Hindutva Indian Judiciary Lynchings

‘தப்ரேஸ் அன்சாரியை கொன்றவர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி சாகும் வரை உண்ணா விரதம்!’ – தப்ரெஸ் மனைவி ஷஹிஸ்டா பர்வீன்

இவர் தான் ஷஹிஸ்டா பர்வீன். ஜார்கண்டில் கடந்த ஜூன் மாதம் காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்யப்பட்ட தப்ரெஸ் அன்சாரியின் மனைவி.

“என் கணவரை கொலை செய்தவர்களை கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவு 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து விடுவேன்.என் கணவர் எப்படி மரணித்தார் என்று இந்த முழு உலகத்திற்கும் தெரியும்.. இருந்தாலும் கூட நிர்வாகத்தில் யாரும் எங்களுடன் துணை நிற்கத் தயாராக இல்லை.” என்று தெரிவித்துள்ளார்

மத வெறியர்களின் கும்பல் வன்முரை தாக்குதலுக்கு பலியான தப்ரெஸ் அன்சாரியின் மனைவி ஷஹிஸ்டா தன் கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல்களையும், கணவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் குழுவினரின் அறிக்கைகளையும் தனக்கு வழங்காவிட்டால், சாகும் வரை உண்ணா விரதம் இருக்க போவதாக திங்களன்று (17-9-2019) அறிவித்துள்ளார்.

சகோதரி ஷஹிஸ்டா மற்றும் தப்ரெஸின் மாமா மன்சூர் ஆலம் ஆகியோர் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலைக் கோரி செரைகேலா-கர்சவன் துணை ஆணையர் அஞ்சநேயுலு டோடேவைச் சந்தித்தனர். வழக்கின் முக்கிய ஆவணங்களை கோரி செரைகேலா-கர்சவன் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கையும் சந்தித்தனர்.

நீதிமன்றத்தில் ‘கொலை’ குறித்த உண்மைகளை காவல்துறையினர் தவறாக சித்தரித்ததாகவும், ஐபிசியின் 302 வது பிரிவின் கீழ் மரண தண்டனைக்கு பதிலாக ஐபிசியின் 304 வது பிரிவின் கீழ் தண்டனை கோரப்பட்டதாகவும் ஷஹிஸ்டா தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் 30 அன்று தப்ரெஸின் குடும்பத்தினர்கள் இந்த வழக்கின் முக்கிய ஆவணங்களை நாடி காவல் துறையிடம் கேட்டிருந்தனர், ஆனால் அந்த அறிக்கைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

“வழக்கை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதில் நாங்கள் உறுதியாக உறுதியாக உள்ளோம்.வழக்கை பலவீனப்படுத்தவும் குற்றவாளிகளை விடுவித்திடவும் கூட்டு முயற்சி நடப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இன்றும் கூட காவல் துறையினர், எங்களுக்கு எந்த பதிவு/ஆவணங்களையும் வழங்கவில்லை. நீதிமன்றத்தில் போய் வாங்கிக்கொள்ளுமாறு திருப்பி அனுப்பிவிட்டனர் ”என்று திரு மன்சூர் ஆலம் குற்றம் சாட்டினார்.

செராகேலா சிறை மற்றும் செரைகேலா மாவட்ட தலைமையக மருத்துவமனையில் தனது கணவரை அனுமதித்த போது அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களின் பெயர்ககள் , மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள ஷாஹிஸ்ட விரும்பினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவருக்கு கிடைத்தபாடில்லை.முன்னர் இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறி சிபிஐ விசாரணைக்கு அவர் கோரியிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி அன்று தப்ரேஸ் அன்சாரி  ஒரு கம்பத்தில் கட்டி வைத்து திருடர் பட்டம் சூட்டி .. “ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஹனுமான்” என்று கோஷமிட வற்புறுத்தி தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமாக 7 மணிநேரம் அடித்து துன்புறுத்தினர்.பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தப்ரேஸ் அன்சாரி கடந்த ஜூன் 22ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது