ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மா தன்னை மெட்டல் ராடால் (உலோகத்தாலான ராடு) மற்றும் துடைப்பத்தால் தாக்கி, கழுத்தை நெரித்ததாகவும் பாதிக்கப்பட்ட தலித் சமூக மாணவர் தெரிவித்துள்ளார். ‘பள்ளியின் மற்ற ஊழியர்கள் சிறுவனை மீட்டனர்’ என போலீசார் தெரிவித்தனர்.
பல்லியா (உத்தரப்பிரதேசம்): தனது மோட்டார் சைக்கிளைத் தொட்டதற்காக, தலித் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது ஆசிரியரால் உலோகக் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
கிருஷ்ண மோகன் சர்மா என்ற ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போலீஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் நாக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரணௌபூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
“ஆறாம் வகுப்பு சிறுவன் தனது ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவின் மோட்டார் சைக்கிளை தொட்டதால், ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவரை முதலில் வகுப்பறையில் அடைத்து வைத்தார். ஷர்மா தன்னை உலோக கம்பி மற்றும் துடைப்பத்தால் தாக்கியதாகவும், கழுத்தை நெரித்ததாகவும் பாதிக்கப்பட்ட தலித் சமூக மாணவர் கூறியுள்ளார். பள்ளியின் மற்ற ஊழியர்கள் சிறுவனை மீட்டனர் என்று நாக்ரா காவல் நிலைய எஸ்.ஹெச்.ஓ தேவேந்திர நாத் துபே தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் குடும்பத்தினர் சனிக்கிழமை பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுதி கல்வி அதிகாரி (BEO) SHO உடன் பள்ளிக்கு வந்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மாணவரின் குடும்பத்தாரிடம் உறுதியளித்தார்.
“பிஇஓவின் அறிக்கையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என அடிப்படை கல்வி அதிகாரி (பிஎஸ்ஏ) மணிராம் சிங் கூறினார்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எஸ்எச்ஓ தெரிவித்தார்.
( பிடிஐ )