Lynchings Rajasthan States News

காட்டுத்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லுகான் மற்றும் அவரின் மகன்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காங்கிரஸ் அரசாங்கம்

Date: 29/6/2019 2:05 pm

கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் தேதி 55 வயதான பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் பயங்கரவாதிகளால்  பசுக்களை கடத்தி செல்வதாக பொய்யாக பரப்பி    காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைத்தனர். இதில் பெஹலு கான் அடுத்த 2 நாட்களில் இறந்து போனார். கடுமையான காயங்களுடன்அவரின் மகன்கள் உயிர் பிழைத்தனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாதிப்புக்கு ஆளான பெஹ்லுகான் மற்றும் அவருடைய மகன்கள் மீதே போலீசார் புதிய குற்றபத்திரிக்கை தாக்கல்செய்துள்ளனர்

.

பெஹ்லு கானின் குடும்பத்தினர்  Photo credit: PTI

பெஹ்லு கானும் அவரது இரண்டு மகன்களும் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில்  கால்நடை சந்தையில் வாங்கிய மாடுகளை விற்க ஹரியானாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங் தாள் இந்துத்துவ வாதிகளால்  தடுத்து நிறுத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டனர்.  பெஹ்லு கான் கழுத்தில் கடுமையாக தாக்கப்பட்டு , இரத்த கரையுடன் தரையில் வீசப்பட்டு உதைக்கப்படும் செல் போன் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு  காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலக அளவில் இந்தியாவிற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.

alwar lynching

Pehlu Khan’s mother (R). Credit: Murali Krishnan

முஸ்லிம்கள் விஷயத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஒன்றே என்று உணர்த்திய தருணம் இது:

இந்த வழக்கில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் போது  இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டன – ஒன்று பால் பண்ணை விவசாயியை கொலை செய்ததாகக் கூறப்படும் எட்டு பேருக்கு எதிரானது, மற்றொன்று மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி கால்நடைகளை கொண்டு சென்றதாக அவருக்கும் அவரது மகன்களுக்கும் எதிரானது.

சமீபத்திய குற்றப்பத்திரிகையை இரண்டாவது எஃப்.ஐ.ஆரில் ராஜஸ்தான் அரசு தாக்கல் செய்தது. இதில் ஏற்கனவே நீதி கிடைக்காமல் தவித்து வரும் பெஹ்லு கான் மற்றும் அவரது குடும்பத்தார் மீதே  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பட்டுள்ளது குறித்து பலராலும் கடுமையாக விமர்சிக்கபட்டு வருகிறது.

 பெஹ்லு கான் இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு மூடப்படும் என்றும் , ஆனால் அதே சமயம் அவரது மகன்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பசு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெஹ்லு கான் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

pehlu khan lynching

பெஹ்லு கான் பெயர் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை .

Photo credit: NDTV

ஆனால் பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள்  “ரவானா”  என்று அழைக்கபடும் முறையான முனிசிபல் கார்ப்பரேசன் சீட்டு மற்றும் வரி செலுத்தியதற்கான ஆவணங்களை வைத்து இருந்தனர். ஆனாலும் அவர்கள் மீதே பாஜக அரசின் போது FIR தொடுக்கப்பட்டது, ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் தங்களுக்கு நீதி மட்டும் கிடைக்க வில்லை என்று கூறுகின்றனர் பெஹ்லு கானின் குடும்பத்தார்.

பெஹ்லு கான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் சிறிது காலம் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் வெளி வந்துவிட்டனர். அவர்களில் இருவர் ஓடிவிட்டனர், எங்கு உள்ளனர் என்று யாருக்கும் தெரியாது. மேலும் இது தவிர மரண வாக்கு மூலமாக பெஹ்லு கான் தெரிவித்த 6 பேர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

pehlu-khan-home

Pehlu Khan’s home in Nuh. Credit: Special arrangment

தாக்கப்பட்டபோது அவருடன் இருந்த பெஹ்லு கானின் மகன் இர்ஷாத் கான், ஏப்ரல் 2017 இல் என்.டி.டி.வி (NDTV ) யிடம், “நான் என் தந்தையுடன் இருந்தேன்; ஒரு கும்பல்  முதலில் எங்களை நிறுத்தினர் பின்னர் எங்களை அடிக்கத் தொடங்கினர். “

“நாங்கள் அவர்களுக்கு ஆவணங்களைக் காட்டினோம் (அவை மாடுகளை கடத்தவில்லை என்பதை நிரூபிக்க), ஆனால் அவர்கள்  அவற்றைக் கிழித்து எங்களைத் தாக்க ஆரம்பித்தனர்” என்று இர்ஷாத் கான் கூறியிருந்தார். “அவர்கள் என் தந்தையை எனக்கு முன்னால் கொன்றார்கள்; நான் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை” என்று அவர் கூறியிருந்தார்.