மதியர் பிரதேஷ் : கவிழப்போகும் காங்கிரஸ், விரைவில் பாஜக ஆட்சி ..
Madhya Pradesh

மத்திய பிரதேசம்: கவிழப்போகும் காங்கிரஸ், விரைவில் பாஜக ஆட்சி ..?

காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்தார். முன்னதாக 17 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கர்நாடகா சென்ற எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் திங்கள்கிழமை இரவு சுமார் 20 மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி மீண்டும் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவிலிருந்து தான் விலகினேன், இந்துத்துவாவிலிருந்து அல்ல - உத்தவ் தாக்கரே அறிவிப்பு
Hindutva Maharashtra

பாஜகவிலிருந்து தான் விலகினேன், இந்துத்துவாவிலிருந்து அல்ல – உத்தவ் தாக்கரே அறிவிப்பு

பாஜகவிடம் இருந்துதான் சிவசேனா விலகியதே தவிர, இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகிக்கொள்ளவில்லை’ என அயோத்தியில் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணியிலிருந்து வெளியேறி, என்.சி.பி கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிர முதல்வரான சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமா் கோயில் கட்ட ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தாா். அயோத்தியில் செய்தியாளா்ளிடம் பேட்டியளித்த உத்தவ் தாக்க்ரே. ‘நான் பாஜகவிடம் இருந்து தான் பிரிந்தேனே தவிர , இந்துத்துவ கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. பாஜகவும், இந்துத்துவமும் ஒன்றல்ல. […]

குஜராத்: 2002 நரோடா காம் கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம்
Gujarat Hindutva

குஜராத்: 2002 நரோடா காம் கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அதிரடி இடமாற்றம்..

குஜராத் : 2002 ஆம் ஆண்டு பாசிஸ்டுகளால் அரங்கேற்றப்பட்ட நரோடா காம் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி வழக்கை விசாரித்து வந்த சிறப்பு எஸ்ஐடி நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிரடியாக வல்சாட்டின் முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். வழக்கு பின்னணி: குஜராத் நரோடா காம் படுகொலை என்பது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்த ஒன்பது பெரிய கலவர வழக்குகளில் ஒன்றாகும். கோத்ரா ரயில் படுகொலையை […]

விரும்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !
Activists Arrests Hindutva Uttar Pradesh Yogi Adityanath

வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !

யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை. மேலும் அந்த சமயத்தில் […]

மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்து ...
Corona Virus Delhi Pogrom Modi

மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்து …

மார்ச் 17 அன்று ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கவிருந்த மாபெரும் பேரணியை பங்களாதேஷ் அரசு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்தாகியுள்ளது. பங்களாதேஷில் இதுவரை மூன்று பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. டெல்லியில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பங்களாதேஷில் பிரமாண்டமான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்ப பெற வேண்டும், மோடி பங்களாதேஷிற்குள் […]

'என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?' தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..
NPR Telangana

கேரளாவை போல தெலுங்கானாவிலும் என்.பி.ஆருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – மாநில காங்கிரஸ் கோரிக்கை ..

கேரள அரசு மற்றும் வேறு சில மாநிலங்களின் நடவடிக்கையை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் தெலுங்கானா பிரிவுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான என் உத்தம்குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), என்.பி.ஆர் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் வரவேற்றார். […]

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !
Delhi Pogrom Hindus Pakistan

டில்லி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்துக்கள் மாபெரும் பேரணி; ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து !

கராச்சி: கடந்த மாதம் இந்திய தலைநகரில் பாசிஸ்டுகளின் வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை அணிவகுத்துச் சென்றனர். மேலும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை (இன்று) ஆரவாரமின்றி மிகவும் அமைதியான முறையில் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் சிறுபான்மையினர்: 210 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் 2 சதவிகிதம் இந்துக்கள் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள் தெற்கு சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆண்டு தோறும் ஹோலி பண்டிகையின் […]

கர்நாடகா : இந்துத்துவாவினரின் புகாரின் பேரில் 12 அடி இயேசு சிலையும் 14 சிலுவைகளும் தகர்ப்பு !
Christians Hindutva

கர்நாடகா : இந்துத்துவாவினரின் புகாரின் பேரில் 12 அடி இயேசு சிலையும் 14 சிலுவைகளும் தகர்ப்பு !

பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவின் தேவநஹள்ளியில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ள 12 அடி நீளமுள்ள இயேசு கிறிஸ்து சிலையும், 14 சிலுவைகளையும் தகர்த்தெறிய பட்டுள்ளது. இது குறித்து தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்துத்துவ அமைப்புகள் அராஜகம்: பிப்ரவரி 23 அன்று இந்துத்துவ அமைப்புகளான பஜ்ரங் தாள் மற்றும் இந்து ரக்ஷனா வேதிகே பல ஆண்டுகளாக கிறிஸ்துவர்கள் வழிபட்டு வரும் இடத்திற்கு சென்று கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி பிரச்னை செய்துள்ளனர், மேலும் […]

"வைரஸின் குரல் பாசிசத்தின் குரல் போலவே இருக்கிறது" - மனுஷ்ய புத்திரன்
Corona Virus

“வைரஸின் குரல் பாசிசத்தின் குரல் போலவே இருக்கிறது” – மனுஷ்ய புத்திரன்

பாசிசத்தையும் வைரசையும் ஒப்பிட்டு அழகான கவிதை ஒன்றை எழுதியுள்ளார் மனுஷ்ய புத்திரன்.. வைரஸின் குரல்பாசிசத்தின் குரல் போலவே இருக்கிறது கூட்டம் கூடாதே என்கிறதுகூடியவர்கள் கலைந்து போங்கள் என்கிறது.வீடுகளுக்குள்ளேயே இருங்கள் என்கிறதுமரண தண்டனைக் கைதிகள் போலமுகங்களை மூடிக்கொள்ளுங்கள் என்கிறதுமுழுமையாக சோதியுங்கள் என்கிறது வைரஸின் குரல்சனாதனத்தின் குரல் போலவே இருக்கிறது இன்னொரு மனிதனை தொடாதே என்கிறதுஅன்னியர்களின் அருகில் இருக்காதே என்கிறதுகைகளை எப்போதும் சுத்தப்படுத்திக்கொண்டே இரு என்கிறதுமாமிசங்களை புசிக்காதே என்கிறது வைரஸின் குரல்ஒழுக்கத்தின் குரல் போலவே இருக்கிறது யாரையும் முத்தமிடாதே என்கிறதுயாருடனும் […]

இந்தியாவில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள்- உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்
Corona Virus

அசைவ உணவு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வரும் என்ற செய்தி உண்மையா ?

அசைவ உணவு உண்டால் கொரோனா வைரஸ் தாக்கும் என்று வந்த வதந்திகளை தொடர்ந்து தேசிய அளவில் சிக்கன் மற்றும் முட்டை விற்பனை குறைந்து விட்டிருக்கிறது. விளைவு: இதுவரை கோழித்துறை சுமார் 2000 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. இதனை சரி செய்ய மீன்வளம் மற்றும் பண்ணைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ‘அசைவ உணவுகளுக்கும் கொரோனா வைரசுக்கும் சம்பந்தம் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.’ என்று அறிக்கை விடுத்திருக்கிறார். இப்படி கொரோனா வந்து திடீரென்று விற்பனை படுத்த உடன்தான் […]

"காங்கிரஸ் தான் எஸ் வங்கி சரிவுக்கு காரணம்" - நிர்மலாவின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி !
Indian Economy Intellectual Politicians

“காங்கிரஸ் தான் எஸ் வங்கி சரிவுக்கு காரணம்” – நிர்மலாவின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி !

