அசாம்கர் போராட்டக்காரரர்கள் மீது உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். எஃப்.ஐ.ஆரின் படி, போராட்டக்காரரர்கள் மீது கலகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகள் பதியபட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் அசாம்கர் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவிக்க கூடியிருந்த சுமார் 200 பெண்கள், பிப்ரவரி 5, புதன்கிழமை அதிகாலையில் காவல்துறையினரால் லத்திசார்ஜ் செய்யப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் ! பிப்ரவரி 4ம் தேதியின் காலை முதல் அசாம்கரின் பிலாரியாகஞ்ச் பகுதியில் உள்ள மவ்லானா ஜோஹர் அலி […]
CAA
மத்திய பிரதேசத்தில் சிஏஏ வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் !
மத்திய பிரதேச அமைச்சரவை இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சிஏஏ ரத்து செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.சி. ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார். “மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அடித்தளமாகும், […]
“பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி?” – பிரதமர் மோடிக்கு பெண்கள் அமைப்பினர் கடிதம் !
டில்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சுக்களை பேசிவருவதும் ” பிரச்சாரங்களில் பாலியல் பலாத்காரத்தை கொண்டு மிரட்டல் விடுப்பதும் “அச்சம்” அளிக்கும் விதத்தில் உள்ளது என 170 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் திங்களன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். பாஜக தலைவர்கள் வன்முறையான சூழலை உருவாக்கி விட்டனர்: அந்தக் கடிதத்தில், குடியுரிமை (திருத்தம்) சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை […]
மோடி அரசின் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி க்கு எதிராக அமெரிக்க சியாட்டில் நகர சபையில் நிறைவேறியது கண்டன தீர்மானம்!
அமெரிக்காவின் மிக வலிமையான நகர கவுன்சில்களில் ஒன்று தான் சியாட்டில் நகர சபை. இந்நிலையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றைக் கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது சியாட்டில் நகர சபை. கண்டன தீர்மானம் : “சியாட்டில் நகர சபை தேசிய குடிமக்களின் பதிவு மற்றும் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. மேலும் இந்த சட்டங்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட ஜாதிகள், பெண்கள், பழங்குடியினர், LGBTQ மற்றும் […]
உத்தவ் தாக்கரே சிஏஏ வுக்கு ஆதரவு; கூட்டணி விரிசல் ஏற்படுமா?
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதே சமயம் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் . “சி.ஏ.ஏ நாட்டிலிருந்து யாரையும் அகற்றுவதற்கான சட்டம் அல்ல … குடியுரிமையை நிரூபிப்பது என்பது இந்துக்கள் முஸ்லிம்கள் என இரு சாராருக்கும் கடினமான ஒரு விஷயம் தான். நான் அதை (NRC) நடக்க விடமாட்டேன்” என்று தாக்கரே ‘சமனா’ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். கூறியுள்ளார். […]
டில்லியில் 4 நாட்களில் மீண்டும் 3வது துப்பாக்கி சூடு சம்பவம் – அமித் ஷா பதவி விலக கோரி இந்திய அளவில் ட்ரெண்டிங் !!
டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5 க்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் கடந்த நான்கு நாட்களில் இது மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவமாகும். ஒரு நாட்டின் தலைநகரில் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருவது, உள்துறை அமைச்சரின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. அமித் ஷா நாட்டு […]
சிஏஏ குறித்து நாடகம்; பள்ளி மீது தேசத்துரோக வழக்கு – 4,5ம் வகுப்பு மாணவர்களையும் கூட விசாரிக்கும் காவல்துறை!
வடக்கு கர்நாடகாவின் பிதர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றின் முதல்வர் மற்றும் அதிகாரிர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 21 அன்று பள்ளி மாணவர்கள் சார்பில் சி.ஏ.ஏ. மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை விமர்சனம் செய்யும் வகையில் சிறு நாடகம் ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் இன்னபிற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு கீழ் செயல்படும் காவல்துறை. […]
“அம்பேத்கரின் அரசியலமைப்பை பின்பற்றுங்கள் அல்லது கிழித்து எறியுங்கள்” ; சிஏஏ, என்ஆர்சி திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் பாஜக எம்.எல்.ஏ !
ஒவ்வொரு தெருவிலும் உள்நாட்டுப் போர் போன்ற நிலைமை உள்ளது, இது நம் நாட்டுக்கு ஆபத்தானது. உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலை நிலவும் நிலையில் நாட்டில் வளர்ச்சியை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது..
