நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சீமான் மீது கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில், சனிக்கிழமை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமானின் பேச்சு இரு சமூகங்களிடையே வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டதாகவும் அது அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டபட்டுள்ளது. சீமான் மீது தேச துரோக […]
Author: NewsCap.in Staff
சவுதி அரேபியா: முஸ்லீம் அல்லாத இந்தியரை இழிவுபடுத்திய சவுதி பிரஜை கைது..
சவுதி அரேபியாவில் வசித்துவரும் முஸ்லிமல்லாத இந்தியர் ஒருவரை அந்நாட்டு குடிமகன் ஒருவர் கடுஞ் சொற்களைக் கொண்டு வசைபாடி உள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியில் சவுதி குடிமகன் ஒருவர் இந்தியர் ஒருவரை இழிவாக பேசி, நீ ஏன் முஸ்லிமாக இல்லை, நீ ஏன் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வில்லை என முட்டாள்தனமாக ஏசி பேசுவதைக் காண முடிகிறது. இந்த வீடியோ வைரலாலானதை தொடர்ந்து, ‘இது குறித்து விசாரணையை துவக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் என்ற […]
கனடா: முஸ்லிம் வெறுப்பு கருத்தை பதிவிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்..
அரபு நாடுகளிலேயே வசித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களை தொடர்ந்து செய்துவரும் காரணத்தால் அரபு நாடுகளில் பல்வேறு பாசிஸ்டுகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ள நிலையில், தற்போது கனடாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாமிய வெறுப்பை கக்கிய ஒருவர் வேலை இழந்துள்ளார். வட அமெரிக்க நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆர்.இ மேக்ஸ் க்கு சொந்தமான பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ரவி ஹூடா என்பவரை அந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. ரவி […]
காஷ்மீர்: ஹிஸ்புல் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த முன்னாள் பாஜக தலைவர் கைது..
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டிஎஸ்பி தாவிந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததற்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), வியாழக்கிழமை ஷோபியனில் உள்ள மால்தாரா கிராமத்தை சேர்ந்த பாஜக தலைவர் தாரிக் அகமது மிர் கடந்த 2 மாதங்களாக போலீஸ் கடுங்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வாஞ்சி தொகுதியின்பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றிகரமான தோல்வியை அடைந்தவர் தாரிக் அகமது மிர். ஹிஸ்ப் பயங்கரவாதிகளுக்கு தளவாட […]
தெலுங்கானா: கோவில் பூசாரி மற்றும் ஊழியர்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள் !
ஒரு புறம் பாசிச பயங்கரவாதிகளும், மோடியாக்களும் முஸ்லிம்கள் கொரோனா பரப்புவதாக பொய்யான மத வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தாலும், பாதிப்புக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் சேவை செய்வதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதாக தெரியவில்லை, அதற்கு காரணம் சராசரி இந்து மக்கள் வேறு, பாசிச பயங்கரவாதிகள் வேறு என்று அவர்கள் அறிந்து வைத்துள்ளது தான். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம், கோத்தகுடெம் பிரிவு ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் (JIH) இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பஜன் […]
கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி..
”…வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!! மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே மிளகாய் அரைப்போம்..பாரத் மாதாக்கீ ஜே!!!” என பாஜக-இந்துத்துவ அமைப்புகள் அழைக்கின்றன. நீங்கள் தயாரா..?வட இந்தியா மார்வாடி-பனியா முதலாளிகளுக்கு ரூ68,000 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன வங்கிகள். இன்று வெளியான அர்.டி.ஐ செய்தி அம்பலப்படுத்துகிறது. கடந்த வாரம் கோவையின் கொடீசியா எனும் சிறு-குறு தொழில் வர்த்தகக் கழகம் இந்தியா முழுவதுமுள்ள சிறு-குறு தொழில்களுக்கான கடனில்/ வரியில்/வட்டியில் சலுகை கேட்டிருந்தனர். நடுத்தர குடும்பத்தினர் ஈ.எம்.ஐ/ […]
குஜராத் மாடல்: நூர்ஜஹானின் 2 வயது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய போலீசார் !
நூர்ஜஹான் ஷேக் தனது இரண்டு வயது நோய்வாய்ப்பட்ட மகள் அய்மனுடன் புதன்கிழமை காலை ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தார், சோதனை சாவடி ஒன்றில் அவர்களை தடுத்து நிறுத்திய குஜராத் போலீசார் கொரோனா வைரஸ் பரப்புவதாக குற்றம் சாட்டி, அவர்களை செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் எல்லிஸ்பிரிட்ஜின் கிழக்குப் பகுதியில் உள்ள விக்டோரியா கார்டனில் இருந்து பல்டியில் உள்ள மருத்துவமனைக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று. குஜராத்: ஆம்புலன்சில் அவசரமாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட, இரண்டு வயது குழந்தை அய்மனின் வாகனத்தை போலீசார் […]
எளியோருக்கும் பசித்தோருக்கும் உணவளிக்கும் மே17 இயக்கத் தோழர்கள்!
