சவுதியில் வேலை பார்த்து கொண்டு “அடுத்த ராமர் கோவில் மெக்காவில்” என பேஸ்புக்கில் பதிவிட்டு சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட மோடி பக்தராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் கர்நாடகாவின் ஹரிஷ் பங்கேராவின் மனைவி சுமனா, தனது கணவரின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கிலிருந்து செய்தி வெளியிடப்பட்டதாக பகீர் தகவல் தெரிவித்துள்ளார். சிக்கலைத் தவிர்ப்பதற்காக தான் மன்னிப்பு வீடியோவை வெளியிடுமாறு ஹரிஷுக்கு தான் அறிவுறுத்தியதாக சுமனா மேலும் கூறினார்.
எனினும் ஹரிஷ் மனைவி கூறுவது பொய், பதிவு பேக் அக்கவுண்டில் இருந்து போடப்பட்டிருக்குமானால் அது எனது ஐடி இல்லை என்று ஹரிஷ் கூறி இருப்பாரே தவிர, தான் செய்ததை ஒப்பு கொண்டு மன்னிப்பு வீடியோ போட்டிருக்க மாட்டார் என சமூக வலைதளவாசிகள் மறுப்பு கருத்து கூறி வருகின்றனர்.