மாநில அரசு ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களை ஒப்படைத்து பணம் பெறும் நடைமுறை ஓராண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் திரு சண்முகம் இன்று வெளியிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், வாரியம், ஆணையங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள்/இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்களுக்கு மிகாமல், பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது வழக்கமாகும்.
தற்போது ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை பணம் பெறாதவர்களுக்கான அனுமதி ஆணையும் ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.