நிதியாண்டு 2020-21 ரிற்கான பஜ்ஜட் வருகிற பெப்ரவரி 1 சனிக்கிழமையன்று தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு பிறகு பிரிக்ஸ் வங்கியின் தலைவரும், மூத்த வங்கி நிர்வாகியுமான கே.வி.காமத் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்க கூடும் என நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஏன் மாற்றம்?: நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை தவறாக கையாள்வதாக மோடி அரசு உணர்வதாகவும், அதனால் அவரையும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் அனுராக் […]
Indian Economy
ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் விற்க மோடி அரசு முடிவு – வாங்க முன்வருபவர்களுக்கு அழைப்பு..
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களில் 100% பங்குகள் மத்திய அரசு கைவசம் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களின் முழு பங்கையும் ஏலம் விட்டு விற்பதற்கு வேண்டி அழைப்பு விடுத்துள்ளது மோடி அரசாங்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கையும் வாங்க முன்வரும் ஏலதாரர்கள், இந்நிறுவனங்களின் மீதுள்ள மொத்த கடன் சுமையான 58,000 ஆயிரம் கோடியில் ₹23,000 ஆயிரம் கோடிகளை ($3.26 billion) சுமக்க வேண்டும். […]
‘நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சடித்து ரூபாய் மதிப்பை கூட்டலாம்’ – சு.சுவாமி யோசனை!
இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்துக்கள் வழிபடும் லட்சுமியின் படத்தை அச்சிட்டால் இந்திய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கூட்டும் என பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் அச்சிடப்படும் நோட்டுகளில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, […]
வேலைவாய்ப்பின்மை, வறுமையினால் அனுதினமும் 10 பேர் உயிரழப்பு ! – அதிர வைக்கும் புள்ளி விவரம்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் காரணத்தால் தினம் 9 ஆண்கள், 1 பெண் என்ற விகிதத்தில் மரணித்துள்ளனர். தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) வெளியிட்ட தற்கொலைகள் குறித்த சமீபத்திய தரவுகளிலிருந்து கீழ்கண்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2018ம் ஆண்டில் மட்டும் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இதே 2017 ல் 1.3 லட்சம் என இருந்தது. எனவே 2018ம் ஆண்டில் 3.6% தற்கொலை […]
சு.சுவாமி : மோடிக்கு பொருளாதாரம் புரியல – என்னை நிதி அமைச்சர் ஆக்குங்க!
வியாழக்கிழமை சென்னையில் நடந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி “பிரதமருக்கு பொருளாதாரம் பற்றிய புரிந்துணர்வு இல்லை” என்றும் நிர்மலா சீதாராமன் பற்றி அதிகமாக ஒன்றும் கூறாமல் இருப்பதே நல்லது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜன் ஒரு பைத்தியக்காரர் : முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தார், […]
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: உடனடி நடவடிக்கை தேவை – தொல்.திருமா வலியுறுத்தல்!
மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில்கொண்டுபொருளாதார கொள்கை முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும்!- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் இந்தியப் பொருளாதாரம் சரிவில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5% ஆக குறைந்திருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியம் (INTERNATIONAL MONETARY FUNDS) அறிவித்துள்ளது. மேலும், இந்த பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி சீராக்குவதற்கு உடனடியாக அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி 189 நாடுகளை உறுப்புநாடுகளாக […]
உயரும் ஜிஎஸ்டி வரி – உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்..
ஜிஎஸ்டி வரிகளை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் உணவுப் பொருட்கள், ஆடைகள், விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நினைத்த பாஜக அரசின் நினைப்பில் விழுந்தது மண். கடந்த 2017ம் ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுக்கு சராசரியாக 14.4 சதவீத வருவாய் கிடைத்து வந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக 11.6 சதவீதமாக […]
“இது ஹிட்லர் ஆட்சி”-இரத்தத்தில் கோரிக்கை எழுதி போராட்டம் நடத்திய அஸ்ஸாம் எம்.எல்.ஏ!
