CAA-ல் இருந்து முஸ்லீம்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து முதலில் இஸ்லாமியர்கள் சில போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் வட கிழக்கு மக்கள் CAA-வை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்படியாக போராட்டங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை ஒடுக்க காவல்துறை பல்கலை கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் போராட்ட களம் மாறியது, […]
Author: NewsCap.in Staff
CAA, NRC க்கு எதிராக இந்தியர்கள் மதம் கடந்து போராடுவது ஏன் ?
CAA வில் வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு மட்டும் தானே குடியுரிமை இல்லை என சொல்லப்பட்டுள்ளது, ஏன் இந்தியர்கள் அனைவரும் மத பாகுபாடு இல்லாமல் இணைந்து போராடுகின்றனர் ? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படுகின்றது. அதற்க்கான பதிலை பார்ப்போம். NRC- மூலம் அஸ்ஸாமில் இந்து, முஸ்லீம், கிருத்துவ சமூகத்தை சேர்ந்த 19 லட்சம் மக்கள் நாட்டற்ற அகதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, பலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் இந்த NRC-நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்ற அரசின் […]
குடியுரிமை சம்மந்தமாக NPR-ல் உள்ள கேள்விகள் என்ன ? எந்த ஆவணங்கள் கேட்க்கப்படும் ?
NPR (தேசிய மக்கள்தொகை பதிவேடு) தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சம்மந்தமாக NPR-ல் உள்ள கேள்விகள் என்ன ? எந்த ஆவணங்கள் கேட்க்கப்படும் ? கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்க்கும் இப்போதுள்ள 2020 கணக்கெடுப்பிற்க்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதை அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள் மூலம் பார்க்கலாம். 1. NPR-ல் 7 (i)-வது கேள்வி “Nationality as declared” (நீங்கள் எந்த நாட்டின் குடிமகன் ?)இதற்க்கு நீங்கள் இந்தியர் சொன்னவுடன், […]
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர் ..
புதிதாக விரிவுபடுத்தப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்கப்படாததை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்ராம் தோப்டேவின் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை புனே மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடினர். சுமார் 40 ஆதரவாளர்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்திற்குள் இருந்த தளபாடங்களை உடைத்து, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தோப்டே போர் (Bhor) தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். சிவசேனாவின் குல்தீப் சூடம் கோண்டேவை 2014 மற்றும் 2019 ஆம் […]
ஹெச் ராஜாவுக்கு திமுக தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ்!
சர்ச்சை பேச்சுக்களில் முதன்மை இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வரும் பாஜக தேசிய செயலாளர்.திரு. ஹெச் ராஜா வுக்கு திமுக தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மோடி அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல தமிழகத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்டாலின், மத வெறியை தூண்டி (!), கலவரம் செய்ய நினைப்பதாக ஹெச்.ராஜா பேசியுள்ளார். மேலும் […]
உபி : போராளி பெற்றோர் சிறையிலடைப்பு; பாசம் தேடி அழும் 14 மாத குழந்தை!
ரவி சேகர் – ஏக்தா இருவரும் வாரணாசியில் வாழும் தம்பதியர். இவர்களுக்கு ஆர்யா என்ற 14 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த 19ம் தேதியன்று, வாரணாசியில் இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கெதிரான அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தம்பதியர் இருவருமாக இணைந்து காற்று மாசுப்பாடினை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் NGO அமைப்பு ஒன்றிணையும் நடத்தி வருகின்றனர். உபி வாரணாசியில் தடையை மீறி நடத்தப்பட்ட அந்த சிஏஏ அமைதி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்று […]
CAA, NRC க்கு எதிராக பிராமண அர்ச்சகர்கள் நடத்திய போராட்டம்!
சிஏஏ மற்றும் என்.ஆர்.சி க்கு எதிராக சாதி மதம் கடந்து இந்திய அளவில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொல்கத்தாவின் மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே கடந்த திங்களன்று (30-12-19) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகள் கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பஸ்ச்சிம் பங்கா சனாதன் பிராமின் எனும் […]
மோடியின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர சொல்வதா ? – திருமா கடும் தாக்கு!
16ஆம் தேதி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வானொலியில் உரையாற்றுகிறார் அதனால் விடுமுறை நாளாக இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரவேண்டும் என இப்போது மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இது மாணவர்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடியதாக இருக்கிறது. மாணவர்கள் இல்லங்களில் இருந்தவாறே பிரதமரின் உரையைக் கேட்க வேண்டும் என அரசு கூறலாம். பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிற அரசாக தமிழக அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த […]
பிரதமர் மோடி வீட்டருகே தீ விபத்து!!
