என்.ஆர்.சி என்கிற தேசிய குடிமக்களின் பதிவு என்பது எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கும் ஒரு “அவசியமான பயிற்சி தான்” என்றும் இந்திய சட்ட விதிமுறைகளின்படி அதை நிறைவேற்றபட வேண்டும் என்றும் மோடி அரசு செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ள மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளுக்கு பதில் அளிக்கும் முகமாக மோடி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்கு பிரமாணப் பத்திரத்தின் மூலம் பதில் அளித்துள்ளது. மோடி அரசின் முரண்பாடுகள்: முன்னதாக […]
NRC
“சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டங்களால் பெண்களுக்கே அதிக பாதிப்பு”
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்ட திட்டங்கள் பெண்களுக்கு எதிரானவை, அது எப்படி என்கிறீர்களா? முதலில் ஒரு பொதுவான விஷயத்தை தெரிந்து கொள்வோம்: உலகில் எந்த நன்மை நடந்தாலும் அதில் முதலாவது மற்றும் அதிகப் பயன் பெறுவது ஆண்கள்தான். உதாரணத்துக்கு இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட்ட பொழுது ஆண்கள்தான் முதலில் கல்வி கற்க அனுப்பப் பட்டனர். நவீன உடை இந்தியாவுக்கு வந்த பொழுது சமூகத்தில் எந்த முணுமுணுப்பும் இன்றி ஆண்கள்தான் சௌகரியமான பேண்ட் சட்டைக்கு மாறினார்கள். […]
15 ஆவணங்கள் இருந்தும் கூட ஜபேதா பேகம் இந்தியர் இல்லை என ஒதுக்கும் என்.ஆர்.சி !
50 வயதான ஜபேதா பேகம் அசாமில் வசிப்பவர். அவரது கணவர் ஒரு நோயாளி, நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக உள்ளவர். ஜபேதா உழைப்பில் தான் குடும்பமே உயிர் பிழைத்து கொண்டு இருக்கிறது. இவரை இந்தியர் இல்லை என்று அசாமின் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. பல்வேறு ஆவணங்களை வைத்திருந்தும் கூட தான் ஒரு இந்தியர் தான் என நிரூபிக்க இன்று வரையில் அவரால் முடிய வில்லை. குவாஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்கப்பெறாத இவரின் இறுதி முயற்சி உச்ச நீதிமன்றத்தில் […]
ஹைதிராபாத்: குடியுரிமை நிரூபிக்குமாறு ஆதார் ஆணையத்தில் இருந்து பலருக்கு நோட்டீஸ்..
ஹைதராபாத்தில் வசிக்கும் சத்தார் கானுக்கு கடந்த பிப்ரவரி 3 ம் தேதி ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ-இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் அவர் ஒரு இந்திய குடிமகனா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. மேலும் சத்தார் பொய் பித்தலாட்டங்களின் மூலம் ஆதார் அட்டையைப் பெற்றதாகவும், பொய்யான கூற்றுக்கள் மற்றும் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் யுஐடிஏஐ அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சத்தார் ஒரு இந்திய நாட்டவர் அல்ல என்று யார் புகார் அளித்தது என்ற […]
அசாம் என்.அர்.சி தரவுகள் இணையத்தளத்தில் இருந்து மாயம் ! அசாம் மக்கள் அதிர்ச்சி !
அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட நபர்களின் விவரங்களைக் காட்டும் தரவு, கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்போது அந்த தரவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து திடீரென மாயமாகி உள்ளது. தரவுகள் பதிவேற்றப்பட்ட இணையத்தளம் : என்.ஆர்.சி.யில் இந்திய குடிமக்களை விலக்குவது மற்றும் சேர்ப்பது பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய இறுதி பட்டியல் 2019 ஆகஸ்ட் 31 அன்று அதன் […]
அஸ்ஸாம் : முஸ்லிமல்லாதோரை மட்டும் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு !
பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து இந்தியா வந்துள்ள முஸ்லிமல்லாத அனைவரையும் தடுப்பு மையங்களிலிருந்து விடுவிக்குமாரு அஸ்ஸாம் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார். ‘காலாவதியான அல்லது சரியான ஆவணங்கள் இல்லாமல், டிசம்பர் 31, 2014 க்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்குமிடம் ஏற்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்களையே’ இது குறிக்கும் என்றார் அமைச்சர். இதன் நடைமுறை பொருள்: முஸ்லிமாக உள்ளவர் தடுப்பு மையங்களிலேயே இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அல்லாதோர் […]
‘நாடு தழுவிய என்ஆர்சி நடத்தும் திட்டமில்லை’ என்று மோடி அரசு இப்போது கூறுமானால் மாநிலங்களவையில் அமித் ஷா கூறியது பொய்யா?
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) கொண்டுவரும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இப்போதைக்கு மத்திய அரசிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை (NRC) நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னுக்கு பின் முரண்பாடான பேச்சுக்கள்: “அசாம் (என்.ஆர்.சி) பயிற்சி உச்சநீதிமன்ற உத்தரவின் […]
மோடி அரசின் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி க்கு எதிராக அமெரிக்க சியாட்டில் நகர சபையில் நிறைவேறியது கண்டன தீர்மானம்!
அமெரிக்காவின் மிக வலிமையான நகர கவுன்சில்களில் ஒன்று தான் சியாட்டில் நகர சபை. இந்நிலையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றைக் கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது சியாட்டில் நகர சபை. கண்டன தீர்மானம் : “சியாட்டில் நகர சபை தேசிய குடிமக்களின் பதிவு மற்றும் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. மேலும் இந்த சட்டங்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட ஜாதிகள், பெண்கள், பழங்குடியினர், LGBTQ மற்றும் […]
பிஹார் : CAA,NRC கணக்கெடுப்பாக இருக்கலாம் என்று எண்ணி குழுவினரை சிறைபிடித்த மக்கள்..
குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகிவற்றிற்கு எதிராக பீகாரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் பரவி வருவதால், தனியார் ஆராய்ச்சி மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கணக்கெடுப்புகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான கணக்கெடுப்பை மேற்கொண்டால் மக்களால் தாக்கப்படலாம் என்ற அச்சமும் மாநிலம் முழுவதும் நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக சர்வே மேற்கொள்ள வந்த சிலரை என்.பி.ஆர் அதிகாரிகள் […]
CAA,NRC,NPR பற்றிய முழுமையான தகவல்கள் ..
இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் வார்த்தை CAA, NRC, NPR. இதை பற்றி பல தரப்பினரும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஆதாரபூர்வமான தகவல்கள் மூலம் CAA, NRC, NPR பற்றி முழுமையாக அறிந்து கொள்வது தான் இந்த ஆக்கத்தின் நோக்கம். அரசு ஆவணங்கள் மற்றும் அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் உள்ள தகவல்களை கொண்டு தொகுக்கப்பட்ட செய்திகள் இவை. (ஆதாரங்கள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது சரிபார்த்து கொள்ளவும்) 1955-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம் (Citizenship Act, 1955) […]
அமித்ஷா முன் CAA,NRC க்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களுக்கு நேர்ந்த கொடுமை!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளவர் சூர்யா ராஜப்பன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். உள்துறை அமைச்சர் அமித்ஷா CAA சட்டத்தினை ஆதரித்து வீடுவீடாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சூர்யாவின் அபார்ட்மென்ட் அருகே அமித்ஷா பிரச்சாரத்திற்காக வந்துள்ளார். அப்போது சூர்யா மற்றும் அவரது தோழியும் அமித்ஷா முன்னால் We RejectCAA என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் அபார்ட்மெண்டில் இருந்து காலி செய்துள்ளார் அபார்ட்மெண்ட் உரிமையாளர். ஜனநாயக முறையில் கோஷம்: அமித் ஷா வந்து கொண்டிருப்பது எங்களுக்கு […]
NRC – NPR ஐ அமல்படுத்தாதே! சட்டமன்றம் நோக்கி பேரணி அறிவிப்பு!
NRC -க்கு வழிவகுக்கும் அபாயகரமான தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்றம் நோக்கிப் பேரணி… நாள் : 6.01.2020, திங்கள் காலை 11 மணி.பேரணி தொடங்குமிடம் : சேப்பாக்கம் (விருந்தினர் மாளிகை அருகில்), சென்னை. அன்பார்ந்த நண்பர்களே! குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) எதிர்த்து இன்று நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது என்ற அபாயத்தை புரிந்து கொண்ட […]
நாடெங்கும் போராட்டங்கள் பரவ காரணமான ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல் !
CAA-ல் இருந்து முஸ்லீம்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து முதலில் இஸ்லாமியர்கள் சில போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் வட கிழக்கு மக்கள் CAA-வை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்படியாக போராட்டங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை ஒடுக்க காவல்துறை பல்கலை கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் போராட்ட களம் மாறியது, […]
CAA, NRC க்கு எதிராக இந்தியர்கள் மதம் கடந்து போராடுவது ஏன் ?
CAA வில் வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு மட்டும் தானே குடியுரிமை இல்லை என சொல்லப்பட்டுள்ளது, ஏன் இந்தியர்கள் அனைவரும் மத பாகுபாடு இல்லாமல் இணைந்து போராடுகின்றனர் ? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படுகின்றது. அதற்க்கான பதிலை பார்ப்போம். NRC- மூலம் அஸ்ஸாமில் இந்து, முஸ்லீம், கிருத்துவ சமூகத்தை சேர்ந்த 19 லட்சம் மக்கள் நாட்டற்ற அகதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, பலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் இந்த NRC-நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்ற அரசின் […]
CAA, NRC க்கு எதிராக பிராமண அர்ச்சகர்கள் நடத்திய போராட்டம்!
சிஏஏ மற்றும் என்.ஆர்.சி க்கு எதிராக சாதி மதம் கடந்து இந்திய அளவில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொல்கத்தாவின் மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே கடந்த திங்களன்று (30-12-19) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகள் கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பஸ்ச்சிம் பங்கா சனாதன் பிராமின் எனும் […]