Amit Shah

மே. வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை காக்க சிறப்பு படை குழுவை அமைப்போம் – அமித் ஷா ..

மேற்கு வங்கத்தில் டி.எம்.சி அரசாங்கம் “ஊழல் மற்றும் சிண்டிகேட் கலாச்சாரத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார், பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆம்பான் நிவாரண நிதி ஊழல் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்போம் என கூறினார்.

பாஜகவின் ‘பரிவர்த்தன் யாத்திரை’ முதலமைச்சர், எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் என எவரையும் மாற்றுவதற்காக அல்ல, மாறாக பிற நாட்டவர் சட்டவிரோதமாக நம் நாட்டினுள் ஊடுருவுவதை முடிவுக்குக் கொண்டு வந்து மேற்கு வங்கத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதற்காகவே என ஷா கூறினார். “இது வங்காளத்தை” சோனார் பங்களா “(கோல்டன் பெங்கால்) ஆக்குவதற்கான பாஜகவின் போராட்டமாகும்.” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அமித் ஷா, வங்காளத்தில் எங்களை ஆட்சியில் அமர்த்தினால் சூறாவளிகள், சுற்றுச்சூழல் பேரழிவுகளிலிருந்து உயிரைக் காப்பாற்ற சிறப்பு (டாஸ்க் போர்ஸ் ) படையினர் அடங்கிய குழுவை அமைப்போம் என பேசினார்.

தற்போது , மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டும், உள்துறை அமைச்சராக இருந்து கொண்டும் கூட அமித் ஷா இவ்வாறு பேசியதற்கு சமுக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது, எனினும் தொலைக்காட்சி ஊடகங்களில் பெரும்பான்மையானவை கோதி மீடியாவாக உள்ளதால் இந்த செய்தியை தக்க முக்கியத்துவத்துடன் வெளியிடவில்லை.