக கூறுவது சனாதன தர்மத்திற்கே எதிரானது . இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். சாதியாலும் மதத்திலும் பாகுபாடு பார்த்து மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டுவது இந்துத்துவ சனாதன […]

பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள்
Christians Pakistan

பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்தப்படும் பாகிஸ்தான் நாட்டு பெண்கள்!

கடந்த 2018 ஆண்டு மட்டும் சுமார் 629 பாகிஸ்தானிய பெண்களை திருமணம் முடித்து அழைத்துப்போகிறோம் என்கிற பெயரிலும், வேலை வாங்கித்தருகிறோம் என்கிற பெயரிலும் சீனர்கள் வந்து பணம் கொடுத்து அழைத்துச்சென்றுள்ளனர். பாகிஸ்தான் நீதிமன்றம் இதனை ஆட்கடத்தல் புகாராக பதிவு செய்து தற்போது விசாரணையை துவக்கியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருக்கும் கிறுஸ்தவப்பெண்களே இதற்கு பலியாகியுள்ளனர். அவர்களை சீனர்களுக்கு விற்க உதவியது அந்நாட்டு திருச்சபை ஊழியர்களில் சிலரும், கடத்தப்பட்ட பெண்களின் உறவினர்களுமே ஆவர். கடந்த 2015ம் ஆண்டு முதல் பாக்-சீன […]

ஐநா சர்வதேச நீதிமன்ற
International News Pakistan

ஐநா மன்றத்தில் கேரள சிறுபான்மை சமூகத்து பெண்!

சசமையலறையில் சோறு பொங்கவும், குழந்தை பெற்று வளர்க்கவும் மட்டும் பழக்கப்பட்டவர்கள் மலபாரி முஸ்லிம் பெண்கள் எனும் அவப்பெயர் சமீபகாலமாக பல படித்த, உத்யோகஸ்த்தத்தில் சாதித்த பெண்களின் வாயிலாக துடைத்தெறியப்பட்டு வருகிறது. இந் நிலையில் சமீபத்தில் துபையில் நடைபெற்ற சர்வதேச நீதிமன்ற பரிபாலனங்கள் கமிட்டியில் உரையாற்றிய ரிதா ஸஹர் மஹ்மூத், தற்போது தனது கருத்துக்களத்தை ஐநா மன்றம் வரை எடுத்துச்சென்றுள்ளார். கேரள, கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியை சேர்ந்த இவர் துபையின் மிடோஸ் எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவியாவார். […]

பாகிஸ்தானில் ரயில் தீவிபத்தால் 65 பேர் பரிதாப மரணம்! 
Pakistan

பாகிஸ்தானில் ரயில் தீவிபத்தால் 65 பேர் பரிதாப மரணம்! 

இன்று (31-10-19 ) பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் தீப்பிடித்ததால் குறைந்தது 65 பேர்உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் ஊடகங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் கூறுகையில், 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு […]

samjotha express
Article 370 Kashmir Pakistan

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியதால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது !

1976 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை பாக்கிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷீத் அறிவிப்பு இந்திய அரசு காஷ்மீர் மக்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமாக நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக முறிவு அறிவிப்பை வெளியிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக புதன்கிழமையன்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேய்க் ரஷீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

gurudwara pakistan
International News Pakistan Sikhs

500 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரை இந்திய சீக்கியர்களுக்காக திறந்தது பாகிஸ்தான் அரசு!

(Photo – Xubayr Mayo) இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் 72 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா சோவா சாஹிப்பின் கதவுகளை பாகிஸ்தான் கடந்த வெள்ளியன்று சீக்கிய பக்தர்களுக்காக திறந்துள்ளது.குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட சீக்கிய பக்தர்களுக்கு குருத்வாரா திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு குடியேறிய பின்னர் 1947 ஆம் ஆண்டு குருத்வாரா மூடப்பட்டதிலிருந்து புறக்கணிக்க பட்ட நிலையில் இருந்தது. யுனெஸ்கோவின் உலக […]