நாடு முழுவதும் மக்கள் சிஏஏ வுக்கு எதிராக போராடி வரும் வேளையில் இன்று லக்னோ பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் “எத்தனை வேண்டுமானால் போராடி கொள்ளுங்கள். சிஏஏ வை திரும்ப பெறமாட்டோம்” என கூறியுள்ளது ஜனநாயக விரும்பிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷாவின் பேச்சும் அதற்கான மறுப்பும்: “சிஏஏ வை எதிர்ப்பவர்கள் பொய் பிரச்சாரங்களையும், மாயைகளையும் பரப்புகின்றனர், அதனால் தான் பாஜக ஜான் ஜாக்ரன் அபியனை நடத்துகிறது, இது நாட்டை உடைப்பவர்களுக்கு […]
Author: NewsCap.in Staff
பால் பாக்கட்டை திருடி செல்லும் உபி போலீசார் – வசமாக சிக்கிய வீடியோ !
உபி போலீசார் பால் பாக்கட்டை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் ஆன்லைனில் வெளியானதை அடுத்து வைரலாக பரவி வருகிறது. ஜனவரி 19 ம் தேதி அதிகாலையில் நொய்டா போலீசார் போலீஸ் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் சீருந்து கடை ஒன்றின் அருகே வந்ததும் நிறுத்தபடுகிறது. உடனே வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் காவலர் ஒருவர் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடப்பதை காண முடிகிறது. பிறகு பால் அடுக்கி […]
ரஜினி உருவ பொம்மை எரிப்பு: ஐவர் கைது !
சென்னையில் ஜனவரி 14 ஆம் தேதி தமிழ் பத்திரிகையான ‘துக்ளக்’ இன் 50 வது ஆண்டு-வாசகர்களின் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது உரையில், “1971 இல், சேலத்தில், பெரியார் ஒரு பேரணியை நடத்தினார், அதில் ஸ்ரீ பகவான் ராமச்சந்திரமூர்த்தி மற்றும் சீதா ஆகியோரை நிர்வாணமாகவும் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக சென்றார்- இதை எந்த செய்தி நிறுவனமும் அதை வெளியிடவில்லை. ” என்று கூறி இருந்தார். இதற்கு பல்வேரு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். ராமர் […]
பிரதமர் மோடி இந்திய குடிமகனா? ஆவணங்களை கோரி ஆர்.டி.ஐ விண்ணப்பம் தாக்கல் !
நாடெங்கும் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு இந்திய குடிமகனா என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் விண்ணப்பிக்க பட்டுள்ளது. விண்ணப்பித்தவர் யார்? இது தொடர்பாக கடந்த ஜனவரி 13 ம் தேதி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த ஜோஷ் கல்லுவெட்டில் என்பவர் விண்ணப்பம் செய்துள்ளார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமையை […]
‘அனைவரையும் சமமா நடத்துங்க!’ – முன்னாள் ஆப்கான் அதிபர் இந்தியாவுக்கு கோரிக்கை !!
மோடி அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ மற்றும் கொண்டு வர துடிக்கும் என்ஆர்சி, என்பிஆர் போன்றவற்றிற்கு எதிராக இந்திய மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில் ஆப்கான் நாட்டின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் சமமாக நடத்த வேண்டும் என ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். “ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் என யாருமே இல்லை. ஆப்கானிஸ்தான் நாடே நீண்ட […]
பள்ளிவாசலில் நடைபெற்ற இந்து திருமணம், நகை பணம் வழங்கியும் உதவிய ஜமாத்தார் !
பள்ளிவாசல் ஜமாத்தார் உதவி: நேற்று கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள செருவள்ளி முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு இந்து தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது. கணவரின் மரணத்தைத் தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த மணமகளின் தாய் பிந்து, உதவிக்காக மசூதி குழுவை அணுகியதை அடுத்து அவரின் கோரிக்கையை ஜமாத்தார் உடனடியாக ஒப்புக்கொண்டனர். மணமகள் அஞ்சு மற்றும் மணமகன் சரத் ஆகியோர் மசூதி வளாகத்தில் ஒரு பூசாரி முன்னிலையில் மாலைகளை பரிமாறிக்கொண்டு இந்து முறைபடி சடங்குகளைச் செய்து […]
PFI SDPI தடை..? – கர்நாடக பாஜக அரசு தீவிரம்..
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி நாடு முழுவதும் பற்றி எரிகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய அந்த எழுச்சி என்பதை இந்தியாவின் கடைக்கோடி வரை தன்னிச்சையாக பல்வேறு வடிவங்களில் நாள் தோறும் சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது. அரசிற்கு எதிராக குழுக்கள்., அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் கிளர்ந்தெழும்போது அதனை ஒடுக்கவோ, அவர்களை குறிப்பிட்டு முடக்கவோ, தனிமனித தாக்குதல் தொடுக்கவோ அரசு முனையும். இது வழமையான ஒன்று. இதனை எல்லா அரசுகளும் ஜனநாயகப் போர்வையில் கடைபிடித்தே […]
அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !!
