ஜார்க்கண்ட்: நிலம் கையகப்படுத்தல், ஆயுதச் சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக தன்பாத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏ துலு மகாடோவின் வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர். ,
“அவர்(எம்எல்ஏ) தப்பித்து விட்டார். எனினும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரை கைது செய்ய பல இடங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.” என காவல் அதிகாரி, எஸ்.எஸ்.பி தன்பாத் தெரிவித்துள்ளார்.
இவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் காவல்துறையினரைத் தாக்கி குற்றவாளி கைதி ஒருவரை தப்பிக்க வைத்ததற்காக 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீதுள்ள வழக்குகளை இங்கு பதிய இடம் போதாது என்பதால் இந்த இணையத்தொடுப்பில் சென்று அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் அறிந்து கொள்ளவும்.