உபி : பசிக்கு பிஸ்கட் வாங்க சென்ற ரிஸ்வான்(2);கொடூரமாக தாக்கிய போலீஸ் - இளைஞர் உயிர் இழப்பு !
Islamophobia Muslims Uttar Pradesh

உபி : பசிக்கு பிஸ்கட் வாங்க சென்ற ரிஸ்வான்(22);கொடூரமாக தாக்கிய போலீஸ் – இளைஞர் உயிர் இழப்பு !

தினகூலித் தொழிலாளியான ரிஸ்வான் அகமது 22, உபி மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இறந்தார், லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய சமயத்தில் போலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிர் இழந்துள்ளதாக ரிஸ்வானின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தனது பொலிஸ் புகாரில், ரிஸ்வானின் தந்தை இஸ்ராயீல், ஏப்ரல் 15 ம் தேதி மாலை 4 மணியளவில் அம்பேத்கர் நகரில் உள்ள சஜ்ஜாப்பூர் வட்டாரத்தில் அத்தியாவசிய வீட்டு பொருட்களை வாங்குவதற்காக சென்றதாக […]

'கொரொனோ, இந்துத்துவ சக்திகள் எனும் இந்த இரண்டில் சங்கிகளே மிக மிக ஆபத்தானவர்கள்' - திருமுருகன் காந்தி கண்டனம்!
Corona Virus Islamophobia

21 இந்திய கடற்படை வீரர்களுக்கு கரோனா தொற்று, இதற்கும் முஸ்லிம்களே காரணம் என்பார்களா?- திருமுருகன் காந்தி கேள்வி ..

21 இந்திய கடற்படை வீரர்களுக்கு கரோனா தொற்று. .கடற்படை தளத்தில் இருந்த வீரர்களுக்கு கொரொனோ தொற்று எப்படி வந்திருக்க இயலும்?. முஸ்லீம்களால் தொற்று பரவியது என வாய்கிழிய பேசும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள், ராணுவத்தினரிடையே தொற்று பரவும் நிலையை உருவாக்கியது யார் எனச் சொல்லுவார்களா? பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்ளாக தொற்று சென்றிருக்கிறதெனில், சாமனிய மக்களுக்கு நீங்கள் கொடுத்த பாதுகாப்பு கட்டமைப்பு பல்லிளிக்கிறதே!. இசுலாமியர் மீதான குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட திசைதிருப்பல், மதவெறி பிரச்சாரமன்றி வேறல்ல. இராணுவத்தையே பாதுகாக்க வக்கற்ற அரசு இந்த […]

முஸ்லிம்களை போலவே உடை அணிந்து கொரோனா பரப்பிவிடுவோம் என பீதி கிளப்பிய மூவர் கைது ..
Corona Virus Islamophobia Karnataka

முஸ்லிம்களை போலவே உடை அணிந்து கொரோனா பரப்பிவிடுவோம் என பீதி கிளப்பிய மூவர் கைது ..

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் முஸ்லிம்களே என்பதைப் போன்ற பொய்யான வெறுப்புப் பிரச்சாரத்தை பாசிஸ்டுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பொய்யான செய்திகளை பரப்புவது அரைகுறையாக செய்திகளை பரப்பி வெறுப்பை தூண்டுவது என்று பல்வேறு கீழ்தரமான வேளைகளில் பாசிஸ்டுகள் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது மேலும் வெறுப்பை பரப்ப முஸ்லிம்களை போலவே வேடமிட்டு கரோனா பரப்ப வந்ததை போன்று நாடகமாடிய பாசிஸ்டுகள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம்களைப் போலவே நீண்ட ஆடை, […]

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக் கருவி எத்தனை வாங்கப்பட்டது, அதன் விலை என்ன ? வெளிப்படை தன்மை வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்..
Political Figures Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக் கருவி எத்தனை வாங்கப்பட்டது, அதன் விலை என்ன ? வெளிப்படை தன்மை வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்..

கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

முஸ்லிம்களின் இனஅழிப்புக்கு அழைப்பு விடுத்த பாலிவுட் நடிகை கங்கனாவின் சகோதரி கணக்கை முடக்கியது ட்விட்டர்..
Islamophobia

முஸ்லிம்களின் இனஅழிப்புக்கு அழைப்பு விடுத்த பாலிவுட் நடிகை கங்கனாவின் சகோதரி கணக்கை முடக்கியது ட்விட்டர்..

மத விரோதம் வளர்க்கும் வகையில் பதிவிட்ட நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டேலின் கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி சண்டேல் முஸ்லீம் விரோத கருத்துக்களை தொடர்ந்து பேசி வருபவர். எனினும் இம்முறை அனைத்து வரம்பையும் மீறி இன அழிப்புக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம் கருத்து தெரிவித்துள்ளார் அவர். இரண்டு தினங்களுக்கு முன்பு ரங்கோலி சண்டேல்“முல்லாக்களையும் (முஸ்லிம்களையும்), மதச்சார்பின்மை பேசும் மீடியாவினரையும் வரிசையாக நிற்கவைத்து சுட்டுத்தள்ள வேண்டும். இதனால் நாம் […]

சேலம்: ராஜகணபதி மற்றும் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை, அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..
Corona Virus Tamil Nadu

சேலம்: ராஜகணபதி மற்றும் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை, அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மத ரீதியான எந்த வித நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து அக்கோவில் அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திரை திருநாளையொட்டி, சேலம் ராஜகணபதி கோவிலைத் திறந்து அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். வரிசையில் நின்று பக்தர்களும் வழிபட்டனர். தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பூஜை நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அர்ச்சகர்கள் விஸ்வநாதன், ராஜா […]

இம்மாத இறுதியில் கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களை திறக்க மாநில பாஜக அரசு முடிவு ..
Corona Virus Uttarakhand

இம்மாத இறுதியில் கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களை திறக்க மாநில பாஜக அரசு முடிவு ..

நாடு முழுக்க கரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக அரசாங்கம், இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 29 ஆம் தேதி கேதர்நாத் கோவிலையும், ஏப்ரல் 30ஆம் தேதி பத்ரிநாத் கோவிலையும் திறக்க அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. கேதர்நாத் கோவிலின் தலைமை பூசாரி மகாராஷ்டிர மாநிலத்திலும் , பத்ரிநாத் கோவில் தலைமை பூசாரி கேரள மாநிலத்திலும் உள்ளதால் ஒருவேளை தலைமை பூசாரிகளால் […]

ஜல்லிக்கட்டு காளை மரணம்; இறுதி ஊர்வலத்தில் 3000 பேர் பங்கேற்பு
Corona Virus Tamil Nadu

ஜல்லிக்கட்டு காளை மரணம்; இறுதி ஊர்வலத்தில் 3000 பேர் பங்கேற்பு!

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளையின் இறுதிச்சடங்கில் 3000 பேர் பங்கேற்றதால் அப்பகுதியில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. முடுவார்பட்டியிலுள்ள செல்லாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்துள்ளதால் அக்காளைக்கு கிராம மக்கள் சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, காளையின் உடலை ஏற்றிச்செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்து, காளையை சுற்றி மலர் மாலைகளும், ரொக்கப் பணமும் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்தக் காளை பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்று பரிசுகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளது. ஆகவே, காளையின் […]

மத்தியப் பிரதேசம்: அமைச்சரவை இல்லாத நீண்ட கால ஆட்சி என்ற சாதனை படைத்த பாஜக முதல்வர்; குவியும் கண்டனங்கள்.
BJP Corona Virus Madhya Pradesh

மத்தியப் பிரதேசம்: அமைச்சரவை இல்லாத நீண்ட கால ஆட்சி என்ற சாதனை படைத்த பாஜக முதல்வர்; குவியும் கண்டனங்கள்.

அமைச்சரவை இல்லாமல் நீண்ட காலம் பணியாற்றிய நாட்டின் முதல் முதலமைச்சர் என்ற நிலையை அடைந்துள்ளார் பாஜக வின் சிவராஜ் சிங் சவுகான். கர்நாடகாவில், முதல்வராக பதவியேற்ற 24 நாட்களுக்கு பிறகே யெடியூரப்பா அமைச்சரவை அமைத்தார். தற்போது அந்த சாதனையை சிவராஜ் சிங் சவுகான் முறியடித்துள்ளார். இன்றோடு, அமைச்சரவை இல்லாமலேயே 26 நாட்கள் முதல்வராக பணியாற்றி உள்ளார், சிவராஜ். மாபெரும் சாதனை: அமைச்சர்கள் குழு இல்லாமல் முதலமைச்சராக நீண்ட காலம் பணியாற்றிய சாதனைக்காக சவுகானை வாழ்த்தியுள்ளார் காங்கிரஸ் மாநிலங்களவை […]

உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
Crimes Against Women Rape Uttar Pradesh