உபி முதல்வர் ஆதித்யநாத் முஸ்லிம் பெயர்களை போன்ற தொனியில் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக உள்ளவர். அந்த விதத்தில் 2018ல் அலகாபாத் என்று இருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றினார். அதை ஒரு சாதனையாக சங்பரிவார கூட்டத்தினர் கொண்டாடினர். அதே சமயம் பெயர் மாற்றத்தால் நகர் எந்த விதத்தில் முன்னேறி விட்டது? இதனால் பயன் என்ன என்று பொது மக்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த பெயர் மாற்றம் செல்லுபடியை எதிர்த்து […]
144 தடை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரின் கன்னத்தில் ‘பளார்’ – மாவட்ட கலெக்டர் அதிரடி !
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு ஆதரவாக பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பாஜக வினர் சட்டத்தை மதிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எத்தனை சொல்லியும் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து பாஜக கூட்டத்திற்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டது. பாஜக வினர் வரம்பு மீறி காவலர்களுடன் நடந்து கொண்டதால் ராஜ்கர் துணை கலெக்டர் பிரியா வர்மா உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். […]
டிஎஸ்பி தவிந்தர் சிங்கிற்கும் பாராளுமன்ற தாக்குதலுக்கும் உள்ள தொடர்பு என்ன?
தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக ஜம்மு & கஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி தவிந்தர் சிங் எனும் அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஹிஜ்புல் முஜாஹிதீனை சேர்ந்த மூன்று பேரை சண்டிகர் கூட்டி வந்து அவர்களுடன் ஊர் சுற்றி இருக்கிறார். அங்கே உள்ள மால்களுக்கு போயிருக்கிறார்கள். அங்கே என்ன செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது என்பது குறித்து இன்னமும் தகவல் தெரியவில்லை. நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பங்கு : இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பெயர் அடிபட்டது. […]
தீவிரமயமாக்கப்படும் சிறார்களை கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பனுமாம்- ஜெனரல் பிபின் ராவத்
டில்லியில் நேற்று நடைபெற்ற ரைசினா மாநாட்டில் பேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், (காஷ்மீரில்) இராணுவம் ‘கடுமையாக நடந்து கொள்கிறது’ என்ற குற்றச்சாட்டை மறுத்தார், மேலும் பெல்லட் துப்பாக்கிகளை ‘குறைவாக’ பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். தீவிரமயமாக்கப்பட்ட சிறு குழந்தைகளை அடையாளம் கண்டு தீவிரமயமாக்கலில் இருந்து விடுவிக்கும் முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ரைசினா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார். ரைஸினா உரையாடல் மாநாடு […]
இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கும் மோடி அரசு ..
டெல்லியில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. எஸ்.சி.ஓ வில் அங்கம் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகள் 4 பார்வையாளர்கள் மற்றும் பிற சர்வதேச உரையாடல் கூட்டாளர்களுக்கும் ( international dialogue partners) அழைப்பு விடுக்கப்படும். பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை […]
“நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்” – மோடியை கடுமையாக விமர்சித்த இந்திய மருத்துவ சங்கம்!
பெண்கள், விலை உயர்ந்த கேஜெட்டுகள் அல்லது வெளிநாட்டு பயணங்கள் என நாட்டின் மிக பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) பிரதமர் மோடி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 2 ஆம் தேதி புதுதில்லியில் ஜைடஸ் காடிலா, டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் வோக்ஹார்ட் உள்ளிட்ட உயர்மட்ட […]
சி.ஏ.ஏ ஆதரித்து பட்டம் விட்டதன் மூலம் தேச விரோதிகளின் முகங்களில் அறைந்து விட்டேன்- பிரக்யா பெருமிதம்!
புதன்கிழமை மகர சங்கராந்தியை முன்னிட்டு சி.ஏ.ஏ, காஷ்மீரின் 370-பிரிவு ரத்து மற்றும் ராமர் கோவில் தீர்ப்பு ஆகியவற்றை ஆதரித்து தீவிரவாத குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் காத்தாடிகளை பறக்கவிட்டார். மேலும் இதன் மூலம் “CAA ஐ எதிர்க்கும் தேச விரோதிகள்” முகங்களில் “அறைந்துள்ளதாகவும்” அவர் கூறினார். “வெற்றிகளோடு நம் நாடு உயரமாக பறந்து செல்வதை இந்த பட்டம் குறிக்கிறது. மகர சங்கராந்திக்கு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பிரக்யா கூறினார். மத்திய பிரதேச முதல்வர் மாநிலத்தில் […]
‘நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சடித்து ரூபாய் மதிப்பை கூட்டலாம்’ – சு.சுவாமி யோசனை!
இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்துக்கள் வழிபடும் லட்சுமியின் படத்தை அச்சிட்டால் இந்திய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கூட்டும் என பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் அச்சிடப்படும் நோட்டுகளில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, […]