அஸ்ஸாம் மாநில காங்கிரசின் மரைனி பகுதி எம்.எல்.ஏ வான ருப்ஜோதி குர்மி தனது உள்ளங்கையை பிளேடால் கீரி இரத்தத்தை வைத்து அட்டையில் கோரிக்கைகளை எழுதி போராட்டம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை பாஜக அரசு தனியாருக்கு விற்பதினால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை கைவிடக் கோரியும், மேலும் அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதா (Citizens Amendment Bill) எதிராகவும் அவர் தனது கோரிக்கைகளை எழுதியிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹிந்துஸ்தான் […]
மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியைக் குறைத்து அறிவிப்பு !
பண்டிகை விற்பனை காலங்களிலும் கூட வாகன விற்பனை மந்தமான நிலையில் உள்ளதால் வாகன உற்பத்தியாளர்களிடேயே அதிக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி அதன் உற்பத்தியை 17.48 சதவீதம் குறைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகனங்களின் உற்பத்தியை 63 சதவீதம் குறைத்து வெறும் 6,976 யூனிட்டுகள் மட்டுமே தயாரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 18,855 யூனிட்களாக இருந்ததுள்ளது. மாருதி சுசுகி அதன் உற்பத்தியை தொடர்ந்து எட்டாவது முறையாக குறைத்து […]
“இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பாஜக” – மே 17 இயக்கம் கண்டனம்!
ஆளும் பாஜக அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி, போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இது குறித்து மே 17 இயக்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “லாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு: மத்தியில் பிஜேபியின் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து லாபத்தில் இயங்கும் பல்வேறு அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வேலையை சத்தமில்லாமல் செய்து வருகிறது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை […]
பெண் பத்திரிக்கையாளரை நோக்கி ‘அடி போடி’ என்று கூறிய நிர்மலா சீதாராமன் !
நேற்று கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்தது. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கேள்வி ஒன்றிற்கு சரியான முறையில் பதில் அளிக்காமல் பேசிய நிர்மலா சீதாராமன் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து ‘அடி போடி’ என்று கூறினார். செய்தியாளர் சந்திப்பு கோவாவில் நடைபெற்றதால் கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டன. அங்கே இருந்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தி மொழி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து உள்ளது. எனவே தான் […]
‘புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு(!) கனிதம் உதவவில்லை’|பியூஷ் கோயல்-நெட்டிசன்கள் செம கலாய்!
புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் நியூடன், ஐன்ஸ்டன் இல்லை என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கலாய்க்க ஆர்மபித்தனர். இது தற்போது இந்திய ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துவிட்டது.
மோடி அதிரடி! ரஷ்யாவின் வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் கடன் உதவி !
இந்திய பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்ற மக்கள்,எதிர் கட்சியினர் பரவலாக விமர்சித்து வரும் வேலையில் மோடி அரசாங்கம், ரஷ்யாவின் ‘ஃபார் ஈஸ்ட்’ (தூர கிழக்கு) பகுதிகளுக்கான வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் 72,411,296,162 கோடி ருபாய் நிதியுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க முன்வந்துள்ளது.
மோடி அரசாங்கத்தை அதிரவைத்த மன்மோஹன் சிங் அவர்களின் 4 நிமிட பேச்சு
ஆட்டோமொபைல் துறையில் மட்டுமே 3.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
பார்லே நிறுவனம் 10,000 நபர்களை பணி நீக்கம் செய்ய முடிவு- தொடரும் கடும் பொருளாதார சரிவு நிலை!
பார்லே நிறுவனம் 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ ஒரு லட்சம் நபர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. இதில் 10 சொந்த தொழிற்சாலைகள் மற்றும் 125 ஒப்பந்த அடிப்படையிலான அலைகளில் உள்ள தொழிலாளர்களும் அடங்குவர். பொருளாதார சரிவான நிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் 10,000 நபர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிவரும் என்று நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பார்லே தெரிவித்துள்ளது. பார்லே நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாயங்க் ஷா கூறுகையில்.. கிலோவிற்கு 100 ரூபாய் […]