உபி, ஃபிரோஸாபாத் நகரை சேர்ந்தவர் 20 வயதுப்பெண் அஸ்ரா, இவர் தருண் என்கிற இந்து இளைஞனோடு காதல் வயப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக தருண் கூறி வருகிறார். தருணின் தொடர் சித்திரவதைகளை தாங்கி கொள்ள முடியாமல் பெற்றோரிடம் செல்ல விரும்பி உள்ளார் அஸ்ரா, எனினும் தருண் அஸ்ராவை விட மறுத்து பிரச்சனை செய்யவே. பெண்ணின் குடும்பத்தார் மாயின்பூர் நீதிமன்றத்தை நாடினர்.
நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட போது அஸ்ரா ஒரு மேஜர் எனவும், அவரது முடிவினை அவரே எடுத்துக்கொள்ளலாம், மேலும் தற்போதுள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தருணுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை அனுப்பி வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
அஸ்ரா தன் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்து தருணை தாம் பிரிய வேண்டிய காரணத்தையும் குறிப்பிட்டு இன்வஸ்டிகேட் ஆபிசருக்கு எழுதி கொடுத்துவிட்டார், இது நடந்தது பிப்ரவரி 12.
ஆனால் இதுவரை தன் தங்கையை ஒப்படைக்க மறுத்துவரும் தருண் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளதை குறித்து புகாரளிக்க வந்த அஸ்ராவின் அண்ணன் முகம்மது ஆமில் கூறியதாவது..
அஸ்ராவை கட்டாயபட்டுத்தி மதமாற்றம் செய்து, அவரது பெயரை மாற்றியுள்ளார் தருண், மேலும் அஸ்ராவுக்கு விருப்பமில்லாத காரியங்களை செய்ய வைத்து, அடித்து உதைத்து சித்தரவதை செய்வதாகவும், இதை தன் தங்கை தங்களிடம் கூறிய காரணத்தால் தான் அவளை மீட்க நீதிமன்றம் வந்தோம்.
நீதிமன்றத்திலும் அஸ்ரா மேஜர் என கூறி முடிவினை அவளே எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிகப்பட்டு, அஸ்ரா பெற்றோருடன் வர சம்மதம் தெரிவித்து எழுதிகொடுத்த பின்னர், பெற்றோருடன் செல்ல அஸ்ராவுக்கு உரிமை வழங்கப்பட்டது.ஆனால் பெண்ணோ இதுவரை பெற்றோரிடம் அனுப்பப்பட வில்லை.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் தருண் பக்கமே பேசுவதாகவும் அதில் சில காவலர்கள் தம்மை இதைவிட்டு விலகி கொள்ளாவிட்டால் சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டல் விடுப்பதாகவும் சகோதரர் ஆமில் வேதனை தெரிவிக்கிறார்.
அஸ்ராவும் தருணும் இருக்கும் இடத்தையும் ரகசியமாக வைத்துள்ளார்கள் எனவே யாராலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணை காப்பாற்ற முடியாமல் உள்ளது.
இந்துத்துவா வினர் இல்லாத லவ் ஜிஹாத் உள்ளதாக கூறி சட்டங்களை இயற்றி வருகின்றனர். ஆனால் உண்மையில் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்பவர்கள் பாசிஸ வெறிப்பிடித்தவர்களே என்று விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பெண் விடுக்கப்படாமல் போலீசாரும் குற்றவாளிக்கு துணை போகும் அவலம் உபி யில் மட்டுமே நிகழ முடியும் என்றே தெரிகிறது.