பாஜக-மோடி ஆட்சியில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமார் 17,000 முஸ்லிம்கள் இன்றளவும் துன்பங்களைச் சுமந்து மாநில, மத்திய அரசுகளின் உதவியை எதிர்பார்த்து துயர வாழ்க்கையில் உழல்கின்றனர். மிக மோசமான நிலையில் முஸ்லிம்கள்: இனக்கலவரத்தால் தங்களுடைய வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மிக ஏழ்மையான முஸ்லிம்கள், மறுவாழ்வு மையம் என்ற பெயரில் மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற வகையில் அமைக்கப்பட்ட சிதிலமடைந்த தற்காலிக கூடாரங்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய […]
Author: NewsCap.in Staff
அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படலாம்: தருண் கோகோய்
குவாஹாட்டி: அசாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் பதவிக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். அஸ்ஸாமிற்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்க படலாம் என்று நான் சந்தேகிக்கிறேன், ” என்று கோகோய் […]
கொரோனாவில் இருந்து மீண்ட அமித் ஷா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..என்ன தான் நடக்கிறது?
கொரோனவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் தான் கொரோனா நோயில் இருந்து மீண்டு விட்டதாகவும், நெகட்டிவ் ரிசல்ட் வந்து விட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். குர்கானில் உள்ள மெடந்தா என்ற தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜும் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அமித் ஷாவின் உடல் நிலை குறித்த உண்மை செய்தியை வெளியிட வேண்டும் என நெட்டிசன்கள் ஒருபுறம் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த […]
‘டெல்லி போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கடுமையாக துன்புறுத்தினர்’ – இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் குமுறல்!
வடகிழக்கு டில்லியின் வடக்கு கோண்டாவை அடுத்துள்ள சுபாஷ் மொஹல்லாவைச் சேர்ந்த சுமார் 10 பெண்கள் ஒன்றுகூடி கடந்த 08/08/20 அன்று மாலை பஜன்புரா காவல்நிலையம் சென்று இருதினங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான FIR நகல் வேண்டுமென கோரியுள்ளனர். கூட வந்த பிற பெண்கள் வெளியில் காத்திருந்த நிலையில் ஷஹீன் கான், ஷன்னோ, அவருடைய 17 வயது மகள் ஆகிய மூன்று பெண்கள் மட்டும் பஜன்புரா காவல்நிலையத்தின் உள்ளே சென்று FIR நகலைக் கோரியுள்ளனர். அப்போது அங்கிருந்த […]
பிரண்ட்ஸ் ஆப் பிஜெபி அமைப்பின் மூலம் தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் நிதி திரட்டல் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
“அயல்நாட்டு பா.ஜ.க நண்பர்கள்” ( Overseas Friends of BJP) என்ற அமைப்பின் சீனா மற்றும் ஹாங்காங்கிற்கான துணைத்தலைவராக இருக்கக் கூடியவர் ராஜூ சுப்னானி. ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு நிதியும், ஆயுதங்களும் சப்ளை செய்ததற்காக பராகுவே நாட்டில் தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராஜூ சுப்னானியின் தீவிரவாதத் தொடர்பு பற்றிய ஒரு அலசல்… சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து பா.ஜ.கவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தல், நிதி திரட்டுதல் போன்ற காரியங்களைச் செய்யக்கூடிய ராஜூ சுப்னானியை 2002-ல் ஹாங்காங்கிற்கு சென்றிருந்த […]
மருத்துவர்களுக்கு தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக வெளியான நியூஸ் 18 செய்தி மாற்றப்பட்ட வினோதம்!
டில்லி AIIMS மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஸ்ரினிவாஸ் ராஜ்குமார் அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் “மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற N95 முகக்கவசங்கள், மற்றும் PPE – தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்கப்படாமை” பற்றியும் நியூஸ்18.காம் இணைய தளத்தில் மே-29 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக, நடந்தவை என்ன தெரியுமா? முன்னதாக கடந்த ஏப்ரலில், PPE வாங்க ஒதுக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாயை PM CARES-க்கு திருப்பிவிட்டது AIIMS நிர்வாகம். *அச்செய்தி முற்றிலும் […]
தாய் உயிரோடு உள்ளதாக எண்ணி அருகே சென்ற குழந்தை குடும்பத்தாருக்கு லாலு பிரசாத் மகன் ரூ. 5 லட்சம் நிதி உதவி ..
நெடுநாள் பசி, தாகம் மற்றும் நீண்ட தூரப் பயணம் காரணமாக நீரிழப்பு ஆகியவற்றால் சில தினங்களுக்கு முன்பு இரயிலில் இறந்த ஒரு பெண்ணை, தாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயலும் காணொலி வெளியாகி கல் நெஞ்சையும் கரைய வைத்தது. குஜராத்திலுள்ள அஹமதாபாத்திலிருந்து பிஹாரிலுள்ள முஸாஃபர்பூருக்கு கடந்த திங்களன்று புலம் பெயர் தொழிலாளிகளுக்கான ஷ்ரமிக் ரயில் மூலம் வந்த அர்பினா காத்தூன் என்ற 35 வயது பெண்மணி மனிதாபிமானமற்ற அரசின் அலட்சியத்தால் பசியால் ஒட்டிய வயிறோடு உயிரை […]
சிஏஏ க்கு எதிராகப் போராடியதாக அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது ..
