புதுடில்லி நிஜாமுதீன் மர்கஸில் தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பெலகாவியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டு, அவர்கள் மீது எச்சில் துப்புகிறார்கள் என்று பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தினர் சுகாதார ஊழியர்களுடன் தவறாக நடந்து கொள்ளவோ அல்லது அவர்கள் மீது எச்சில் துப்பவோ இல்லை என பெலகாவி துணை ஆணையர் எஸ்.பி.போமனஹள்ளி, பாஜக எம்.பி யின் பொய்யான வெறுப்பு பிரச்சாரத்துக்கு பதில் அளித்துள்ளார்.
“பெலகாவியைச் சேர்ந்த 70 பேர் நிஜாமுதீன் மர்க்கஸில் கலந்து கொண்டனர், அவர்களில் 8 பேருக்கு கொரோனா உள்ளது, மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில், தப்லிகிகள் சுகாதார ஊழியர்களுடன் தவறாக நடந்துகொள்கிறார்கள், எல்லா இடங்களிலும் நடனமாடுகிறார்கள், துப்புகிறார்கள். தப்லிகி ஜமாஅத்தின் நோக்கங்களை தேசம் அறிய விரும்புகிறது! , (sic) ” என பாஜக எம்.போ ஷோபா மேலுள்ள டீவீட்டில் கூறி உள்ளார்.
ஆனால் பெலகாவி மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர் வினய் பாஸ்டிகோப் அளித்த விரிவான பதிலில், மார்ச் மாதம் தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 33 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் கொரோனா நோய் உள்ளவர்கள் 3 பேர் மட்டுமே அவர்கலும் கூட தனிமை படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் விளக்கம் அளித்தார்.
பரவி வரும் வீடியோவை பதிவு செய்தவர்களே தப்லீக் ஜமாத்தினர் தான். எனினும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என கூறப்படுவது உண்மையல்ல. அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் தொடர் கண்கணிப்பில் உவைக்கப்பட்டு ள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு முஸ்லீம் சமூகத்தை குறை கூறக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா எச்சரித்துள்ள நிலையில் ஷோபா இவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியுள்ளார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி நிலவரப்படி பெலகாவியில் ஏழு நபர்களுக்கு கொரோனா நோய் தோற்று உள்ளது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் தப்லிகி ஜமாஅத் மாநாட்டு பங்கேற்பாளர்கள். கர்நாடகாவில் மொத்தம் 163 பேருக்கு கொரோனா நோய் உள்ளது.