கடந்த சனிக்கிழமை (5-10-19) ஹரியானா மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் ஒரு முஸ்லிம் தம்பதியினர் இரவு 11.30 மணியளவில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு பைக்கில் வந்த 2 நபர்கள் தம்பதியினர் இருவரையும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் சில தகாத சொற்களை கூறியும் , ஆபாச செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.பிறகு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண் முன்னே இருவரில் ஒருவன் ஆடையை அகற்றி ஆணுறுப்பை வெளிப்படுத்தி அசிங்கமாக பேசியுள்ளான் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக […]
Author: NewsCap.in Staff
உதட்டில் காந்தி;உள்ளத்தில் கோட்ஸே-காந்தி பேரன் கடும் தாக்கு!
அவுரங்காபாத்: மஹாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் திரு. துஷார் காந்தி. இவர் “காவி (பாஜக) கட்சி உதட்டளவில் காந்தியை வைத்து கொண்டு மனதளவில் கோட்ஸேவை கொண்டு செயல்படுவதாக” குற்றம்சாட்டியுள்ளார். “ஒரு புதிய இந்தியா உருவாகி கொண்டு இருப்பதால் , ஒரு புதிய ‘தேச தந்தையும்’ உருவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட தேசத்திற்கு காந்திஜி ஒரு போதும் தேச தந்தையாக மாட்டார்” என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள காந்திஜியின் அஸ்தி திருடப்பட்டிருப்பது குறித்து ‘இது புனிதத்தன்மையை மதிக்காமல் செய்யப்பட்ட […]
பா.ஜ.க. உள்ளூர் தலைவர் உள்பட 5 பேர் கொலை!
மஹராஷ்டிராவின் ஜல்காவன் மாவட்டத்தில் நேற்றிரறவு (6-10-19) பா.ஜ.க. உள்ளூர் தலைவர் ரவீந்திர பாவ் கராத்(55) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டு துப்பாக்கிகள், கத்தி போன்றவற்றை கொண்டு பாஜக தலைவர் வீட்டினுள் புகுந்த 3 நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.ரவீந்திராவை தவிர கொல்லப்பட்டவர்கள் அவரது சகோதரர் சுனில் (56), மகன்கள் பிரேம்சாகர் (26) , ரோஹித் (25) மற்றும் கஜரே என்ற மற்றொரு நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. […]
சிறுபான்மையினருக்கு இந்தியா சொர்க்க பூமி – மத்திய அமைச்சர் அப்பாஸ் கருத்து!
இந்திய முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளிநாட்டு பல்கலைக்கழக ஆய்வுகள், இது குறித்து 49 பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம் என்று நிலைமை போய் கொண்டிருக்க “சிறுபான்மையினருக்கு இந்தியா ஒரு சொர்க்க பூமி , இங்கு அவர்கள் முழுப் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் எனினும் நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான் சிறுபான்மையினருக்கு நரகத்தை போன்றது என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். சென்னையில் பி.எஸ்.அப்துர் அப்துர் […]
ஒரு லட்சம் பேரின் கையொப்பங்களோடு மோதிக்கு கடிதம் திருமாவளவன் அறிவிப்பு!
இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்-திருமாவளவன் கோரிக்கை !.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.. ஒரு லட்சம் பேரின் கையொப்பங்களோடு பிரதமருக்குக் கடிதம்விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு. ~~~~~~~~~~~~பசுவின் பெயரால் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தக் கோரி இயக்குனர் மணிரத்தினம், வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கூட்டாகக் கடிதம் ஒன்றைக் கடந்த ஜூலை மாதத்தில் பிரதமருக்கு எழுதியிருந்தனர். […]
“கேள்வி கேட்பதும் அறிவுரை கூறுவதும் தேச துரோகமா?” -மஜக தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கும்பல் வன்முறை தாக்குதலுக்கு தடுக்க கோரி இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோதிக்குக் கடிதம் எழுதினர். தற்போது அதன் பயனாக மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்னா சென்,அனுராக் காஷ்யப் என கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது தேச விரோத சட்டம் பாய்ந்துள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மஜக பொது செயலாளர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “நாடெங்கிலும் நடக்கும் கும்பல் படுகொலைகளையும், சிறுபான்மையினர் […]
போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியரை சுட்டு கொன்ற இஸ்ரேல் !
கடந்த மார்ச் 2018 இல் தொடங்கிய வாராந்திர ஆர்ப்பாட்டங்களின் தொடரான ”கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்னில்” பங்கேற்க ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் பிரிக்கும் வேலி அருகே கூடினர். அப்போது இஸ்ரேலிய அராஜகத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் ஒருவரை சுட்டு கொன்றுள்ளது ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படை. போராட்டக்கார்களின் மீதான இந்த தாக்குதலின் போது 54 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்களில், 22 பேர் துப்பாக்கி தோட்டாக்களால் காயம் அடைந்துள்ளனர். வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள […]
பாஜக ஆட்சியில் வெறுப்பு குற்றங்கள் 786 % அதிகரிப்பு! – மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!