மே17 இயக்கத் தோழர்கள் பெரும் பொருளாதார பின்னனி கொண்டவர்களல்ல. கடுமையான உழைப்பால் தம் குடும்பத்தினரோடு இச்சமூகத்தையும் பாதுகாக்கும் உறுதி பூண்டவர்கள். மிக நெருக்கடியான பொருளாதாரச் சூழலுக்கு நடுவிலும் பசித்தவர்களுக்கான உதவிகளை கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறார்கள். சென்னை பூந்தமல்லி, கே.கே.நகர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், காட்பாடி என பல பகுதிகளில் தோழர்கள் பணியாற்று வருகிறார்கள். தொடர்ந்து மக்களோடு துணை நிற்கிறார்கள். மறுபுறம் ‘இடுக்கண் களை’ எனும் முயற்சியால் பல்வேறு யோசனைகளை, தொடர்புகளை எளியமக்களுக்காக பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். […]
உபி : ‘இனி இந்தபக்கமே வர கூடாது’, மகன் கண் முன்னே முஸ்லீம் வியாபாரியை மிரட்டி, இழிவுபடுத்திய பாஜக எம்.எல்.ஏ !
உத்தரபிரதேசத்தில் ஒரு பாஜக எம்எல்ஏ முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கூறிய செய்தி வெளியான ஓரிருநாட்களில் மீண்டும் ஒரு உபி மாநில பாஜக எம்எல்ஏ முஸ்லீம் வியாபாரி ஒருவரை இழிவாக பேசி மிரட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்பு பிரச்சாரம், பொய்யான அவதூறு சுமத்தல் ஆகியவற்றில் இந்தியாவில் முதலிடம் உ.பி என்று விமர்சனம் செய்யப்படும் நிலையில் அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ள […]
ம.பி: சமூக விலகலை குழி தோண்டி புதைத்த பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்; முக கவசங்களும் இன்றி கோலாகல கொண்டாட்டம் !
கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது.கடும் விமர்சனங்களுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் நரோட்டம் மிஸ்ராவை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு. காலில் போட்டு மிதிக்கப்பட்ட சமூக விலகல்: பதவி கிடைத்த சந்தோஷத்தில், வெற்றிக்கோலம் பூண்டு நரோட்டம் மிஸ்ரா, அவரது சொந்த ஊரான டாடியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் […]
இந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் – அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை!
அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்க்கான ஆணையம் (USCIRF) நேற்று தனது ஆண்டறிக்கையை (Annual Report) வெளியிட்டது. இதில் இந்தியாவில் முஸ்லீம்கள் பி.ஜே.பி அரசால் மிகவும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தப்ரேஸ் அன்சாரி கொலையை சுட்டி காட்டி “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற பெயரில் கொலைகள் நடப்பது டெல்லியில் CAA போராட்டத்திற்க்கு எதிராக திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டது மாட்டின் பெயரால் 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் […]
பள்ளிவாசலில் பாங்கு சொல்லக்கூடாது என முஸ்லிம்களை தாக்கி, பள்ளியை பூட்டிய பாசிஸ்டுகள்; துணைபோன போலீசார்,தாசில்தார்!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது. ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் சுகாதாரத்துறை அமைச்சரயே நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு. மக்கள் எல்லாம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்று அஞ்சி வரும் சமயம், அத்தோடு சேர்த்து மதவெறி, மத வெறுப்பு எனும் வைரசையும் பாசிஸ்டுகள் பரப்பி வருவதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் […]
முஸ்லிம்களிடம் காய்கறிகளை வாங்காதீர்கள் என வெறுப்பை கக்கும் பாஜக எம்.எல்.ஏ !
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ளவர்களிடம் முஸ்லிம் விற்பனையாளர்களிடமிருந்து காய்கறி வாங்க வேண்டாம் என்று பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார். “இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், யாரும் முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்கக்கூடாது” என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் பர்ஹாஜ் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி கூறுகிறார். எனினும் இவ்வளவு மோசமான வெறுப்பு பேச்சு பேசியது குறித்து அவரிடமே விளக்கம் கேட்கப்பட, ஆம் […]
இன்றைய நெருக்கடி உருவானது கொரோனா வைரசால் இருக்கலாம். ஆனால் அதனைப் பரப்பியது அரசுதான் – ராஜிவ் பஜாஜ்!
“லாக் டவுன்” ஐ எதிர்த்து முதலாளிகள் வெளிப்படையாக மோடி அரசைக் கண்டிக்கத் தொடங்கிவிட்டனர். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் இப்படியான லாக்டவுன் ஒரு தீர்வாகாது என்கிறார். மோடி அரசு பணமதிப்பு நீக்கம் செய்தபோது இது பயனற்ற ஒன்று என வாயைத் திறந்து கண்டித்த தொழிலதிபர் அவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த 50 ஆண்டுகளில் காணாத பெரும் பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இது ஒரு முதலாளியின் […]
இந்துக் குடும்பங்கள் ஆலயம் கட்ட இடம் அளித்த ஷர்ஜில் இமாமின் குடும்பத்தார்; இன்று இவரை தான் மோடி அரசு கைது செய்து வைத்துள்ளது.!
ஷர்ஜில் இமாம். நினைவிருக்கிறதா இவரை ?அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு தற்போது இந்திய வரலாறு குறித்த மேலாய்வுக்காக டெல்லி ஜே.என்.யூவில் சேர்ந்துள்ள நிலையில் இன்று டெல்லி போலீசால் – அதாவது மோடி அரசால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வெளியே வரமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற பிரச்சினைகளில் நியாயம் வேண்டி எழுதியும் பேசியும் வருகிற நாமும் கூட இவர் மீதான இந்தக் கொடும் நடவடிக்கை குறித்து ஒன்றும் எழுதாமல் போன குற்ற […]