உபி : அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சமூகசெயல்பாட்டிற்கான படிப்பில் முதுநிலை இறுதியாண்டு பயிலும் ஃபர்ஹான் ஜூபேரி, அதே துறையில் இளநிலை பயிலும் ரவிஷ் அலிகான் என்ற இரு மாணவர்கள் CAA-வுக்கு எதிராகப் போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 28 ஆம் தேதி வியாழக்கிழமை உ.பி போலீஸால் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்ட ரவிஷ் அலிகான் பிறகு விடுவிக்கப்பட்டாலும், பர்ஹான் சிறையில் அடைக்கப்பட்டார். ஊரடங்கில் கைது வேட்டை: கொரோனாவுக்காக நான்காம் கட்ட ஊரடங்கை நாடு எதிர்கொண்டுள்ள […]
‘இது குஜராத். உன்னை சுட்டு கொன்றால் எனக்கு பதவி உயர்வு தான் கிடைக்கும்’ – வழக்கறிஞர் பிலாலை மிரட்டிய போலீஸ்!
குஜராத் மாநிலத்தில் உள்ள கொசம்பா என்ற ஊரில் பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான FIR நகல் வேண்டும் எனக் கோரியதற்காக அக்காவல் நிலைய ஆய்வாளர் வழக்கறிஞர் பிலாலை லாக்-அப்பில் 8 மணி நேரம் அடைத்து வைத்துள்ளார். பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் கொசம்பா காவல்நிலையம் சென்று புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டாலும், மறுநாள் வந்து FIR நகல் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் […]
கள்ளக் காதலியைக் காணச் சென்று காலை உடைத்துக் கொண்ட பா.ஜ.க பிரமுகர்!
51 வயதான சந்தர் பிரகாஷ் கதூரியா ஹரியானா பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர். அம்மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், கர்னால் தொகுதியில் கடந்த 2019 ஆம் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகவும் போட்டியிட்டவர் கதூரியா. கடந்த வெள்ளியன்று சண்டிகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணைக் காண சென்றுள்ளார் கதூரியா. அப்போது வீட்டில் திடீரென காலிங் பெல் ஒலிக்கவே, ஒரு துணியை கொண்டு இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து தப்பிக்க முயன்ற போது, […]
பாதாளச் சிறையை விட மோசமான நிலையில் குஜராத் பொது மருத்துவமனை: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
குஜராத்: கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக செயற்கையாக சித்தரிப்பதாகவும், கொரோனா சிகிச்சைக்கென மாநிலத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையான அஹமதாபாத் பொது மருத்துவமனை பாதாளச் சிறையை விட மோசமான நிலையில் இருப்பதாகவும் அம்மாநில அரசின் மீது குஜராத் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வரை குஜராத்தில் கொரானாவால் ஏற்பட்ட மொத்த மரணங்களில் 45% , அதாவது 377 மரணங்கள் அஹமதாபாத் மருத்துவமனையிலே தான் நடந்துள்ளன. நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஐலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ” […]
அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை நிறுத்த போராட்டங்கள் கூடாது – உபி முதல்வர் உத்தரவு ..
அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் (ESMA)-வை நிறைவேற்றியதன் மூலம் அரசு நிறுவனங்களும், துறைகளும் ஆறு மாத காலத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில பாஜக அரசு. இதை மீறுவோரை வாரண்ட் இல்லாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களின் ஒப்புதலோடு, கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் அவர்களால் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு கடந்த மாதம் […]
இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சீனா; நடவடிக்கை எடுக்குமா மோடி அரசு ?
சிக்கிம் மற்றும் லடாக் எல்லை பகுதிகளில் சீனா அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் லடாக்கின் வடக்கு பாங்கோங் த்சோ பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தியா சாலை பணிகளில் ஈடுபட்டிருந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இன்னொரு பக்கம் கடந்த சனிக்கிழமை வடக்கு சிக்கிமின் நாகூலா பகுதியில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு காயமடைந்தனர். அன்று முதல் எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி […]
டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.க அஞ்சாது, ஆர்.எஸ். பாரதி கைது குறித்து ஸ்டாலின் கருத்து ..
திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இன்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர்கள் நீதிபதி ஆக முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சையில் தான் என்ற கருத்துப்பட பேசி இருந்தார். இது சர்ச்சை ஆனதை அடுத்து அதற்கு வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அவர் […]
தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி…
சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23.5.2020 (நாளை) முதல் (தினமும் காலை 7 மணி முதல் […]