உலக புகழ் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் “பெரும்பான்மை அரசியல் மற்றும் இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள்” என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பாரதீய ஜனதா (பாஜக) கட்சியின் எழுச்சிக்கும், வெறுப்புக் குற்றங்களின் அதிவேக அதிகரிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளது. கடந்த 2009- 2018 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வெறுப்புக் குற்றங்கள் குறித்து உதவி பேராசிரியர் தீபங்கர் பாசு ஆய்வு மேற்கொண்டார். அதில் கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் […]
அஸ்ஸாம் மாநிலத்தை தொடர்ந்து உபி மாநிலத்திலும் என்.ஆர்.சி!
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய ‘பங்களாதேஷ் மற்றும் வெளிநாட்டவர்களை ” அடையாளம் காணத் தொடங்குமாரு உ.பி. மாநில டி.ஜி.பி கட்டளை பிறப்பித்துள்ளார். அஸ்ஸாமை தொடர்ந்து உபியில் ( தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சி அமல் படுத்தும் முகமாக டி.ஜி.பி தலைமையகம் பிரத்யேகமாக ஒரு வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.அதன்படி ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், சாலையோரங்கள் மற்றும் சேரி பகுதிகள் ஆகியவற்றில் புதிய குடியிருப்புகளை அடையாளம் காணுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பெரும்பாலும் ஏழை மக்கள், தின கூலிக்கு […]
’43 மாதங்களாக சம்பளம் இல்லை’! – அரசு நியமித்த மதரஸா ஆசிரியர்களின் நிலை!
கடந்த 43 மாதங்களாக(!) மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை எதிர்க்கும் விதமாக உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள மதரசா ஆசிரியர்கள் கடந்த திங்களன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர். மதரஸாக்களை நவீனமயமாக்குவதற்கான பாஜக தலைமையிலான அரசாங்க திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் தான் இந்த ஆசிரியர்கள். மதரஸாவில் தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் (SPQEM), உ.பி.யில் பணியமர்த்தப்பட்ட 21,000 க்கும் மேற்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படுவது இல்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா […]
காஷ்மீர்; இஸ்லாத்தில் தற்கொலை அனுமதிக்கப்பட்டிருந்தால், நான் அதைச் செய்திருப்பேன்! -முஸாபர் நபி!
காஷ்மீர்: புல்வாமா பகுதியின் முசாபர் நபி என்பவரின் தொடைகள், மார்பு மற்றும் உள்ளங்கை பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டும் குச்சிகள் மற்றும் கம்பிகளால் அடிக்கப்பட்டு உள்ள நிலையில் இருக்கும் புகைப்படம் என்று சர்வதேச ஊடகமான தி வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுளளது. பல சிராய்ப்புகள், பிடுங்கப்பட்ட நிலையில் நகங்கள் , வாந்தி, நெற்றி மற்றும் கை பகுதிகளில் புற அதிர்ச்சி காயங்கள் போன்றவை ஏற்பட்டுள்ளன என்று மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முசாபருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களால் ஒரு வாரம் படுத்த படுக்கையான நிலையில் […]
இஸ்ரேல் கொடூர சித்திரவதை! – சமரை விடுவிக்க கோரி பாலஸ்தீனியர்கள் போராட்டம்!
பாலஸ்தீனிய கைதிகளை சித்திரவதை செய்வதை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள சமர் அர்பிட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி பாலஸ்தீனிய மனித உரிமைகள் மற்றும் சமூக அமைப்புகள் தெருக்களிலும் சமூக ஊடகங்களிலும் அணிதிரண்டு வருகின்றன. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சமர் அர்பிட்டின் உயிரைப் பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) உடனே தலையிட்டு அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர்கள் குறிப்பாக அழைப்பு விடுத்துள்ளனர். 44 வயதான சமர் மூன்று […]
வெளிவந்து விட்டது நியூஸ் கேப் ஆப் !-Download Now!
http://bit.ly/2nOa5Wp
ஜார்கண்டில் பழங்குடியின கிறிஸ்தவர்கள் அடித்து கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
பரவலான வெறுப்பு குற்றங்கள் காரணமாக ஜார்கண்ட் மாநிலம் சிறுபான்மையினருக்கு திகில் பிரதேசமாகி வருகிறது. பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் கும்பல் கொலைகாரர்கள் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர்
“கேரளாவில் ஏன் மோடி-அலை இல்லாமல் உள்ளது?”- ஜான் ஆபிரகாமின் வைரல் பதில்!
“உங்கள் சொந்த மாநிலமான கேரளா ஏன் இன்னும் ‘மோடி-ஃபைட்’ ஆகாமல் உள்ளது? கேரளா மக்களுக்கும் பிற மக்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு தான் என்ன?” என்று கேட்க..