மன்மோஹன் சிங் அவர்களின் பேச்சு எழுத்து வடிவில். .
இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை மிகவும் கவலையளிக்கிறது.. கடந்த காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 5 % தான் உள்ளது .. இது நாம் ஒரு நீண்டகால மந்தநிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது
இந்தியா மிக விரைவான விகிதத்தில் வளரக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள நாடு.. ஆனால் மோடி அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் இந்த மந்தநிலை ஏற்பட்டுள்ளது .
உற்பத்தித் துறைகளில் வளர்ச்சி 0.6 சதவீதமாக தத்தளித்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பாக வருத்தமளிக்கிறது..
மோடி அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு மற்றும் அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றினால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து நமது பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. உள்நாட்டு பொருட்களுக்கான தேவை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் நுகர்வு வளர்ச்சி விகிதம் 18 மாதங்களில் மிக குறைவான நிலையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 15 ஆண்டுகளில் மிகக் குறைவு…
வரி வருவாயில் பெரும் இடைவெளி உள்ளது. சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் வேட்டையாடப்படுவதும் வரி பயங்கரவாதமும் தடையின்றி தொடர்ந்து கொண்டுள்ளது.
முதலீட்டாளர்களின் பார்வையில் மந்த நிலை தொடர்கிறது. இந்த அறிகுறிகள் எல்லாம் பொருளாதார மீட்சிக்கான அடித்தளங்கள் இல்லை . மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் பெரும் அளவிற்கான வேலை இழப்பிற்கு காரணமாகி உள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் மட்டுமே 3.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இதேபோல் முறைசாரா துறைகளிலும் பெரிய அளவிலான வேலை இழப்புகள் ஏற்படும் . இது ஏற்கனவே நலிவு நிலையில் உள்ள நம் நாட்டின் தொழிலாளர்களை பாதிக்கும்.
இந்திய கிராமப்புறங்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. நம் விவசாயிகள் உற்பத்திக்கான போதுமான விலைகளைப் பெருவதில்லை, கிராமப்புற வருமானம் குறைந்துள்ளது. மோடி அரசாங்கம் காட்ட விரும்பும் குறைந்த பணவீக்க விகிதம் இந்தியாவின் மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது விவசாயிகள் மற்றும் அவர்களின் வருமானத்தின் விலையில் வருகிறது.
நிறுவனங்கள் அரசாங்க அழுத்தங்களுக்கு உள்ளாகி அவற்றின் சுயாட்சி முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது.. 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மாற்றப்பட்டதால் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு ஒரு மிக பெரும் சோதனை. . இத்துணை பெரும் தொகையை ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்று கொண்டு பணத்தை என்ன செய்வது என்பது குறித்து எந்த திட்டமும் இல்லை என்று அரசு கூறுகிறது.
கூடுதலாக, இந்தியாவின் தரவுகளின் நம்பகத்தன்மை இந்த அரசாங்கத்தின் கீழ் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பு மற்றும் பின்னடைவுகள் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உலுக்கியுள்ளன. புவி அரசியல் மறுசீரமைப்பு காரணமாக உலகளாவிய வர்த்தகத்தில் எழுந்துள்ள வாய்ப்புகளைப் சிறந்த முறையில் பயன்படுத்தி இந்தியாவால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியவில்லை.
இதுதான் மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் பொருளாதார நிர்வாகத்தின் நிலை. எங்கள் இளைஞர்கள் எங்கள் விவசாயிகள் மற்றும் எங்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள்.. தொழில்முனைவோர்.. ஏழை தொழிலாளர்கள் ஆகியோர் இதைவிட சிறந்ததை பெற தகுதியுடையவர்கள். இதே பாதையில் இந்திய பயணிப்பது அழிவிற்கு வழிவகுக்கும் . ஆகவே, பழிவாங்கும் அரசியல் நடைமுறையை ஒதுக்கி வைத்துவிட்டு, மோடி அரசாங்க முடிவுகளால் உருவாக்கப்பட்ட இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறிட இந்தியாவின் அனைத்து அனைத்து விவேக குரல்களையும்.. சிந்தனை வலிமையையும் … பயன்படுத்துமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.