அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 25,000 மாணவர்கள் சேர்ந்து மத அடிப்படையிலான குடியுரிமை மசோதாவுக்கு எதிராக நாளை முதல் உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர், இது மக்களவையில் திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது, குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி)யை எதிர்த்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். நாளை முதல் எல்லா கேண்டீன்களும் பூட்டப்படும் மொத்தம் 25000 ஹாஸ்டல் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் அமரப் போகிறார்கள், ”என்று அமைப்பாளர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.“ முஸ்லிம்களை மசோதாவில் இருந்து விலக்குவதும், நாடு தழுவிய என்.ஆர்.சி.யின் அரசாங்கத்தின் திட்டமும் […]
NRC
‘முஸ்லிம்களுக்கு அநீதியிழைத்தால் நானும் முஸ்லிமாக மாறுவேன்’ – சூளுரைத்த ஹர்ஷ் மந்தர்!
பிரபல எழுத்தாளரும் ,உலகறிந்த சமூக சேவகருமான ஹர்ஷ் மந்தர் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் கூட. மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்ற பெருமையை விட இவர், கலவரங்களில் அனாதைகளாக்கப்பட்ட முஸ்லிம்,தலித் மற்றும் பழங்குடியினருக்காவும் , மனநல காப்பகங்களில் பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட மனநோய் பாதித்தவர்களை காப்பக கொடுமைகளில் இருந்து மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருபவர் என்கிற பெருமதிப்பு உண்டு. “உணவு எனது உரிமை”- என்ற பெயரில் […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதா முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்துகிறதா ?
மத்திய அமைச்சரவை (கேபினட்) கடந்த புதன் கிழமை அன்று இந்திய குடியுரிமை சட்ட மசோதாவில் (சிஎபி) சில முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மோதி பிரதமராக பதவியேற்ற முதல் 5 ஆண்டுகளிலேயே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாஜக முன்னெடுத்தது. அதை நிறைவேற்றுவதற்கு பிரயத்தனம் செய்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்தவாரம் மீண்டும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இம்முறை நிறைவேற்றப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஎபி) […]
என்ஆர்சி: இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!
“இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே.” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார். “தேசிய குடிமக்கள் பதிவேடு […]
“அமித்ஷாவின் நாடு தழுவிய NRC என்பது மோதியின் பணமதிப்பிழப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல” – த்ருவ் ராதே.
த்ருவ் ராதே தி பிரிண்ட் எனும் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு.. உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் நாடு தழுவிய என்ஆர்சியை (தேசிய குடிமக்கள் பதிவேட்டை) அமல்படுத்த வேண்டும் எனும் அவரது தொடர் வற்புறுத்தல்கள் குறித்து ‘இது இந்திய அரசியலமைப்பு மற்றும் அறத்திற்கு எதிரானது’ என்று கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது சரியான ஒன்று தான். ஆனாலும் இந்த விமர்சனங்கள் , புதிய வாக்குறுதிகளை அளிப்பதை விட்டும் அவரை தடுக்கவில்லை . வரும் 2024க்குள் இந்தியாவில் ஊடுருவியவர்களை நான் […]
அஸ்ஸாம் மாநிலத்தை தொடர்ந்து உபி மாநிலத்திலும் என்.ஆர்.சி!
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய ‘பங்களாதேஷ் மற்றும் வெளிநாட்டவர்களை ” அடையாளம் காணத் தொடங்குமாரு உ.பி. மாநில டி.ஜி.பி கட்டளை பிறப்பித்துள்ளார். அஸ்ஸாமை தொடர்ந்து உபியில் ( தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சி அமல் படுத்தும் முகமாக டி.ஜி.பி தலைமையகம் பிரத்யேகமாக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.அதன்படி ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், சாலையோரங்கள் மற்றும் சேரி பகுதிகள் ஆகியவற்றில் புதிய குடியிருப்புகளை அடையாளம் காணுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பெரும்பாலும் ஏழை மக்கள், தின கூலிக்கு […]