Assam BJP Muslims NRC

அஸ்ஸாம் :NRC குடியுரிமையை நிரூபித்த 426 முஸ்லிம் குடும்பத்தினர் வீடுகள் தகர்ப்பு,விரட்டியடிப்பு – பாஜக எம்எல்ஏ அராஜகம் ?

கடந்த டிசம்பர் 6 ம் தேதி அசாமின் பிஷ்வநாத் மாவட்டத்தின் சோட்டியா பகுதியில் உள்ள 426 முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த 1800 பேரை வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் உள்ளூர் நிர்வாகத்தால் இடிக்கப்பட்டுள்ளது.

 1800 நபர்களும் என் ஆர் சி யில் தங்கள் குடியுரிமையை நிரூபித்தவர்கள் , பிறகு ஏன் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்கிறீர்களா? அங்குள்ள மக்கள் யாரும் பாசிச கட்சியாக விமர்சிக்கப்படும் பாஜகவின் எம்எல்ஏ பத்மா ஹசாரிக்கா என்பவருக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கோபமுற்று (இவ்வாறு அயோக்கியத்தனமாக) வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றி விட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத திறந்தவெளியில் 426 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 1800 நபர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த ஏக்கத்துடன் வானத்தை வெறித்து பார்த்தபடி உள்ளனர்…. மேலும் ஒரு நாளுக்கு ஒரு வேலை உணவை மட்டுமே சாப்பிட்டு கொண்டு கடும் குளிரில் அவதிபட்டு வருகின்றனர்.


கடந்த சில தினங்களாக இணையதள வசதியும் துண்டிக்கபட்ட காரணமாக இந்த நரவேட்டை வெளியுலகுக்கு தெரியாமலிருக்க, விஷயத்தை கேள்விப்பட்ட அஸ்ஸாம் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள் காவல்துறை கெடுபிடிகளை மீறி திறந்தவெளி முகாம்களில் உள்ள 426 குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி தைரியமூட்டினர்.

ஜ இ ஹிந்த் சமூக சேவைகள் துறை செயலாளர் மவுலானா முகமது அகமது சாகிப் தலைமையில் சென்ற குழுவினர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குளிர்காலத்தில் அணியும் உடைகள், பிளாங்கெட்கள், போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்..

முகாமில் தங்களுக்கு ஒருவேளை உணவு மட்டுமே தருவதாக கூறி கதறியழுதவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜ இ ஹிந்த் குழுவினர் சட்ட போராட்டங்களை மேற்கொள்வதாக உறுதியளித்து, இறைவன் விரைவில் நல்ல தீர்வினை தருவான் என்று நம்பிக்கையூட்டி திரும்பினர்…

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தை தவிர வேறு எந்த ஒரு சமூக நல அமைப்போ ,மனித உரிமைக்களுக்கான அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ யாருமே இவர்களை இதுவரை சந்திக்கவில்லை. மீடியாக்களும் மத குடியுரிமை போராட்டங்கள் குறித்து செய்தி வெளியிடுவதில் கவனம் செலுத்தியமையால் இந்த மக்களை குறித்து வெளி உலகிற்கு தெரியாமலே போய் விட்டது.

தயவு செய்து இந்த மக்களின் நிலையை ஜமாத்தார்கள்,, அரசியல் கட்சிகள் என அனைவர்க்கும் அறிய செய்து அந்த மக்களுக்கு உதவுமாறு நியூஸ் கேப் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

தக்க ஆதாரங்களுடன் மேலும் அறிய