‘ஷஹீன் பாகில் போராடுபவர்கள் உங்கள் வீடு புகுந்து கொல்வார்கள், கற்பழிப்பார்கள்’ – வெறுப்பை கக்கும் பாஜக எம்பி பர்வேஷ்..
டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஷஹீன் பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் அகற்றப்படுவார்கள் என்று அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் அறிவித்துள்ளார். “போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைவார்கள், உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கற்பழிப்பார்கள்”. என வெறுப்பு பேச்சையும் பேசியுள்ளார் அவர். டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருபுறம் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது மறுபுறம் CAA […]
‘அமித்ஷா மிருகத்தை வரலாறு காறித்துப்பும் ‘ பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் கடும் விமர்சனம்!
டெல்லியில் அமித் ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது பாஜக ஆதரவாளர்களால் ஒரு சிஏஏ எதிர்ப்பாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்துறை அமைச்சர் அமித் ஷா வை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அமித் ஷா ஒரு விலங்கு என்று குறிப்பிட்ட காஷ்யாப், வரலாறு இந்த மிருகத்தை காறித்துப்பும் என்று கடுமையாக சாடியுள்ளார். என்ன நடந்தது? அமித் ஷா பாஜக […]
“எந்த ஒரு நடவடிக்கை எடுக்கும் முன் மறுபரிசீலனை செய்யுங்கள்” – ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு மோடி அரசு அறிவுறுத்தல் !
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் 751 உறுப்பினர்களில் 626 பேர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மீதான கடும் கட்டுப்பாடுகள் குறித்து ஆறு தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஐரோப்பா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின. இது மோடி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து “எந்தவொரு நடவடிக்கையும் […]
“தீயில் கிடந்த விறகுகளை கொண்டும் தாக்கினர், ஆபாசமாகவும் சீண்டினார்கள்” – குமுறும் உபி பெண்கள்!!
டில்லி ஷஹீன் பாகில் பெண்கள் தலைமையில் நடந்து வரும் தொடர் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவர்களை பின்பற்றி போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் ஒன்றுதான் உபி யில் உள்ள எட்டாவா. போலீசாரா அல்லது ? “போலீசார் எங்களை தீயில் எரிந்து கொண்டிருந்த விறகுகளை கொண்டு தாக்கினர். சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் இது தான் உண்மை. விறகின் முன் பக்கத்தில் தீ இல்லை என்றாலும் அது சூடாகவே […]
ஐரோப்பா: 24 நாடுகளை சேர்ந்த 154 அவை உறுப்பினர்கள் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்..
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. போராட்டக்காரர்களை சந்தித்து, சட்டத்தை ரத்து செய்வதற்கான அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என இந்திய அரசாங்கத்கத்தை வலியுறுத்துகிறது இந்த தீர்மானம். தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும்? இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) “உலகின் மிகப்பெரிய நிலையற்ற நெருக்கடியைத் தூண்டக்கூடும், […]
பிஹார் : CAA,NRC கணக்கெடுப்பாக இருக்கலாம் என்று எண்ணி குழுவினரை சிறைபிடித்த மக்கள்..
குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகிவற்றிற்கு எதிராக பீகாரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் பரவி வருவதால், தனியார் ஆராய்ச்சி மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கணக்கெடுப்புகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான கணக்கெடுப்பை மேற்கொண்டால் மக்களால் தாக்கப்படலாம் என்ற அச்சமும் மாநிலம் முழுவதும் நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக சர்வே மேற்கொள்ள வந்த சிலரை என்.பி.ஆர் அதிகாரிகள் […]
இந்திய குடியரசு தினத்தன்று அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் சிஏஏ வுக்கு எதிராக பேரணி அறிவிப்பு !
ஜனவரி 26 ஆம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்யக் கோரி பல்வேறு மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளின் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்பு பேரணிகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. பேரணி நடைபெறும் முக்கிய இடங்கள்: வாஷிங்டன் டி.சி. இந்திய தூதரகத்திற்கு அருகிலுள்ள வளாகத்திலிருந்து வெள்ளை மாளிகை வரை .. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, அட்லாண்டா மற்றும் ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்னால் என பல்வேறு இடங்களின் […]