உபி : ரேஷன் பொருட்களை விநியோகிக்க சென்றவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

உத்திர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடையில் பணிபுரியும் ஒருவன், 30 வயதான திருமணமான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை, கடந்த புதன் கிழமையன்று உபி பொலிஸார் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதில் தான் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றதாகவும், அப்போது ரேஷன் கடையில் இருந்தவர் நான் வீட்டிற்கே வந்து உங்களுக்கு பொருட்களை தருகிறேன் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என கூறியதாகவும். பிறகு வீட்டிற்கு வந்த ரேஷன் கடை ஊழியர் […]

மத்திய நிதி அமைச்சருக்கு பாடமெடுத்த மஹுவா மொய்த்ரா ..
Political Figures

மத்திய நிதி அமைச்சருக்கு கணித பாடமெடுத்த மஹுவா மொய்த்ரா ..

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மோடி அரசு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. பிரதமர் வெறும் அட்வைஸ் மட்டுமே வழங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டை உண்மை படுத்தும் வகையில் கொரோனாவை எதிர்த்து களமாட மாநில அரசாங்கங்கள் கேட்கும் நிதியில் மிகவும் சிறிய அளவிலேயே மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் தமிழகமும் விதி விலக்கல்ல. மேலும் PM cares ன் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் எவ்வாறு […]

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம் (Complete non-sense) - இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி !
Corona Virus Islamophobia Media

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம் – இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி !

கொரோனா பரவலுக்கு முஸ்லீம்கள் மீது பழி போடுவது முட்டாள் தனம், இது மிகவும் ஆபத்தானது, மத வெறுப்பு பிரசாரங்களால் இந்தியாவில் கோரோனா பாதிப்புகள் இன்னும் அதிகமாகும். அது இந்தியாவிற்க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், என்று இந்தியா டுடே பேட்டியில் மீடியாக்கள் மற்றும் சில குழுக்களை கடுமையாக சாடியுள்ளார் இஸ்ரேலிய பேராசியர் யூவல் ஹரரி கொரோனா விஷயத்தில் முஸ்லீம்கள் மீது அவதூறு பரப்புவதில் முன்னனியில் உள்ளவர் இந்தியா டுடேயின் (India Today) செய்தி ஆசிரியரான ராகுல் கன்வால் இவர் […]

ஊரை விட்டு விரட்டி அடிக்கப்படும் பஞ்சாப் பழங்குடியின முஸ்லிம்கள்; பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரத்தின் விளைவு!
Corona Virus Islamophobia Muslims Punjab

ஊரை விட்டு அடித்து விரட்டப்படும் பஞ்சாப் பழங்குடியின முஸ்லிம்கள்; பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரத்தின் விளைவு!

டெல்லி மாநாட்டில கலந்து கொண்டவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருக்கு என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கொரானா வைரசுக்கு குல்லா போட்டு போரவார ஆட்களை எல்லாம் லுங்கிய கழட்டி ஆராச்சியல் இறங்குகிய ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்துத்துவா சங்கிகள் “முஸ்லிம்கள் திட்டமிட்டு கொரோனாவ பரப்புகிறார்கள” என்று பொய் பிரச்சாரங்களை மக்கள் பரப்புகிறார்கள். இவர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பிவிடுவதால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் இந்துமக்களால் அப்பாவி முஸ்லிம்கள் […]

Madras High Court
Corona Virus Islamophobia

தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்களில் அவதூறு;அரசு பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (17 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்கள் அவதூறு பரப்பி வரும் நிலையில், அந்த ஊடங்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20 வரை இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டதே தவிர […]

கர்நாடகா: ஆயிரக்கணக்கோனோர் ஒன்று திரண்டு நடத்திய தேர்த்திருவிழா; உறங்கும் அரசாங்கமும் காணாமல் போன மீடியாக்களும்..
Corona Virus Karnataka

கர்நாடகா: ஆயிரக்கணக்கோனோர் ஒன்று திரண்டு நடத்திய தேர்த்திருவிழா; உறங்கும் அரசாங்கமும் காணாமல் போன மீடியாக்களும்..

பாஜக ஆளும் கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கலாபுராகி மாவட்ட சித்தாபூர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது. நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சித்தலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த செய்தியை மோடியாக்கள் மக்கள் வரை கொண்டு சேர்க்கவில்லை. நாம் அறிந்தவரை இந்தியாவின் தொலைக்காட்சி ஊடங்கங்களில் இந்த […]