டிவிட்டரில் நேற்று யெஸ் பேங்க் குறித்த சில கேள்விகளை அரசை நோக்கி ப சிதம்பரம் எழுப்பி இருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று மார்ச் 2014 ல் யெஸ் பேங்க்கின் லோன் 55,633 கோடியாக இருந்திருக்கிறது. மார்ச் 2019ல் அது 2,41,999ஆக உயர்ந்து விட்டிருக்கிறது. அதாவது ஆண்டுக்கு 35 சதம் லோன் அதிகரிப்பு. இது எப்படி நடந்தது, இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்துக்கும் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். முந்தைய காங்கிரஸ் அரசில்தான் யெஸ் பேங்க் சரிவுக்கு வித்திடப் […]

'என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?' தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..
NPR Political Figures Telangana

‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..

‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சட்டசபையில் கூறி இருக்கிறார். ‘நாங்கள் நிலவுடமைக் குடும்பம்தான். ஆனால் ஒரு கிராமத்து வீட்டில்தான் நான் பிறந்தேன். ஊர்ப்பெரியவர் ஒருத்தர் “ஜென்ம நாமா” என்று எழுதிக் கொடுத்தார். அதில் அரசு சீல் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா ஒரு காகிதம்தான். எனக்கே இப்படி இருக்கும் பொழுது கிராமத்தில் வசிக்கும் தலித், பழங்குடி மற்றும் ஏழைகளை எப்படிப் போய் ஆவணம் கேட்பேன்?‘ […]

உபி போலீஸ் அராஜகம் பெண் போராட்டக்கார்கள் மீது தடியடி
CAA NPR NRC Opinion

“சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டங்களால் பெண்களுக்கே அதிக பாதிப்பு”

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்ட திட்டங்கள் பெண்களுக்கு எதிரானவை, அது எப்படி என்கிறீர்களா? முதலில் ஒரு பொதுவான விஷயத்தை தெரிந்து கொள்வோம்: உலகில் எந்த நன்மை நடந்தாலும் அதில் முதலாவது மற்றும் அதிகப் பயன் பெறுவது ஆண்கள்தான். உதாரணத்துக்கு இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட்ட பொழுது ஆண்கள்தான் முதலில் கல்வி கற்க அனுப்பப் பட்டனர். நவீன உடை இந்தியாவுக்கு வந்த பொழுது சமூகத்தில் எந்த முணுமுணுப்பும் இன்றி ஆண்கள்தான் சௌகரியமான பேண்ட் சட்டைக்கு மாறினார்கள். […]

டில்லியில் முஸ்லிம்களுக்கு உதவிய சீக்கியர்கள்; உபியில் சீக்கியர்களுக்காக நிலத்தை விட்டு கொடுத்த முஸ்லிம்கள்!
Delhi Pogrom Muslims Sikhs

டில்லியில் முஸ்லிம்களுக்கு உதவிய சீக்கியர்கள்; உபியில் சீக்கியர்களுக்காக நிலத்தை விட்டு கொடுத்த முஸ்லிம்கள்!

கடந்த பத்தாண்டுகளாக சீக்கிய மற்றும் முஸ்லிம்களிடையே நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த குருத்வாரா-பள்ளிவாசல் இடம் தொடர்பான வழக்கில் முஸ்லிம்கள் அந்த இடத்தை சீக்கியர்களுக்கே விட்டுக் கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் சஹ்ரான்பூர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரம். இந்த நகரத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா உள்ளது. 2010ம் ஆண்டு குருத்வாராவை விரிவாக்கம் செய்ய அருகிலிருந்த ஒரு இடத்தை வாங்கி அந்த இடத்திலிருந்த கட்டிடத்தை இடித்துள்ளனர். அதில் பழைய மசூதிக் கட்டிடமும் ஒன்று. பள்ளிவாசல் இடத்தை சொந்தம் கோரி […]

'இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது' - கிரிகரி ஸ்டாண்டன்
International News Muslims

‘இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது’ – கிரிகரி ஸ்டாண்டன்

இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 12 ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலவரம்” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டில் ஜெனோசைட் வாட்சின் நிறுவனர் டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் உரையாற்றினார். அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவதை சுட்டி காட்டிய அவர், இந்த இரண்டு மாநிலங்களிலும் முழுமையான ஒரு இனஅழிப்பு […]