தீவிரவாததிற்காக பாகிஸ்தானிலுள்ளவர்களுடன் நிதி பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவியிருக்கும் தங்கள் மற்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சட்னா மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரை சட்னா குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க மத்திய பிரதேச பயங்கரவாத தடுப்புப் படையும் (ஏடிஎஸ்) சட்னாவை விரைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.எஸ்ஸால் கைது செய்யப்பட்டு ஜாமினில் இருந்த பல்ராம் சிங் மற்றும் பக்வேந்திர சிங் உட்பட ஐந்து பேரையும் உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை (21-8-19) இரவு சட்னாவின் வெவ்வேறு இடங்களிலிருந்து கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் பாகிஸ்தான் உளவாளி பல்ராம் என்பவன் இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது
மற்ற இரண்டு குற்றவாளிகள் சுபம் திவாரி மற்றும் சுனில் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், குற்றம் சாட்டப்பட்ட ஐந்தாவது நபரின் அடையாளம் காணப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து குறைந்தது 13 பாகிஸ்தான் சிம் கார்டுகள், மடிக்கணினிகள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பல எண்களைக் கொண்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்னா போலீஸ் சூப்பிரண்டு ரியாஸ் இக்பால் ஐந்து பேரின் கைதை உறுதிப்படுத்தினார், ஆனால் அவர்களின் அடையாளத்தை வெளியிடவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் சமூக வலைத்தளங்களின் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து தங்கள் உள்ளூர் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பணம் பெற்று கொண்டு ,பின்னர் அதை பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டில் உள்ள பயங்கரவாத சகாக்களுக்கு வங்கிக் கணக்குகள் மற்றும் ஹவாலா இணைப்புகள் மூலம் பண பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல்ராம் சிங் போபால் மற்றும் 11 நபர்களையம் ஏ.டி.எஸ். குழுவினர் தீவிரவாததிற்கு நிதிதிரட்டியதற்காக கொல்கவன் மாவட்ட பகுதியில் இருந்து கைது செய்திருந்தனர்.
அப்போது அவர்களிடமிருந்து சுமார் 60 சிம் கார்டுகள், பல சட்டவிரோத தொலைபேசி பரிமாற்றங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தும் பல்ராம் சிறிது காலத்திலேயே ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியேறினான்.
ஏழு மாதங்களுக்கு முன்பு, கொள்ளை வழக்கொன்றில் பல்ராம் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டான். இம்முறையும் ஜாமின் பெற்று வெளியேறினான்.
பிறகு தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.
மற்றொரு தீவிரவாத குற்றவாளியான பக்வேந்திர சிங் முன்னதாக இந்தூர் பகுதியில் ஏற்கனவே ஏ.டி.எஸ்ஸால் கைது செய்யப்பட்டவன் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதாலோ என்னவோ இதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திட ஊடகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை !
நாங்கள் தொடர்ந்து செயல்பட உதவிடுங்கள்..