இன்று சுமார் 7.15 மணி அளவில் டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் வீட்டருகே உள்ள சிறப்பு பாதுகாப்பு பிரிவின் (SPG) வரவேற்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு 17 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. சார்ட் சர்க்கியூட் காரணமாக லோக் கல்யானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தீ விபத்து ஏற்பட்டது பிரதமர் இல்லத்திலோ/அலுவலகத்திலோ […]
மே.வங்கம் :”ஆர்எஸ்எஸ்/ பாஜக வினர் தேவாலயத்தின் மீது குண்டு வீச்சு, அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்தனர்”- தேவாலய ஆயர் குற்றச்சாட்டு..
நேற்று (29-12-19) ஆர்எஸ்எஸ் /பாஜக வை சேர்ந்த 8 நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று மேற்கு வங்கத்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயதில் கையெறி குண்டுகளை வீசியும் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தேவாலய நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் தேவாலயத்திற்குள் மக்கள் இருந்ததாகவும் குண்டு சப்தத்தை கேட்டு பயந்த ஓடிய பிறகு அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்ததாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர். கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ தூரத்தில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பகவான்பூரில் மதியம் 2 மணியளவில் […]
டாக்ஸிலா பல்கலையின் ரோபோடிக்ஸ் போட்டியில் மதரஸா மாணவர்கள் வெற்றி..
டாக்ஸிலா ஹைட்டெக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ரோபோடிக் போட்டியில் ஜாமியா பைதுல் சலாம் மதரஸா மாணவர்கள் பங்கேற்றனர். மதரஸா மாணவர்கள் மற்ற 20 தலைசிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர். அது மட்டுமின்றி உருது பேச்சுப் போட்டி மற்றும் அதே நாளில் ஹைடெக்கில் நடத்தப்பட்ட ‘ஸ்பெல்லிங் பீ ‘ போட்டியிலும் வென்றுள்ளனர். பொதுவாக மத்ரஸா மாணவர்கள் என்றாலே உலக அறிவு இல்லாதவர்களாகவும் மதவெறி கொண்டவர்களாகவும் மீடியாக்களால் சித்தரிக்கப்படும் வேலையில் மதரஸா மாணவர்களின் இந்த வெற்றியானது […]
சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து வருகிறது அதிமுக – அன்வர் ராஜா ஒப்புதல்!
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரவாக செய்யப்பட்டு வருவதால் சிறுபான்மை சமூகத்தவரின் வாக்குகளை இழக்க நேரிடுகிறது என அ.தி.மு.க முன்னாள் எம்.பி.யும் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளருமான அன்வர்ராஜா கூறியுள்ளார். CAA வுக்கு அ.தி.மு.க. ஆதரவு: குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ஓட்டெடுப்புக்கு வந்தபோது இந்த மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களித்ததால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா 125 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 105 […]
ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்!
புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் (1.1.2020 அன்று), சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) சிறப்பு சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகனந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், […]
NRC யால் முஸ்லிமுக்கு மட்டும் தான் பாதிப்பா???
இந்திய அரசியல் சாசனம் காப்பாற்றபட வேண்டும், சகலவிதமான சமயத்து மக்களுக்கும் குடியுரிமை பாதிக்கப்பட கூடாது என்கிற நற்சிந்தனையில் இருப்பவர்கள் அனைவரும் நாடு முழுக்க ஒன்றிணைந்து மத அடிப்படை கொண்ட குடியுரிமை சட்டம், என்ஆர்சி என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து போராடி வருகின்றனர். இது இங்குள்ள அனைவரும் நினைப்பது போல வெறும் முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. இந்த பிரச்சனைக்காக அதிகம் குரலெழுப்ப கூடியவர்களாக முஸ்லிம்கள் வந்து முன்னிற்பதால் உங்களுக்கு அப்படி காட்டப்படுகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 14.23% […]
உபி : சமூக ஆர்வலர் சதாஃபை வயிற்றில் உதைத்து, லத்தியாலும் தாக்கிய போலீஸ்-10 நாட்கள் மேலாகியும் பெயில் இல்லை.
செத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்- சதாஃப் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகருமான சதாஃப் ஜாஃபர், கடந்த 19ந்தேதியன்று , லக்னோவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது படம்பிடித்து கொண்டிருந்த அவரை போலீசார் அநியாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். ஆரம்பத்தில் ஜாஃபர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றே தெரியாமல் தவிக்கவிட்ட போலீஸ் 2நாட்கள் கழித்த பிறகே அவரது சகோதரிக்கு அவர் இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீரா நாயர் போன்ற திரைத்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக […]