உபி மாநில முதல்வரும் கோவில் தலைமை பூசாரியுமான யோகி தலைமையிலான போலீசார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர வன்மங்களை அரங்கேற்றி வருவது குறித்து பல்வேறு இணையவழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்காக உபியில் உள்ள ஷம்லிக்குச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான முஸ்லீம் வழக்கறிஞரான முகமது பைசலை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஐபிசி 145,149, 153A, 505 (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பைசலுக்கு எதிராக உ.பி. காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி தொடர் அவதூறு சுமத்தப்படும் (சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட) முஸ்லீம் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பி.எஃப்.ஐ) உறுப்பினராக பைசலை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது, பெரும்பாலும் பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் கேரளா மற்றும் கர்நாடகாவில் காணப்படுகின்றனர்.
“பைசலும் மற்ற மூன்று நபர்களும் வன்முறையைத் தூண்டுவதிலும் ஆட்சேபனைக்குரிய துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதிலும் ஈடுபட்டனர். அவர் ஒரு பி.எஃப்.ஐ உறுப்பினர் என்பதற்கான சான்றாக அவரது தொலைபேசியிலிருந்து தரவுகளையும் நாங்கள் மீட்டெடுத்துள்ளோம், ”என்று ஷாம்லி காவல் நிலைய காவல்துறை அதிகாரி தர்மேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
எனினும் போலீசார் பைசலின் மீது பொய் புகார் அளித்துள்ளனர். பைசல் ஒருபோதும் பி.எஃப்.ஐ இயக்கத்தில் இருந்ததில்லை. இருப்பவரும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ள ஆர்பாட்டக்காரர்களுக்கு உதவ முன்வந்ததால் அவர் மீது அநியாயமாக பொய் வழக்கு சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்று பைசலின் தந்தை தெரிவித்துள்ளார்.
“பைசலை விடுவிக்க உடனடியாக தலையிடக் கோரி டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம், ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கைரானா பார் சங்கத்தை வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர் எனினும் அவர்கள் புறத்தில் இருந்தும் எந்த வித பதிலும் இல்லை என கவலையுடன் தெரிவிக்கிறார் அவரது தந்தை.
காட்டு தர்பார் என யோகியின் ஆட்சியை விமர்சித்தவர்களின் கூற்றுகள் முற்றிலும் உணமையானதே என்றே எண்ண தோன்றுகிறது.