Corona Virus Islamophobia Karnataka

முஸ்லிம்களை போலவே உடை அணிந்து கொரோனா பரப்பிவிடுவோம் என பீதி கிளப்பிய மூவர் கைது ..

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் முஸ்லிம்களே என்பதைப் போன்ற பொய்யான வெறுப்புப் பிரச்சாரத்தை பாசிஸ்டுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பொய்யான செய்திகளை பரப்புவது அரைகுறையாக செய்திகளை பரப்பி வெறுப்பை தூண்டுவது என்று பல்வேறு கீழ்தரமான வேளைகளில் பாசிஸ்டுகள் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது மேலும் வெறுப்பை பரப்ப முஸ்லிம்களை போலவே வேடமிட்டு கரோனா பரப்ப வந்ததை போன்று நாடகமாடிய பாசிஸ்டுகள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம்களைப் போலவே நீண்ட ஆடை, தொப்பியென உடை அணிந்து கொண்டு மூன்று நபர்கள் கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்திலுள்ள காவல்துறை சோதனை சாவடிக்கு சென்று கரோனா பரப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

மேற்சொன்ன நிகழ்வு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்துள்ளது. மகேஷ், அபிஷேக் மற்றும் சீனிவாஸ் ஆகிய அந்த மூன்று நபர்கள் ஆட்டோரிக்ஷா மூலம் டெண்டகேர் சோதனைச் சாவடிக்கு சென்றுள்ளனர் என்று கே.ஆர் பெட் தஹசில்தார் எம் சிவமூர்த்தி பி.டி.ஐ. ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Khush_boozing/status/1251004188848340992

போலீசார் அவர்களை கைது செய்ய முனையும் பொழுது .. “நாங்கள் முஸ்லிம்கள். எங்கள் கையில் தனிமைப்படுத்தலின் சீல் உள்ளது, பார்த்து கொள்ளுங்கள். எங்களை கைது செய்ய நினைத்தால் நாங்கள் வைரசை பரப்பி விடுவோம்” என அந்த இளைஞர்கள் மிரட்டியதாக அதிகாரி ஒருவர் தெிவித்துள்ளார்.

அதன்பிறகு அங்கிருந்து தப்பி ஓடிய மூவரையும் போலீசார் பெல்லகெரே எனுமிடத்தில் கைது செய்தனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்களுக்கு நோயின் எந்த அறிகுறியும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தாசில்தார் சிவமூர்த்தி, “கைது செய்யப்பட்ட மூவரும் இந்துக்களாக இருந்தும் , தங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொண்டது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்காக தான்..கே ஆர் பேட்டுக்கு எந்த முஸ்லிமும் நோயை பரப்பவோ நோய் தொற்றை ஏற்படுத்வோ வரவில்லை என்பதை மக்களுக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். மக்கள் பீதியடைய வேண்டாம் ” எனவும் அவர் கேட்டு கொண்டார்.

குறிப்பு: சம்பவம் நடைபெற்று பத்து நாட்கள் ஆகியும் பெரிய அளவில் மக்கள் இந்த சம்பவத்தை அறிந்து வைக்கவில்லை என்பதால் தாமதமாகி இருந்தும், நாம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளோம்.