கடந்த பிப்ரவரி 9 அன்று, கோவாவில் உள்ள கத்தோலிக்க சமூகத்தின் பேராயர் குடியுரிமை திருத்த சட்டம், 2019 க்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். “சிஏஏ சட்டத்தை உடனடியாகவும், எந்த நிபந்தனையுமின்றியும் ரத்து செய்ய வேண்டும். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஐ செயல்படுத்துவதை கைவிட வேண்டும்” என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறது அந்த அறிக்கை. எனினும் அறிக்கை பரவலாக மீடியாக்களால் கொண்டு செல்லப்படவில்லை. இந்த திருச்சபையின் நிலைப்பாடானது, கோவாவின் சட்டமன்றத்தின் எட்டு கத்தோலிக்க உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்கில் மோசமான […]
Author: NewsCap.in Staff
நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி!
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பீம் ராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் பேரணிக்கு இன்று அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த பேரணி நாக்பூரின் ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்மிருதி மந்திர் முன் சனிக்கிழமை நடைபெற உள்ளது. போலீசார் மறுப்பு: ரஷிம்பாக் மைதானத்தின் உரிமையாளர்களான சிபி & பெரார் எஜுகேஷன் சொசைட்டியிடம் உரிய தொகை வழங்கப்பட்டு முறையான அனுமதியையும் பெற்ற பிறகு ஆசாத்தின் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என கூறி உள்ளூர் கோட்வாலி […]
உபி முதல்வர் : “போராட்டத்தின் போது போலீசார் ஒருவரை கூட சுடவில்லை, அவர்கேள அவர்களுக்குள் சுட்டு கொண்டனர்”
கடந்த 2019 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு நபர் கூட பொலிஸ் தோட்டாக்களால் கொல்லப்படவில்லை, மேலும் இறந்தவர்கள் “கலவரக்காரர்களின் தோட்டாக்களால்” தான் கொல்லப்பட்டனர் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களின் போது உபி போலீசார் சிறப்பாக செயல்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார். “அகர் கோய் மர்னே கே லியே ஆ ஹி ரஹா ஹை தோ வோ ஜிந்தா […]
ராமர் கோயிலில் பிரமாண்ட ஹனுமான் சிலை கட்டவேண்டும் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வலியுறுத்தல்.
பாஜக வின் இந்துத்துவா கொள்கையை ஆரம்பத்தில் விமர்சித்து வந்தது போல அல்லாமல் கெஜ்ரிவால் முற்றிலும் மாறிப்போய் உள்ளார் என குற்றச்சாட்டுகள் நிலவி வரும் வேளையில், ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புற படுத்த வேண்டும் என கூறினார், பிறகு அவர் பதவியேற்ற நிகழ்ச்சியில் மோடியின் ஆசிர்வாதம் வேண்டி நிற்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் இவ்வாறாக ஒவ்வொன்றாக அரசியல் காய்களை நகர்த்தி வரும் கெஜ்ரிவால், தற்போது எங்குமே மோடி, அமித் ஷா வை விமர்சிப்பதே இல்லை. அவர் ஒரு தீவிர […]
‘இந்தியாவின் சிஏஏ சட்டம் ஏராளமான முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றக்கூடும்’ – யு.என். பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்
இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் ஏராளமான முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானில் உள்ள தி டான் செய்தித்தாளுக்கு அவர் அளித்த பேட்டியில், மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்தார், மேலும் புதிய சட்டங்களை உருவாக்கும் போது மனிதாபிமானத்துடன் செயல்படுமாறு உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ளதாக […]
திருடியதாக கூறி தலித் இளைஞர்களின் மறைவுறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ ட்ரைவர் செலுத்தி சித்திரவதை ..
ராஜஸ்தான்: கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தின் நகவ்ர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம் விற்கும் ஷோரூம் ஒன்றில் 2 தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பணம் திருட முயற்சித்ததாக கூறி ஷோரூமில் வேலை பார்க்கும் நபர்கள் கொடூரமாக தாக்கி, அவரது அந்தரங்க உறுப்புகளில் பெட்ரோல் மற்றும் சுகுரூ ட்ரைவரை செலுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் பெட்ரோல் பங்கில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்தும், தாக்கப்பட்ட இரு […]
‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்குது. சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி, தமிழ் அப்படி இல்ல..’ – பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்..
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்ககின் கேள்விக்கு பதில் அளித்த அவர் “சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. ஆனால் தமிழ் மொழி தமிழர்களால் மட்டுமே பேசப்படும் மொழி எனவே தமிழை விடவும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக” அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகைக்காக குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள […]
15 ஆவணங்கள் இருந்தும் கூட ஜபேதா பேகம் இந்தியர் இல்லை என ஒதுக்கும் என்.ஆர்.சி !
50 வயதான ஜபேதா பேகம் அசாமில் வசிப்பவர். அவரது கணவர் ஒரு நோயாளி, நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக உள்ளவர். ஜபேதா உழைப்பில் தான் குடும்பமே உயிர் பிழைத்து கொண்டு இருக்கிறது. இவரை இந்தியர் இல்லை என்று அசாமின் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. பல்வேறு ஆவணங்களை வைத்திருந்தும் கூட தான் ஒரு இந்தியர் தான் என நிரூபிக்க இன்று வரையில் அவரால் முடிய வில்லை. குவாஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்கப்பெறாத இவரின் இறுதி முயற்சி உச்ச நீதிமன்றத்தில் […]
ஹைதிராபாத்: குடியுரிமை நிரூபிக்குமாறு ஆதார் ஆணையத்தில் இருந்து பலருக்கு நோட்டீஸ்..
ஹைதராபாத்தில் வசிக்கும் சத்தார் கானுக்கு கடந்த பிப்ரவரி 3 ம் தேதி ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ-இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் அவர் ஒரு இந்திய குடிமகனா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. மேலும் சத்தார் பொய் பித்தலாட்டங்களின் மூலம் ஆதார் அட்டையைப் பெற்றதாகவும், பொய்யான கூற்றுக்கள் மற்றும் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் யுஐடிஏஐ அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சத்தார் ஒரு இந்திய நாட்டவர் அல்ல என்று யார் புகார் அளித்தது என்ற […]
ஜார்கண்ட்: பாஜக எம்.எல்.ஏ தப்பி ஓட்டம்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை..
ஜார்க்கண்ட்: நிலம் கையகப்படுத்தல், ஆயுதச் சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக தன்பாத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏ துலு மகாடோவின் வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர். , “அவர்(எம்எல்ஏ) தப்பித்து விட்டார். எனினும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரை கைது செய்ய பல இடங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.” என காவல் அதிகாரி, எஸ்.எஸ்.பி தன்பாத் தெரிவித்துள்ளார். இவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் காவல்துறையினரைத் தாக்கி குற்றவாளி கைதி […]
கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்! – வைகோ கோரிக்கை…
தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பன்னூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல வெவ்வேறு மாதங்களில் அம்மன் கோவில் கொடை விழாக்களும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து வருகின்றன. உலகின் பல பகுதிகளுக்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் தத்தமது ஊர்களில் நடக்கும் இதுபோன்ற திருவிழாக்களில்தான் ஒன்று கூடி உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவி மகிழ்கின்ற வாய்ப்பினைப் பெறுகின்றனர். உறவுகளை அழைத்து விருந்தோம்பல் செய்து தங்கள் […]
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் ..
ஒதிஷாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், ஒதிஷா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்கது. மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒதிஷா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே, மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக […]
மூன்றாண்டுகள் முதல்வராக நீடித்ததே சாதனைதான்: கே.எஸ்.அழகிரி!
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து, 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். சசிகலாவின் விருப்பு, வெறுப்பின் காரணமாக பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி 16 […]
சி.ஏ.ஏ: ‘நாளைய சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்போம்’ : தொல் .திருமாவளவன் அறிவிப்பு!
இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் நாளை தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தொல்.திருமாவளவன், எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளார். ‘சி.ஏ.ஏ வை நிராகரிப்போம், என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடத்தமாட்டோம்’ என தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு இசுலாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் சிறுத்தைகள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு […]
குஜராத்: மாதவிடாய் உள்ள நிலையில் சமைத்தால் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பால் – சுவாமி ஜி யின் கருத்தால் சர்ச்சை !
“மாதவிடாய் ஏற்பட்ட பெண் சமைத்த உணவை நீங்கள் ஒருமுறை உண்டாலும் கூட, அடுத்த ஜென்மத்தில் நீங்கள் கட்டாயம் “பலட்” (எருதாக) தான் பிறப்பீர்கள். மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் தனது கணவருக்கு சமைப்பாளானால் அவள் அடுத்த பிறவியில் கட்டாயம் “குத்ரி” (பெண் நாய்) ஆக தான் பிறப்பால். இது ஷாஷ்திரத்தில் சொல்லப்பட்டதாகும். எனவே இந்த பிரச்னையில் இருந்து தப்பித்து கொள்ள ஆண்கள் திருமணத்திற்கு முன்னரே சமையல் கற்று கொண்டிருக்க வேண்டும். ” இது குஜராத்தில் உள்ள […]